Friday, 13 August 2010 | By: Menaga Sathia

வாழைக்காய் பஜ்ஜி

பஜ்ஜி மாவில் நாம் சிறிது சோடா மாவு சேர்ப்போம்.அதற்கு பதில் இட்லி மாவு சேர்த்து செய்தால் க்ரிஸ்பியாக இருக்கும்.எண்ணெயும் அதிகம் குடிக்காது..

தே.பொருட்கள்:
வாழைக்காய் - 1 பெரியது
இட்லி மாவு - 1/4 கப்
கடலைமாவு - 1 கப்
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் கலர் - 1 சிட்டிகை
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
ஓமம் - 1/4 டீஸ்பூன்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை:
*வாழைக்காயை மெலிதாக வட்டமாக நறுக்கவும் (விருப்பப்பட்டால் தோல் சீவிக்கொள்ளவும்).வாழைக்காயில் சிறிது உப்பு கலந்து 10 நிமிடம் வைக்கவும்.

*பாத்திரத்தில்கடலைமாவு+இட்லிமாவு+அரிசிமாவு+கலர்+பெருங்காய்த்தூள்+ஓமம் (கையால் நன்கு தேய்த்து போடவும்)+உப்பு அனைத்தையும் ஒன்றாக கலந்து இட்லிமாவு பதத்திற்க்கு கலக்கவும்.

*எண்ணெய் காயவைத்து வாழைக்காயை மாவில் தோய்த்து பொரித்தெடுக்கவும்.

பி.கு:
*இட்லி மாவு+வாழைக்காயில் உப்பு இருப்பதால் மாவு கலக்கும் போது உப்பு சரி பார்த்து போடவும்.

*ஓமத்துக்கு பதில் சீரகம்+நசுக்கிய பூண்டுப்பல் சேர்க்கலாம்.

*வாழைக்காயில் உப்பு கலந்து வைப்பாதால் பஜ்ஜி சாப்பிடும் போது சப்பென்று இருக்காது.

33 பேர் ருசி பார்த்தவர்கள்:

எல் கே said...

panni romba naal aachu ..

பொன் மாலை பொழுது said...

வெறும் பஜ்ஜிய எப்டி சாப்டுறது?
கொஞ்சமானும் தேங்காய் புதினா சட்னி வேணும்மா!
அப்டியே கடசியா ஒரு கப் பில்டர் காபியும்!!

நட்புடன் ஜமால் said...

ரமதான் டைத்லு சிறப்புங்கோ & நன்றிங்கோ ...

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

ஆகா இட்லிமாவில பஜ்ஜியோ? சூப்பர் ஐடியா... நல்லாயிருக்கு மேனகா.

ஹைஷ்126 said...

சூப்பர் பஜ்ஜி, இங்கு மழை வேறு பெய்யுது:(

வாழ்க வளமுடன்

Shama Nagarajan said...

so tempting...perfect for rainy day

Padhu Sankar said...

Pass on the plate to me

தெய்வசுகந்தி said...

பஜ்ஜி பண்ணி ரொம்ப நாளாச்சு! நானும் இட்லி மாவு சேர்த்துதான் செய்வேன். ஓமம் சேர்த்து செஞ்சதில்லை. அடுத்த முறை செய்து பார்க்கிறேன்!

Menaga Sathia said...

நன்றி எல்கே!!

நன்றி சகோ!! சட்னி+பில்டர் காபியுடன் பஜ்ஜியும் உங்களுக்கு நிச்சயம் செய்து தருகிறேன்..

நன்றி சகோ!!

நன்றி அதிரா!!

Menaga Sathia said...

நன்றி ஹைஷ் அண்ணா!!

நன்றி ஷாமா!!

நன்றி பது!!

நன்றி தெய்வசுகந்தி!!ஓமம் சேர்த்து செய்வது ரொம்ப நல்லது+வாசனையாகவும் இருக்கும்.அடுத்தமுறை செய்து பாருங்கள்...

பனித்துளி சங்கர் said...

மிகவும் சிறப்பான செய்முறை விளக்கம் . ஆமா ஒரு பஜ்ஜி எவளவு சொல்லவே இல்லையே . நீங்க சொன்னாலும் நான் பணம் தரமாட்டேன் . எனக்கு பத்து பஜ்ஜி வேண்டும் .

Mahi said...

ஆஹா..சூப்பர் பஜ்ஜி மேனகா!

இமா க்றிஸ் said...

வித்தியாசமா இருக்கே!

Kanchana Radhakrishnan said...

