Sunday, 11 April 2010 | By: Menaga Sathia

சில்லி இட்லி


சில்லி சிக்கன்,சில்லி பராட்டோ செய்கிறோமே இட்லியில் செய்தால் என்ன என்று தோன்றிய ஐடியா இது.மீதமான இட்லியில் செய்தது...

தே.பொருட்கள்:
இட்லி - 6
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த தக்காளி - 1
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 1
பொடியாக அரிந்த இஞ்சி,பூண்டு - 1டீஸ்பூன்
பொடியாக அரிந்த குடமிளகாய் - 2 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/4 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தூள் - 1/4 டேபிள்ஸ்பூன்
தக்காளி கெட்சப் - 1 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை :
*இட்லியை கட்செய்து முற்சூடு செய்த அவனில் 270 டிகிரியில் 10 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு+வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய்+தூள் வகைகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*நன்கு வதங்கியதும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு பின் சோயா சாஸ்+கெட்சப்+குடமிளகாய்+இட்லி சேர்த்து கிளறி இறக்கவும்.

31 பேர் ருசி பார்த்தவர்கள்:

Jaleela Kamal said...

சில்லி இட்லி ரொம்ப நல்ல இருக்கு

மன்னார்குடி said...

நல்லாயிருக்கு.

பனித்துளி சங்கர் said...

ஆஹா மிகவும் அருமை . இப்பவே செய்து சாப்பிடணும்போல இருக்கு .

பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

ஸாதிகா said...

பார்க்கவே செம அழகா இருக்கே

Nithu Bala said...

roombha tasty ya irukku..nanum pannuven ana konjam vera matiri..seikiram en method post pannaren..

Asiya Omar said...

சில்லி இட்லி பார்க்கவே சூப்பராக இருக்கு,ருசியை கேட்கவும் வேண்டுமோ?

Menaga Sathia said...

நன்றி ஜலிலாக்கா!!

நன்றி சகோ!!

நன்றி சங்கர்!!

நன்றி ஸாதிகா அக்கா!!

Menaga Sathia said...

நன்றி நிதுபாலா!!உங்கள் பதிவையும் போடுங்கள்...

நன்றி ஆசியாக்கா!!

Pavithra Srihari said...

Super chilli idli .. My Husband hates idli but likes anything that starts with chilli . I think its the best way to make him have idly ..Thanks for sharing it with us

kamalabhoopathy said...

Super dish for a change i use to do with slight change.

vanathy said...

looking yummy!!

Unknown said...

Using the oven is a good idea instead of deep frying the idlis and haelthy too..Looks delicious

Meena said...

lovely chilli idli...nalla tamil recipes collection...romba pidichithu!

GEETHA ACHAL said...

சூப்பர்ப்..சில்லி இட்லி...

Kanchana Radhakrishnan said...

சூப்பராக இருக்கு.

Chitra said...

சில்லி இட்லி பார்க்கவே சூப்பரா இருக்கு. :-)

geetha said...

மேனு!
மீதமான இட்லியில் "சூர்யவம்சம்" உப்புமா மட்டுமே செய்திருக்கேன்.
இந்த மாதிரி இனிதான் ட்ரை பண்ணனும்.
பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு.

சசிகுமார் said...

என்னங்க புதுசு புதுசா ஆரம்பிக்கிறீங்க பார்பதற்க்கே நன்றாக உள்ளது அக்கா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சாருஸ்ரீராஜ் said...

பார்கும் போதே சாப்பிட தோணுது உங்க சில்லி இட்லி

Menaga Sathia said...

அனைவருக்கும் இந்த சில்லி இட்லி பிடிக்கும்.செய்து பாருங்கள்.நன்றி பவித்ரா!!

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி கமலா!!

நன்றி வானதி!!

Menaga Sathia said...

எண்ணெயில் பொரிப்பதைவிட அவனில் க்ரில் செய்வது நல்லது.நன்றி ரம்யா!!

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி மீனா!!

நன்றி கீதா!!

நன்றி காஞ்சனா!!

Menaga Sathia said...

நன்றி சித்ரா!!

அதென்ன இட்லி உப்புமாவுக்கு சூர்யவம்சம் உப்புமா ந்னு பட்டப்பெயர் கொடுத்திருக்கிங்க...ஹி..ஹி..இதுவும் நல்லாதான் இருக்கு.இந்த முறையில் செய்து பாருங்கள் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.நன்றி கீதா!!

Menaga Sathia said...

நன்றி சசி!!

நன்றி சாரு அக்கா!!

Priya Suresh said...

Chilli idli looks super delicious!!!

Gita Jaishankar said...

Super da...chili idlis looks so yum...nice clicks :)

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

நன்றி கீதா!!

geetha said...

மேனு!
இட்லி உப்புமா நாம செய்வதுதான். ஆனா, சூர்யவம்சம் படத்தில், தேவயானி அவங்க அப்பா ஜெய்கணேஷ்காக, மீதமான இட்லியில் உப்புமா கிளறி அதனை அவர் பாராட்டுவார்.
அப்பத்திலிருந்து நாங்க இட்லி உப்புமாவை "சூர்யவம்சம்" உப்புமா என்ற அடைமொழியுடன் சொல்வோம்!

Menaga Sathia said...

ஒஹோ இதான் பெயர் காரணமா...ஹி..ஹி...

Unknown said...

presentation is very good

Menaga Sathia said...

நன்றி ஹேமா!!

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

ஆஹா... சில்லி இட்லி... சூப்பரா இருக்குப்பா..

இந்த வீக் எண்ட் செஞ்சிர வேண்டியது தான்... தேங்க்ஸ் பா.. :-)))

01 09 10