இந்த கட்லட்டில் நான் எண்ணெயே சேர்க்காமல் பார்லி,ஒட்ஸில் செய்துள்ளேன்.பார்லி கொஞ்சம் கொழகொழப்பாக இருப்பதால் கட்லட் ஷேப் சரியாக வரவில்லை.நான் ப்ரெட் க்ரம்ஸில் புரட்டாமல் பேக் செய்துள்ளேன்.விருப்பமுள்ளவர்கள் அதில் புரட்டியும் பேக் செய்யலாம்.
தே.பொருட்கள்:
வேகவைத்த பார்லி - 1/4 கப்
பொடித்த ஒட்ஸ் - 1/2 கப்
முருங்கைக்காய் - 2
துருவிய கேரட் - 1 சிறியது
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த புதினா,கொத்தமல்லி - சிறிதளவு
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 1
பொடியாக அரிந்த இஞ்சி - 1/4டீஸ்பூன்
எண்ணெய் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை :
*முருங்கைக்காயை அரிந்து வேகவைத்து சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுக்கவும்.பார்லியை அரைக்கவும்.
*இதனுடன் எண்ணெய் தவிர அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.கலவை தளர்த்தியாக இருந்தால் மேலும் சிறிது பொடித்த ஒட்ஸ் சேர்க்கவும்.
*அவன் டிரேயில் அலுமினியம் பேப்பர் வைத்து 1/4 டீஸ்பூன் எண்ணெய் தடவி மாவை விருப்பமான வடிவங்களில் தட்டி வைக்கவும்.
*அவனை 270 டிகிரிக்கு முற்சூடு செய்து 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.இடையில் கட்லட்டை ஒருபக்கம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விடவும்.
*இந்த கட்லட் மிகவும் நன்றாக இருக்கும்.
தே.பொருட்கள்:
வேகவைத்த பார்லி - 1/4 கப்
பொடித்த ஒட்ஸ் - 1/2 கப்
முருங்கைக்காய் - 2
துருவிய கேரட் - 1 சிறியது
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த புதினா,கொத்தமல்லி - சிறிதளவு
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 1
பொடியாக அரிந்த இஞ்சி - 1/4டீஸ்பூன்
எண்ணெய் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை :
*முருங்கைக்காயை அரிந்து வேகவைத்து சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுக்கவும்.பார்லியை அரைக்கவும்.
*இதனுடன் எண்ணெய் தவிர அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.கலவை தளர்த்தியாக இருந்தால் மேலும் சிறிது பொடித்த ஒட்ஸ் சேர்க்கவும்.
*அவன் டிரேயில் அலுமினியம் பேப்பர் வைத்து 1/4 டீஸ்பூன் எண்ணெய் தடவி மாவை விருப்பமான வடிவங்களில் தட்டி வைக்கவும்.
*அவனை 270 டிகிரிக்கு முற்சூடு செய்து 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.இடையில் கட்லட்டை ஒருபக்கம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விடவும்.
*இந்த கட்லட் மிகவும் நன்றாக இருக்கும்.
27 பேர் ருசி பார்த்தவர்கள்:
looks new. ;)
crispy n tempting...send me the plate dear.
menaga ... you are a cookbook on your way. I have never had cutlet without potato in the first case.This one with barley and oats , added to that drumstick ... excellent . Is it your idea ?
Very unique combo of ingredients! I would have never in my wildest dreams come up with such a combo! Looks fabulous! Kalakkunga!
இதுவரை முறுங்கைகாயில் கட்லெட் செய்ததில்லை, வெரி நைஸ்!மிக்க நன்றி!!!
This seems to be a very healthy cutlet..looks too crisp..yummy too..Thanks for sharing such a wonderful recipe:-)
வித்யாசமான ரெசிபி கலக்குங்க மேனகா.....
நன்றி இமா!!
தட்டோட அப்படியே அனுப்புகிறேன்.நன்றி ஜெய்!!
ஆமாம் பவித்ரா என் கற்பானியில் செய்த கட்லட் தான்.மிகவும் நன்றாக இருந்தது.நன்றி பவித்ரா!!
மிகவும் அருமையாக இருக்கின்றது...Looks crispy...Sure do try it...
புதுவிதமான கட்லெட்!! பார்க்கவே நல்லா இருக்குது மேனகா!!
lovely idea.Though i am not a barley person i love your idea.do visit my blog when you find some time.
Kalakuringa Cutlet..looks really awesome Menaga..
Lovely cutlets so crisp and delicious will try it soon and thanks for sharing Menaga.
very new recipe to me.
பார்லியில் அதுவும் முருங்கக்காய் சேர்த்து ரொம்ப அருமை, என்னை இல்லாமல் எவ்வள்வு வேண்டுமானும் சாப்பிடலாம் இல்லையா
I had pan-friend ones. Adding Barley and oats is new. Baked ones, seem to be the healthier version of it.
Very healthy and delicious cutlets dear..so innovative :)
நன்றி கூல் லஸ்ஸி!!
நன்றி ப்ரியா!!முருங்கைகாயில் செய்தது என்று நாம் சொன்னால்தான் தெரியும்.
நன்றி நிது!!
நன்றி சாரு அக்கா!!
செய்து பாருங்கள்,நன்றாகயிருக்கும்.நன்றி கீதா!!
நன்றி சுகந்தி!!
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஸ்ரீவிஜி!!
நன்றி ப்ரியா!!
செய்து பாருங்கள்,நன்றி கமலா!!
நன்றி வானதி!!
இந்த கட்லட்டை நீங்க சொல்றமாதிரி நிறையவே சாப்பிடலாம்.நன்றி ஜலிலாக்கா!!
அவனில் செய்வதால் எண்ணெய் மிச்சம்.நன்றி சித்ரா!!
நன்றி கீதா!!
very healthy cutlet. can we use barley flour to prepare this cutlet??
congrats on your awards and thank you very much for remembering and sharing them with me menaga..
வித்தியாசமான கட்லெட் போல...
ம்...... சாப்பிட்டு ருசியை சொல்லுறோம்...
ரொம்ப வித்யாசமா இருக்கு.
முருங்கைக கீரை கொஞ்சம் போல (கொத்தமல்லி கணக்காக) சேர்த்துக் கொண்டால் எப்படியிருக்கும்..??
கட்லட் ஓகே. தொட்டுக்க சைட் டிஷ்??
ஆகா கட்லெட் நல்லா இருக்கு, வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும். படம் பார்க்க வாழைப்பூ வடை போல உள்ளது.
வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி பிஎஸ்!! பார்லி மாவும் உபயோகிக்கலாம்.ஆனால் நான் இதுவரை அதை உபயோகித்து நான் செய்ததில்லை.
ருசியும் நன்றாகவே இருக்கும்.நன்றி சகோ!!
முருங்கை கீரையும் சேர்த்தால் இன்னும் நல்லாயிருக்கும்.இந்த ஐடியா எனக்கு தோனவே இல்லையே???? சைட் டிஷ் புதினா சட்னி,கெட்சப் ஒ கே வா...நன்றி சகோ!!
நன்றி சுதா அண்ணா!!
Post a Comment