முளைக்கட்டிய வெந்தயக்குழம்பு
முளைக்கட்டிய வெந்தயக்குழம்பு மிகவும் நார்சத்து நிறைந்தது.முளைபயிறு வகைகளில் அதிகளவு புரோட்டீன் உள்ளதால் நோயெதிர்ப்பு சக்தி கொண்டது.வளரும் குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்கவேண்டும்.
தே.பொருட்கள்:
முளைக்கட்டிய வெந்தயம் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
புளிகரைசல் - 2 கப்
சின்ன வெங்காயம் - 10
பூண்டுபல் - 5
தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
சாம்பார்பொடி (அ) வத்தக்குழம்பு பொடி - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+நல்லெண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
பெருங்காயத்தூள் - வாசனைக்கு
செய்முறை :
*பூண்டை வெட்டிக்கொள்ளவும்.தேங்காயுடன் சிறிது முளைக்கட்டிய வெந்தயத்தை சேர்த்து மைய அரைக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+பூண்டுப்பல்+முளைக்கட்டிய வெந்தயம்+வத்தக்குழம்பு பொடி+உப்பு சேர்த்து வதக்கவும்.
*பின் புளிகரைசலை சேர்த்து கொதிக்கவிடவும்.
*நன்கு கொதித்ததும் தேங்காய் விழுது சேர்த்து மேலும் கொதிக்கவிடவும்.எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் குழம்பை இறக்கவும்.
*2நாளானலும் இந்த குழம்பு சுவையாக இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
28 பேர் ருசி பார்த்தவர்கள்:
very nice kulampu i will try it , mulai kattiya payiril salad thavira vera enna seiyalamnu sollungapa
Very nice!!!!I do sa like this
எனக்கு ரொம்ப பிடிக்கும் வெந்தயம்
செய்ய சொல்லி சாப்பிடறேன்
நன்றி.
எங்கே போனாலும் இதெல்லாம் விடமாட்டேங்கிறீங்களே!! தமிழ் நாக்கு சுவை ரொம்பக் கேட்கும்!!
பதிவுக்கு பதிவும் ஆச்சி !! ஊட்டுக்கு சமையலும் ஆச்சி !! ஐடியா தூளா, கீதே !!இது மேரி செஞ்சி குட்துட்டு பதிவு போட்டா யாரும் ஒன்னியும் சொல்ல மாட்டாங்க !!
நல்ல ஐடியா தான் !! போட்டோல பாக்கும் போதே தூளா, கீதே !!
//தமிழ் நாக்கு சுவை ரொம்பக் கேட்கும்!!//
கரீக்ட்டு தான் , தேவன் மாயம் அண்ணாத்தே !!
ஒரு விசியம் தெரியுமா ? உலகத்துலயே(சாப்பாட்டு விசியத்துல) நல்லது , கெட்டது- ரெண்டும் கண்டு புட்ச்சது தமிழன் தான் ,
நல்லது - இட்லி ,
கெட்டது - ஊறுகாய் .
Yenna pidicha kuzhambu...superb Menaga..
Hey, never sprouted fenugreek, will definitely try this..looks yummy too..
முளைப்பயிறில் சாலட் தவிர சுண்டல்,குழம்பு,புட்டு என்று செய்து சாப்பிடலாம்.இந்த குழம்பு செய்து பாருங்கள்.நன்றி சாரு அக்கா!!
நன்றி சுஸ்ரீ!!
செய்து சாப்பிடுங்கள்.நான் சொல்வதை விட சாப்பிட்டு பார்த்தால்தான் இதன் ருசி தெரியும்.நன்றி சகோ!!
// தமிழ் நாக்கு சுவை ரொம்பக் கேட்கும்!!//உண்மைதான் நீங்க சொல்வது.ஆசை யாரைவிட்டது.நன்றி மருத்துவரே!!
அண்ணாத்தே ரொம்ப ஈஸிதான்.சாப்பிட்டு பாருங்கள்.
//ஒரு விசியம் தெரியுமா ? உலகத்துலயே(சாப்பாட்டு விசியத்துல) நல்லது , கெட்டது- ரெண்டும் கண்டு புட்ச்சது தமிழன் தான் ,
நல்லது - இட்லி ,
கெட்டது - ஊறுகாய் .//மிக சரியாக சொன்னீங்க.நன்றி அண்ணாத்தே!!
