Saturday, 26 June 2010 | By: Menaga Sathia

செட்டிநாட்டு மட்டன் பிரியாணி / Chettinad Mutton Biryani

தே.பொருட்கள்:

பாஸ்மதி - 4 கப்
அரிந்த வெங்காயம் - 2
அரிந்த தக்காளி - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
தயிர் - 1/2 கப்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

மட்டனில் வேகவைக்க
மட்டன் - 1/2 கிலோ
வரமிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு

அரைக்க
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 10
சோம்பு - 1 டீஸ்பூன்
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
இஞ்சி - 1 சிறுதுண்டு
புதினா - 1 கைப்பிடி

தாளிக்க:
பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்

செய்முறை :
* குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு மட்டனில் வேக கொடுத்துள்ள பொருட்களைப்போட்டு சிரிது உப்பு+ 1 1/2 கப் நீர் விட்டு 3 விசில் வரை வேக வைக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும்.

*கடாயில் 1 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு அரிசியை 5 நிமிடம் வதக்கி தனியாக வைக்கவும்.வேகவைத்த மட்டனிலிருந்து மட்டனை தனியாகவும்,தண்ணியை அளந்து வைக்கவும்.

*குக்கரில் மீதமுள்ள நெய்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம்+கறிவேப்பிலை+அரைத்த மசாலா+தக்காளி+மட்டன்+தயிர் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*4 கப் அரிசிக்கு 6 கப் தண்ணீர் வைக்கவேண்டும்.மட்டனில் வேகவைத்த நீரின் அளவுடன் மீதி அளவு நீர் விட்டு கொதிக்க விடவும்.உப்பு+புதினா சேர்க்கவும்.

*தண்ணீர் கொதிக்கும் போது அரிசி சேர்த்து ஆவி வந்ததும் வெயிட் போட்டு 10 நிமிடத்தில் இறக்கவும்.

*ஆறியதும் மல்லித்தழை தூவி ராய்த்தாவுடன் பரிமாறவும்.

32 பேர் ருசி பார்த்தவர்கள்:

ஸாதிகா said...

படத்தைப்பார்த்துமே பிரியாணி சாப்பிடும் ஆசை வந்து விட்டதே!

ஸாதிகா said...

ஹை..மீ தி பர்ஸ்ட்.. வடை அனுப்புங்கோ மேனகா.

Menaga Sathia said...

நன்றி ஸாதிகாக்கா!! முதல் கமெண்ட் உங்களுடையதுதான்...வடை உங்களுக்கே...அனுப்பியாச்சு அக்கா...

நட்புடன் ஜமால் said...

சூப்பரா பிரியாணி போட்டு வச்சிருக்கீங்க

வடை கேக்குறாங்களே ...

Shama Nagarajan said...

arumaiyana biriyani...tempting me to grab the plate right now

Umm Mymoonah said...

I was looking for this recipe for a long time, thank you for sharing this Menaga, looks so good.

Chitra said...

I want it right now!!!!!!!!!!!!!!!!!! mmmmmmmmm..... good!

GEETHA ACHAL said...

//சூப்பரா பிரியாணி போட்டு வச்சிருக்கீங்க

வடை கேக்குறாங்களே ..//சரியா சொண்ணீங்க...எனக்காக பதிவு போட்டதற்கு மிகவும் நன்றி...கண்டிப்பாக நாளைக்கு செய்து பார்க்கவேண்டியது...செய்து பார்த்திவிட்டு பின்னுட்டம் அளிக்கிறேன்...நன்றி மேனகா...

Asiya Omar said...

செமையாக இருக்கு,இந்த முறையில் குக்கரில் செய்து பார்த்திடனும்.மணம் தூக்குதே.பாராட்டுக்கள்.

Ahamed irshad said...

super piriyani...

Jey said...

பார்சல் பன்னி கொரியர்ல அனுப்பி வைங்க மேடம், டேஸ்ட் பாத்துட்டு, கமெண்ட்ஸ் போடுரேன்.

Jayanthy Kumaran said...

pic speak its taste...yummy n inviting Menaga

Menaga Sathia said...

நன்றி சகோ!! அக்கா பிரியாணிக்கு பதில் வடையை மாத்தி கேட்டுட்டாங்க போல...

நன்றி ஷாமா!!

நன்றி உம் மைமூனா!!

நன்றி சித்ரா!!

Menaga Sathia said...

நன்றி ஆசியாக்கா!! செய்து பார்த்து சொல்லுங்கள்...

நன்றி கீதா!! செய்து பார்த்து சொல்லுங்கள்..

நன்றி அஹமது!!

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஜெய்!!உங்களுக்கு பார்சல் அனுப்பியாச்சு...எப்படி இருந்துன்னு சொல்லுங்க...

Priya Suresh said...

Chettinad briyaninale yennaku echil oorum, solai aunty dishes ellame kalakals than..super tempting briyani Menaga..

பொன் மாலை பொழுது said...

அதானே பார்த்தேன்?! நீண்ட நாளாயிற்றே என்று. சற்று தூரத்தில் இருந்த கிளீனெக்ஸ் டப்பாவை அருகில் இழுத்து வைத்துக்கொண்டுதான் படிக்க முடிந்தது. என் லேப் டாப் கீ போர்டை ஒரு வழி பண்ணும் உத்தேசமா
சகோ. மேனகா??!!

