Tuesday, 23 March 2010 | By: Menaga Sathia

வல்லாரை கீரை தண்ணிசாறு


இந்த தண்ணிசாறு வாய்ப்புண்ணுக்கு மிகவும் நல்லது.இதே போல் முருங்கைக்கீரை,மணத்தக்காளிக்கீரை மற்றும் அகத்திகீரையிலும் செய்யலாம்.இதனுடன் இறால் சேர்த்தும் செய்யலாம்.

தே.பொருட்கள்:

வல்லாரைகீரை - 1 கட்டு
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த தக்காளி - 1
கீறிய பச்சை மிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
புளிகரைசல் - 1/4 கப்
அரிசி கழுவிய தண்ணீர் - 2 கப்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
வடகம் - 3/4 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

*பாத்திரத்தில் கீரை+வெங்காய்ம்+தக்காளி+பச்சை மிளகாய்+மிளகாய்த்தூள்+அரிசி கழுவிய தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

*நன்கு கொதித்ததும் புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.

*தேங்காயை மைய அரைத்துக்கொண்டு,குழம்பு நன்கு கொதித்ததும் தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

*பின் வடகத்தை தாளித்து கொட்டவும்.
 
பி.கு:
அரிசி கழுவிய 3ம் தண்ணீர் எடுத்து செய்யனும்.அதில் ஏராளமான சத்துக்கள் உள்ளது.இறால் சேர்க்கும் போது வெங்காயம்+தக்காளியெல்லாம் வதக்கி கீரை+இறால் சேர்த்து வதக்கி மேற்சொன்னபடி செய்யவேண்டும்.தாளிப்பை கடைசியில்தான் சேர்க்கவும்.அப்போழுதுதான் நல்ல வாசனையாக இருக்கும்.

24 பேர் ருசி பார்த்தவர்கள்:

பனித்துளி சங்கர் said...

அய்யா நான்தான் பர்ஸ்ட் .

பனித்துளி சங்கர் said...

நீங்கள் எழுதும் ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது . இன்னும் இதைப்பொன்று சிறந்த பதிவுகளை எதிர்பார்க்கிறேன் .

பகிர்வுக்கு நன்றி !

kavisiva said...

ரெசிப்பி பார்க்கும் போதே நல்லாருக்கு. ஆனா இந்த கீரை வகைகள் எதுவும் இங்கு கிடைக்காது. அடுத்த முறை சிங்கப்பூர் செல்லும் போது வாங்கிட்டு வந்து செய்யணும்

Menaga Sathia said...

ஆமாம் இன்று நீங்கள்தான் பர்ஸ்ட்.முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சங்கர்!!


நன்றாகயிருக்கும் கவி.நான் குறிப்பிட்டிருக்கும் ஏதாவது ஒரு கீரை கிடைத்தால் சமைத்து பாருங்கள்.நன்றி கவி!!

Asiya Omar said...

பெயரே வித்தியாசமாக இருக்கே.செய்து பார்ர்க்கணும் மேனு.

Chitra said...

வல்லாரை கீரைக்கு ஆங்கிலத்தில் என்ன பெயர் என்று தெரியவில்லை. இங்கு கிடைக்குமா என்று பார்க்க வேண்டும். Recipe and photo look nice. Thank you.

Priya said...

"வல்லாரை கீரை தண்ணிசாறு"........பார்க்கும் போதே நல்லாருக்கு!

//Chitra said...
வல்லாரை கீரைக்கு ஆங்கிலத்தில் என்ன பெயர் என்று தெரியவில்லை//...
வல்லாரை கீரைக்கு ஆங்கிலத்தில் Pennywort!

நட்புடன் ஜமால் said...

வல்லாரை சிங்கையில் கிடைக்குது கவிசிவா.

----------

இறால் சேர்த்தா வாய்ப்புண்ணுக்கு நல்லதா!

Nithu Bala said...

Vallarai thanni charu roombha nalla irukku..amma manathakkali-la pannuvangha...

PriyaRaj said...

thani saaru romba nalla eruku pa..pls collect ur award from my blog

மனோ சாமிநாதன் said...

அன்பு மேனகா!

வல்லாரைக்கீரை தண்ணி சாறு பார்ப்பதற்கு அழகாகவும் மிகவும் வித்தியாசமான குறிப்பாகவும் இருக்கிறது. பொதுவாக தண்ணி சாறு என்பது மணத்தக்காளி, அகத்திக்கீரையில்தான் செய்வது வழக்கம். இது புதுமையாக இருக்கிறது. இதுபோல இன்னும் வித்தியாசமான குறிப்புகளை கொடுங்கள், மேனகா!

Thenammai Lakshmanan said...

காரம் கொஞ்சம் கம்மி பண்ணலாம்னு நினைக்கிறேன் மேனகா...

பார்க்க்க அருமை நல்ல நல்ல ரெசிபீஸா போடுறம்மா

வாழ்த்துக்கள் டா...!1

பித்தனின் வாக்கு said...