எனக்கும் ரொம்ப பிடித்த குழம்பு இது.நன்றி ப்ரியா!!
முளைகட்டிய வெந்தயத்தில் செய்து பாருங்கள்.நன்றி நிது!!
வெந்தய குழம்பு ரொம்ப பிடிக்கும். முளைக்கட்டி செய்ததில்லை..
nice one kulambu ... I have bookmarked it...
வெந்தயத்தின் பலனைச் போன பதிவில் சொல்லிவிட்டு, வெந்தய குழம்பு ரெசிப்பியும் குடுத்திருக்கிறீர்கள். வீக்கெண்டில் செய்து பார்த்திர வேண்டியது தான்..நன்றி.
யாருங்க அது மேனகா கிட்டே போன பதிவுல செட்டிநாட்டு காரக் குழம்பு கேட்டது... வந்து வெந்தக்குழம்பு இருக்கு ..மனைவிகிட்டே காண்பித்து செய்து தரச்சொல்லி சாப்பிடுங்க...
will definitely try this
வெந்தயக்குழம்பு என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.இப்பொழுதுதான் ரெசிப்பி பார்க்கிறேன்.நல்ல சத்தும் கூட,நன்றி மேனகா!
வெந்தய குழம்பு ரொம்ப அருமையா இருக்கு, நல்ல மருத்துவ குழம்பும், முளைகட்டி செய்ததில்லை, இரவு ஊறவைத்து காலையி அதை மீன் குழம்புடன் சேர்த்து செய்து இருக்கேன். இப்ப உடனே ஊறவைத்து கட்டி வைத்துள்ளேன். செய்து பார்க்கிறேன்.
முளைகட்டி செய்து பாருங்கள்.நன்றி சிநேகிதி!!
நன்றி பவித்ரா!!
வீக்கெண்டில் செய்து பார்த்து சொல்லுங்கள்.நன்றி சகோ!!
நம்ம பதிவர் சிங்கக்குட்டி கேட்ட ரெசிபி.அவர் இன்னும் இந்த பதிவை பார்க்கலைன்னு நினைக்கிறேன்.நன்றி தேனக்கா!!
செய்து பாருங்கள்.வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி பூங்குழலி!!
செய்து சாப்பிட்டு பாருங்கள்.ரொம்ப ருசியா இருக்கும்.நன்றி ஸாதிகா அக்கா!!
முளைகட்டி செய்து பாருங்கள்.நல்ல சத்தானதும் கூட.மீன் குழம்பில் வெந்தயத்தை ஊறவைத்து போட்டதில்லை.தாளிக்கும் போது சேர்ப்பேன்.நன்றி ஜலிலாக்கா!!
Olá, amiga!
Passei para rever seu cantinho e saber das novidades...
Seu cantinho está cada vez mais apetitoso!... surpreendente...
Um ótimo fim de semana!
Ótimo Carnaval!
Só alegria!...
Beijinhos.
Itabira - Brasil
வெந்தய குழம்பு பார்க்கவே நல்லா இருக்கு. விரைவில் செய்து பார்க்கிறேன்.
செய்து பார்த்து சொல்லுங்கள்.நன்றி கவி!!
வந்துட்டேன்...வந்துட்டேன்...!
என்னை நினைவில் கொண்டு எழுதியமைக்கு மிக்க நன்றி மேனகா, தங்கமணிக்கு காட்டிவிட்டேன் எப்படியும் நாளை எனக்கு கிடைத்து விடும்.
விட்டுப்போன இடுகைகளை ஒவ்வொன்றாக படித்துக்கொண்டு இருக்கிறேன் அதனால்தான் புதிய இடுகை எழுத கூட நேரம் இல்லை. (அடுத்த வரியை மட்டும் சிவாஜி பாணியில் படிங்க.)
என்னமா...என்ன பண்றது... குடும்பம் பெருசாகிவிட்டது நேரம் குறைவாகிவிட்டது :-).
நாளை செய்து பார்த்து சொல்லுங்கள்.நேரமிருக்கும் போது ஒவ்வொன்றாக பாருங்கள்.நன்றி சிங்கக்குட்டி!!
Post a Comment