Saturday, 24 April 2010 | By: Menaga Sathia

ஸ்பைசி ராகி+கினோவா(Quinoa) குக்கீஸ் / Spicy Ragi & Quinoa Cookies


கினோவா(Quinoa) ஒட்ஸ்,பார்லி மாதிரி இதுவும் ஒரு வகை தானியம்.இதனைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கே பார்க்கவும்.
 
தே.பொருட்கள்:

கேழ்வரகு மாவு - 1 கப்
கினோவா(Quinoa) - 1 கப்
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 1
பட்டர்(அறை வெப்பநிலையில்) - 1/2 கப்
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகு,சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்
எள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
தயிர் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
கினோவா தானியத்தின் படம்
செய்முறை :
*கினோவாவை வெறும் கடாயில் வாசனை வறும் வரை வறுக்கவும்.ஆறியதும் அதனுடன் மிளகு,சீரகத்தை சேர்த்து மிக்ஸியில் மாவாக்கவும்.

*ராகியையும் ,கினோவா மாவையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் பட்டரை போட்டு நன்கு கைகளால் மிருதுவாக பிசையவும்.அதனுடன் அரிந்த ப.மிளகாய்+கறிவேப்பிலை+எள்+பெருங்காயத்தூள்+உப்பு அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.

*பின் சிறிது சிறிதாக ராகி+கினோவா மாவுகளை சேர்க்கவும்.தேவையெனில் மட்டும்,மாவு சப்பாத்தி மாவு பதத்திற்க்கு வர தயிர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.

*பிசைந்த மாவினை சிறு உருண்டைகளாக உருட்டி உள்ளங்கையில் வைத்து லேசாக அழுத்தவும் அல்லது குக்கீ கட்டரை வைத்து உபயோகப்படுத்தவும்.

*அவன் டிரேயில் அலுமினியம் பேப்பர் வத்து குக்கீஸ்களை இடைவெளிவைத்து அடுக்கவும்.

*180 டிகிரிக்கு முற்சூடு செய்த அவனில் 20-25 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

பி.கு:
*வெளியில் எடுக்கும் போது வேகாத மாதிரி இருக்கும் ஆறியதும் வெந்து இருக்கும்.

*பேக் செய்யும் போது வாசனை கமகமன்னு இருக்கும்.

16 பேர் ருசி பார்த்தவர்கள்:

Pavithra Elangovan said...

Thats really very very innovative..looks so good and I think the crunchy texture to quinoa give wonderful taste...

Asiya Omar said...

வித்தியாசமாக இருக்கு.

geetha said...

மேனு!
புதுசு, புதுசாய் ரெசிப்பி போட்டு தாக்கறீங்க. கேள்வியேபடாத உணவுப்பொருட்களில் ரெசிப்பியும் கொடுக்கறீங்க!
இந்த தானியத்தினை அட்லீஸ்ட் இங்கு கிடைக்குதான்னாவது செக் பண்ணிடனும்!

infopediaonlinehere said...

wow...interesting article...great cookery tip

Pavithra Srihari said...

oatsku aprom ippo quinoa ... cookies supernga ... very healthy crispy cookies

Priya Suresh said...

Cookies superb Menaga!!!asathuringa ponga!!

Menaga Sathia said...

இந்த குக்கீஸ் மிகவும் அருமையாக இருந்தது.நன்றி பவித்ரா!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி கீதா!! கினோவா எல்லா சூப்பர் மார்க்கெட்களிலும் கிடைக்கும்.எனக்கு இங்கு சோயாபால் செக்‌ஷனில் கிடைக்கும்.

Menaga Sathia said...

நன்றி infopediaonlinehere !!

நன்றி பவித்ரா!!

நன்றி ப்ரியா!!

நட்புடன் ஜமால் said...

ஸ்பைசி என்பதால் எப்படியாவது உள்ளே தள்ளிடலாம் - முயற்சிப்போம்.

Gita Jaishankar said...

Very interesting and healthy cookies dear...looks so crispy and tempting :)

பித்தனின் வாக்கு said...

மேனகா வர வர வித்தியாசமான பதிவுகளாய் போட்டு அசத்துகின்றீர்கள். நல்லா இருக்கு. ஒரு பிளோட் புட்டும், குக்கீஸிம் பார்சல் பிளிஸ்.

Padhu Sankar said...

Very innovative of you. nice recipe

Chitra said...

Another new recipe. :-)

Menaga Sathia said...

நன்றி சகோ!!

நன்றி கீதா!!

நன்றி சுதாண்ணா!! உங்களுக்கு பார்சல் அனுப்பியாச்சு..

நன்றி பது!!

நன்றி சித்ரா!!

GEETHA ACHAL said...

மிகவும் அருமையான குறிப்பு...வித்தியசமான combination...சுப்பர்ப்...

Menaga Sathia said...

நன்றி கீதா!!

01 09 10