ஜெய்லானி said...

வாசனை ஆளையே தூக்குதே..!!!ஜெய்லானீ கெட்டியா டேபிளை பிடிச்சுக்கோ..!!விட்டா பறந்துடுவே..!!

SUFFIX said...

இந்த வார வீக்கெண்ட் பிரியாணி ரெடி, நன்றி!!

சிநேகிதன் அக்பர் said...

முடிஞ்சா எங்களுக்கு ஒரு பார்சல் :)

எம் அப்துல் காதர் said...

என்ன நடக்குது இங்கே, பிரியாணியா சரி சரி. ஒரு ப்ளேட் எனக்கும், இன்னொரு ப்ளேட் பார்சலும் கட்டுங்க.. இன்னொரு ப்ளேட் யாருக்கா? அட என்னங்க புரியாத சின்ன புள்ளயா இருக்கீங்க. அதுவும் எனக்கு தாங்க!! இங்கேயே சாப்ட்டா கண்ணு பட்டுடும்ல!! ஹி ஹி

Cool Lassi(e) said...

Mutton Biryani looks divine. I am partial to mutton biryani rather the chicken. Enjoy!

ராஜ நடராஜன் said...

பிரியாணி கூட வாசகர் பரிந்துரையில் வருகிறதே!பிரியாணி பிரியர்கள் நிறைய இருப்பார்கள் போல தெரியுதே:)

ராஜ நடராஜன் said...

ரெசிபி ஒரே மாதிரியாக இருந்தாலும் செய்முறை கலவை மாற்றமோ,கைப்பக்குவம்ன்னு சொல்வாங்களே அது ஒவ்வொரு கைக்கும் வித்தியாசப்படும்.

அப்புறம் பிரியாணிக்கு கொத்துமல்லி,எலுமிச்சம்பழம்,தக்காளி பூ,வறுத்த வெங்காயம்,ரைத்தா வச்சு மேக்கப் செய்திருக்கலாம்:)

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!! செட்டிநாட்டு சமையலின் சுவைக்கு நானும் அடிமை....

நன்றி சகோ!!//அதானே பார்த்தேன்?! நீண்ட நாளாயிற்றே என்று. சற்று தூரத்தில் இருந்த கிளீனெக்ஸ் டப்பாவை அருகில் இழுத்து வைத்துக்கொண்டுதான் படிக்க முடிந்தது. என் லேப் டாப் கீ போர்டை ஒரு வழி பண்ணும் உத்தேசமா
சகோ. மேனகா??!!//ஹி ..ஹி..

நன்றி ஜெய்லானி!! //ஜெய்லானீ கெட்டியா டேபிளை பிடிச்சுக்கோ..!!விட்டா பறந்துடுவே..!!// ஏன் நீங்க அவ்வளவு ஒல்லியாவா இருக்கிங்க??

Menaga Sathia said...

நன்றி சகோ!!

நன்றி அக்பர்!! உங்களுக்கு பார்சல் அனுப்பியாச்சு...

நன்றி அப்துல் காதர்!! போங்க 2 பார்சல் என்றதும் பயந்துட்டேன்..ஹி..ஹி..தாராளமா 3 பார்சலாகவே அனுப்பிட்டா போச்சு...

Menaga Sathia said...

நன்றி கூல்!!

நன்றி சகோ!!//ரெசிபி ஒரே மாதிரியாக இருந்தாலும் செய்முறை கலவை மாற்றமோ,கைப்பக்குவம்ன்னு சொல்வாங்களே அது ஒவ்வொரு கைக்கும் வித்தியாசப்படும்.// நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை...
//அப்புறம் பிரியாணிக்கு கொத்துமல்லி,எலுமிச்சம்பழம்,தக்காளி பூ,வறுத்த வெங்காயம்,ரைத்தா வச்சு மேக்கப் செய்திருக்கலாம்// ஹா ஹா பிரியாணியை செஞ்சதும் முதல்ல சாப்பிடத்தான் தோனுது..அப்புறம் அதுக்கு மேக்கப் எங்க பண்றது??நீங்களே சொல்லுங்க...

Niloufer Riyaz said...

Biryani parkum pode sapida vendum pol irukkiradu. Yummmmmmmmmy

Starjan (ஸ்டார்ஜன்) said...

மணக்க‌மணக்க அருமையான பிரியாணி.. செய்துபார்க்க வேண்டும்.

Menaga Sathia said...

நன்றி நிலோபர்!!

நன்றி சகோ!! செய்து பார்த்து சொல்லுங்கள்....

vanathy said...

மேனகா, சூப்பர். உங்கள் வேகமும் சூப்பர் தான் போங்கள். ஒரு வாரம் வரமுடியாமல் போய் விட்டது. அதற்குள் இவ்வளவு ரெசிப்பிகள் கொடுத்து விட்டீர்கள். இப்ப தான் பின்னுட்டம் கொடுக்க நேரம் வந்திச்சு.

Unknown said...

nala iruku nakalum senjujamula

Asiya Omar said...

http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_23.html
இன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்,அருமை. பகிர்வுக்கு நன்றி.

01 09 10