சூப்பர் பஜ்ஜி.

Lav said...

Bajji ennoda appa voda favourite.....any kind of bajji my whole familyu relishes.

Looks simply delicious !!


Lavanya

www.lavsblog.com

Umm Mymoonah said...

looks so yummy Menaga, that too idli batter, superb. Nice to have with a cup of tea.

சிங்கக்குட்டி said...

இட்ஜ்ஜி (இட்லி பஜ்ஜி)....சூப்பர் :-)கலக்குங்க கலக்குங்க.

ஹுஸைனம்மா said...

இட்லி மாவு, ஓமம் - ரெண்டுமே புது ஐடியா. அடுத்த முறை செஞ்சுபாத்துடலாம்.

Anonymous said...

மாவு பஜ்ஜி படம் சூப்பர் ..இனிமேல் பண்ணும்போது இந்த மாதிரி இட்லி மாவு சேர்த்து பண்ணி பார்க்கறேன் ..நன்றி

சசிகுமார் said...

பஜ்ஜி சுவையாக இருக்கு அக்கா

சாருஸ்ரீராஜ் said...

பஜ்ஜி சூப்பரா இருக்கு மேனகா இட்லி மாவு சேர்த்து புதுமையா இருக்கு டிரை பண்ணுகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

பஜ்ஜியிலியே உயர்த்தி வாழைக்காய் தான். ரொம்ப நன்றி மேனகா.
அதுவும் இட்லிமாவு சேக்கறது எனக்குத் தெரியாது. நீள வாக்கில வெட்டியும் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் இல்லையா. தான்க்ஸ் பா.

Menaga Sathia said...

நன்றி சங்கர்!! 10 பஜ்ஜி என்ன ஒரு முழு வாழைக்காய் பஜ்ஜியே பார்சல் அனுப்புகிறேன்..

நன்றி மகி!!

நன்றி இமா!!

நன்றி காஞ்சனா!!

Menaga Sathia said...

நன்றி லாவண்யா!!

நன்றி ஆயிஷா!!

நன்றி சிங்கக்குட்டி!! இட்ஜ்ஜி இந்த பெயரும் சூப்பராதான் இருக்கு...

நன்றி ஹூஸைனம்மா!! அடுத்தமுறை செய்து பாருங்கள்...

Menaga Sathia said...

நன்றி சந்தியா!!

நன்றி சசி!!

நன்றி சாருஅக்கா!!

நன்றி வல்லி அக்கா!! ஆமாம் நீளவாக்கில் அரிந்து போட்டு செய்தாலும் நன்றாக இருக்கும் ஆனால் அளவு குறைவாக இருப்பது போலைருக்கும் அதனால் வட்டமாகவே வெட்டி போட்டு செய்வது...

vanathy said...

menaga, super!
LK, poi paani parunga.

GEETHA ACHAL said...

வித்தியசமாக இருக்கின்றது...வாழைக்காயினை உப்பு சேர்த்து ஊறவைத்து பின் பஜ்ஜி செய்வது கூடுதல் டிப்ஸ்...அடுத்த முறை...செய்துவிடுகிறேன்...நன்றி...

'பரிவை' சே.குமார் said...

ஆகா இட்லிமாவில பஜ்ஜியோ? சூப்பர் ஐடியா...

Jaleela Kamal said...

நோன்பு நேரம் தினம் தினம் வித வித்மான பஜ்ஜி தான் இங்கு.

ரொம்ப நல்ல இருக்கு, என்ன் பஜ்ஜி சாப்பிட்டாலும் அது வாழக்காயில் செய்தால் தான் தான் நல்ல இருக்கு.

Unknown said...

புது ஐடியாவாக இருக்கு செய்து பார்க்கனும்

Menaga Sathia said...

நன்றி வானதி!!

நன்றி கீதா!!

நன்றி சகோ!!

நன்றி ஜலிலாக்கா!! ஆமாம் வாழைக்காய் பஜ்ஜிதான் சூப்பர்ர்ர் பஜ்ஜி..

நன்றி சிநேகிதி!!

மனோ சாமிநாதன் said...

பொன்னிறமான வாழைக்காய் பஜ்ஜி மிகவும் அருமை!

சிநேகிதன் அக்பர் said...

அட மிக அருமையாய் இருக்கே. வழக்கமா நீள வாக்கில்தான் பார்த்திருக்கிறேன். வட்டமாக பார்க்க அழகாக இருக்கிறது.

சுதந்திர தின வாழ்த்துகள்.

01 09 10