நல்லா இருக்குங்க. இதை கீரைக் கூட்டுன்னு சொல்லாமா?. படங்கள் மிக அருமை.

Priya Suresh said...

Thanni saaru superaa irruku menaga, naan kudave konjam eral serupen, kasapu pidikathu yen pasangaluku..

Menaga Sathia said...

செய்து பாருங்கள்.இறால் விரும்புபவர்கள் சேர்த்து செய்தால் இன்னும் நல்லாயிருக்கும்.நன்றி ஆசியாக்கா!!

நன்றி சித்ரா!!உங்களின் கேள்விக்கு ப்ரியா பதில் கொடுத்துள்ளார்...

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!! சித்ராவால் இந்த கீரையின் ஆங்கிலப்பெயர் தெரிந்துக் கொண்டேன்.மீண்டும் நன்றி உங்களுக்கு..


இந்த தண்ணிசாறு செய்து சாப்பிடுவது வாய்ப்புண்ணுக்கு நல்லது.நன்றி சகோ!!

Menaga Sathia said...

நன்றி நிதுபாலா!!


விருதுக்கும்,கருத்துக்கும் நன்றி ப்ரியாராஜ்!!

Menaga Sathia said...

மனோ அம்மா தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.எங்கம்மா வல்லாரை,முருங்கை கீரையிலும் செய்வாங்க...

காரம் சரியாக இருக்கும் அக்கா,தேங்காய் வேறு சேர்க்கிறோம் அல்லவா..இருந்தாலும் அக்கா சொன்னா மறுப்பேது...குறைத்துக்கலாம்.நன்றி தேனக்கா!!

Menaga Sathia said...

கீரைகூட்டுன்னா பருப்பு சேர்ப்போமே.அதனால் இது அந்த லிஸ்ட்ல வராது.நன்றி சகோ!!

நான் எப்பவாவதுதான் இறால் சேர்த்து செய்வேன்.ஏன்னா எனக்கு இறால் பிடிக்காது.இதுவரை சாப்பிட்டதில்லை.நன்றி ப்ரியா!!

geetha said...

மேனு!
என் அம்மா வீட்டிலும், மாமியார் வீட்டிலும் கீரையில் எப்பவும் புளி சேர்க்க மாட்டோம்.
ஆனா, இது நல்ல குறிப்பாய் இருக்கு. அதனால் கண்டிப்பாய் செய்து பார்க்கனும்.

Jaleela Kamal said...

வல்லாரை தண்ணீ சாறு ஈசியான குறிப்பு

நாங்களும் வாய் புண் உள்ளவர்களுக்கு மணத்தாக்காளி கீரையில் இது போல் தண்ணீ சாறூ வைத்து கொடுப்போம்.

வல்லாரைக்கு ஆங்கிலத்தில் என்ன பெயர், எங்களுக்கு இங்கு இது கிடைககது.

கிரீன் பாலக், ரெடி பாலக், பருப்பு கீரை, வெந்தயக்கீரை,முருங்க்க்கீரை, டில் கீரை தவிர வேறு எதுவும் கிடைப்பதிலலி. இதிலேயே தான் எலலா வகையாகவும் சமைத்து கொள்வது.

Jaleela Kamal said...

வல்லாரை உங்களுக்கு அங்கு கிடைக்கிறது என்றால் நிறைய வாஙக் தினம் அமைத்து உங்க பொண்ணுக்கு கொடுஙக் நல்ல ஞாபக சக்தி அதிகரிக்கரிக்கும்.இப்பவே கொடுத்தீங்கன்னா படிப்பில் நல்ல சுட்டியா இருப்பா

இதில் சாலட் செய்து சாப்பிட்டால் ரொமப் நல்லது அதான் கீரைய தேடி கொன்டு இருக்கேன். ஊரிலிருந்து வ‌ர‌வ‌ழைத்து தான் என் பிள்ளைக‌ளுக்கு கொடுத்தேன்.

பிற‌கு வ‌ல்லாரை பொடி வாங்கி வ‌ந்து ச‌ப்பாத்தியில் சேர்த்து சுட்டு கொடுத்தேன்.

அத‌ன் பிற‌கு வ‌ல்லாரை மிட்டாயே காதி கிராப்ட்டில் இருந்த‌து அதையும் வாங்கி வ‌ந்தேன்.

Menaga Sathia said...

கீரையில் புளி சேர்த்து சமைத்து பாருங்கள்,ருசியாக இருக்கும்.செய்து பார்த்து சொல்லுங்கள்.நன்றி கீதா!!


////Chitra said...
வல்லாரை கீரைக்கு ஆங்கிலத்தில் என்ன பெயர் என்று தெரியவில்லை//...
வல்லாரை கீரைக்கு ஆங்கிலத்தில் Pennywort!ப்ரியா சொன்ன பதில்.நீங்கள் சொல்வதுபோல் செய்கிறேன்.கூடுதலான டிப்ஸ்க்கும்,கருத்துக்கும் நன்றி ஜலிலாக்கா!!

Anonymous said...

very healthy.

01 09 10