தே.பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1/2 கப்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
காய்ந்த மிளகாய் - 4
பூண்டுப்பல் - 2
புளி - 1 நெல்லிக்காயளவு
உப்பு - தேவைக்கு
செய்முறை:
*பாசிப்பருப்பை வெறும் கடாயில் வாசனை வரும் வரை வறுக்கவும்.
*மிக்ஸியில் முதலில் பாசிப்பருப்பு+காய்ந்த மிளகாயையும் தண்ணீர்விடாமல் பவுடராக அரைத்து பின் தேங்காய்துறுவல்+புளி+உப்பு சேர்த்து சிறிது சிறிதாக நீர் சேர்த்து கெட்டியாக மைய அரைக்கவும்.
*கடைசியாக பூண்டுப்பல் சேர்த்து அரைத்தெடுக்கவும்.
19 பேர் ருசி பார்த்தவர்கள்:
very new to me ... I shoudl try this
Wow looks wonderful... i havent tried this... book marked...
சூப்பர்.புதுசாயிருக்கு.
new to me also... let us try this weekend
நன்றி! நன்றி!
pasi parru thogaiyal,really very nice...luks wounderfull and delicious...
து.பருப்பு துவையல் தான் நம்ம ஃபேவரைட் :)
நன்றி பவித்ரா!! செய்து பாருங்கள்..
நன்றி அகிலா!! கஞ்சி,காரகுழம்பிற்க்கு சூப்பர்ர்..
நன்றி ஆசியாக்கா!!
நன்றி எல்கே!! செய்துபார்த்து சொல்லுங்கள்...
நன்றி சகோ!!
நன்றி பிரேமலதா!!
நன்றி சகோ!!! எனக்கும் து.பருப்பு துவையல்தான் பிடிக்கும்.பா.பருப்பு துவையல் செய்த பிறகு இது ரொம்ப பேவரிட் ஆகிவிட்டது...
துவரம் பருப்பு அல்லது கடலைப்பருப்புலதான் செஞ்சுருக்கேன். பாசிப்பருப்புல செய்யறது புதுசா இருக்கு!!!!
பாசிபருப்பு துகையல் நல்லா இருக்கும் போலருக்கே........ செய்துபாதுட்டு சொல்றேன் .
thuvayal romba nalla irukku menaga
மேனகா புளி சேர்த்து செய்தது இல்லை டிரை பண்ணி பார்கிறேன் , சூப்பரா இருக்கும் வத்த குழம்போடு சாப்பிட.
பாசிப்பருப்பு துவையல் நன்றாக இருக்கிறது மேனகா! பொதுவாக இதை ஜுரத்துவையல் என்றுகூட சொல்வதுண்டு. சூடான மிளகு ரசமும் இந்தத் துவையலும் ஜுரத்தால் அவதிப்படும்போது சாப்பிட்டால் அமிர்தமாக உள்ளே இறங்கும்!!
வித்தியாசமாக செய்வதில் மேனகாவை அடிச்சுக்க ஆளில்லை போலும்.
நன்றி தெய்வசுகந்தி!!
நன்றி ப்ரியா!!
நன்றி கிருஷ்ணவேணி!!
நன்றி சாரு அக்கா!!
நன்றி மனோ அம்மா!! நீங்கள் சொல்வது மிகசரி..அமிர்தமாக இருக்கும் ரசம் சாதத்துடன் சாப்பிட...
நன்றி ஸாதிகாக்கா!!
இன்னிக்கு இதுதான் எங்க வீட்ல அருமை. நன்றி மேனகா
செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததில் மகிழ்ச்சி+நன்றி எல்கே!!
Post a Comment