Thursday, 14 October 2010 | By: Menaga Sathia

பாதுஷா /Badusha

Jasu ப்ளாகில் பார்த்து சில மாறுதலுடன் முதன்முறையாக செய்தது...
தே.பொருட்கள்:
மைதா - 1 1/2 கப்
வெண்ணெய் - 1/2 கப்
சர்க்கரை - 1/4 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க
பாகு செய்ய:சர்க்கரை - 1/2 கப்
தண்ணீர் - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
குங்குமப்பூ - 1 சிட்டிகை

செய்முறை:
* மைதா+பேக்கிங் சோடாவை கலந்து 2 முறை சலித்துக் கொள்ளவும்.

*ஒரு பவுலில் உருக்கிய வெண்ணெய்+தயிர்+சர்க்கரை அனைத்தையும் ஒன்றாக நன்கு கலக்கவும்.அதனுடன் சிறிது சிறிதாக மைதா மாவை சேர்க்கவும்.

*மாவை மிருதுவாக கெட்டியாக பிசையவும்.இந்த பதமே சரியாக இருக்கும்.தேவைப்பட்டால் மட்டும் சிறிது நீர் தெளித்துக் கெட்டியாக பிசையவும்.
*குறைந்தது 15 நிமிடம் வரை மாவை நன்கு கைகளால் மிருதுவாக பிசையவும்.
*பின் நடுத்தர உருண்டையாக எடுத்து ஒரத்தில் மடித்து விடவும் அல்லது வடைபோல் தட்டில் கட்டை விரலால் குழிபோல் செய்யவும்.
*பானில் எண்ணெயை காயவைக்கவும்.மாவை சிறிது கிள்ளிபோட்டால் மாவு மேலே எழும்பி வரும்போது,எண்ணெய் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி பாதுஷாக்களைப் போடவும்.
* பாதுஷா மேலே எழம்பி வரும்போது மீண்டும் பானை அடுப்பில் வைத்து சிறுதீயில் வைத்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
*இன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை+தண்ணீர் வைத்து பிசுபிசுப்பு பதம் வரும்போது குங்குமப்பூ+எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.
*பொரித்த பாதுஷாக்களை சூடான சர்க்கரை பாகில் 2 நிமிடங்கள் போட்டு எடுக்கவும்.
*சர்க்கரை பாகு காய்ந்ததும் பரிமாறவும்.

பி.கு:
*செய்த அன்றைக்கு சாப்பிடுவதைவிட மறுநாள் சாப்பிட நன்றாகயிருக்கும்.
*பட்டரின் அளவைக்குறைத்தால் பாதுஷா சரியாக வராது.
*வடிவத்தை அவரவர் விருப்பம்போல் செய்துக்கொள்ளலாம்.சர்க்கரை பாகு மீதமிருந்தால் பாதுஷா போல் ஊற்றி விடவும்,காய்ந்த பிறகு பார்க்கும் போது சர்க்கரை பூத்து அழகாய் இருக்கும்.
*விரும்பினால் இதன்மேல் சாக்லேட் வெரிமிசில்லியை தூவி விடலாம்.

34 பேர் ருசி பார்த்தவர்கள்:

Lav said...

Super aa iruku ....am sure taste um super aa irundhirukum :)

Lavanya

www.lavsblog.com

koini said...

IIIII....Menaga bathusha superbaa irukku ...iyoo enna ithu innaikku ore sweetsaa irukku enga ponaalum.badhusha shape kooda alagaa seythu kaattiyirukkeengka.Thanks.

Prema said...

badhusha luks very nice,me too have an idea of preparing the for depavali.

ஸாதிகா said...

வாவ்..பாதுஷா அருமையா செய்து அசத்திட்டீங்க மேனகா

Chitra said...

Sweet for Deepavali!

நட்புடன் ஜமால் said...

சிறு வயது முதலே மிகவும் பிடித்தவற்றில் முதலிடம் பிடித்தது

இப்ப அந்த டேஸ்ட்டில் கிடைப்பதில்லை

Umm Mymoonah said...

I like the cute shapes of badusha you have made, looks very delicious.

Sarah Naveen said...

Looks so delicious..nice step-by step clicks..

Gayathri Kumar said...

Nice tutorial. Love badusha very much.

புவனேஸ்வரி ராமநாதன் said...

படங்களுடனான விளக்கம் மிக அருமை.

curesure Mohamad said...

மூலிகை சமையல் பற்றி எதாவது இருந்தால் http://ayurvedamaruthuvam.forumta.net/forum.htm -சென்று பகிரலாமே ?..ஒரு விண்ணப்பம் ..

தெய்வசுகந்தி said...

Looks Good Menaka! I have to try this.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

ஆஹா.. மேனகா.. எனக்கு பிடிச்ச ஐட்டமா செஞ்சு அசத்துறீங்களே...
கொஞ்சம் அட்ரஸ் குடுங்கப்பா.. உடனே கிளம்பி வரேன்.. பாதுஷா சாப்பிடத் தான்.. :-)))

Jayanthy Kumaran said...

really nice recipe...my daughter is craze for badusha...will make this for her...thanx for sharing dear..

Tasty Appetite

பொன் மாலை பொழுது said...

I LOVE IT :)

San said...

I have never made badusha ....your take on it looks really simple n easy...and as always...the snap looks so tempting ,i was very much fond of badusha in my childhood .

http://sanscurryhouse.blogspot.com

Malini's Signature said...

woww... Very Very Nice Managa

Ms.Chitchat said...

Nice badhushas,easy too,would love to try.

Asiya Omar said...

WOW!Duper.looks great.

Mahi said...

பாதுஷா அருமையா இருக்கு மேனகா!

SathyaSridhar said...

Hmm,,,badhusa ellam seithu kalakkarenga Diwali ippave aarambicha maadhiri irukku..Hmm,, ennala ippo padatha mattum thaan paarka mudium konja naal poegattum ellam oru pudi pudikka vendiyahtu thaan.

சசிகுமார் said...

நன்றி

Priya said...

மேனகா, ரொம்ப நாளா இந்த ரெசிபி தேடிக்கிட்டு இருந்தேன். உங்களின் குறிப்பு சுலமா இருக்கு.கண்டிப்பா செய்துவிட்டு சொல்றேன்.

Menaga Sathia said...

நன்றி லாவண்யா!!

நன்றி கொயினி!!

நன்றி பிரேமலதா!!

நன்றி ஸாதிகாக்கா!!

Menaga Sathia said...

நன்றி சித்ரா!!

நன்றி சகோ!!

நன்றி ஆயிஷா!!

நன்றி சாரா!!

Menaga Sathia said...

நன்றி காயத்ரி!!

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி curesure4u!!

நன்றி தெய்வசுகந்தி!!

Menaga Sathia said...

நன்றி ஆனந்தி!! அட்ரஸ்தானே தாராளமா தரேன்,வாங்க..

நன்றி ஜெய்!! குட்டி பொண்ணுக்கு செய்து கொடுங்க...

நன்றி சகோ!!

நன்றி சான்!!

Menaga Sathia said...

நன்றி ஹர்ஷினி அம்மா!!

நன்றி சிட்சாட்!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி மகி!!

Menaga Sathia said...

நன்றி சத்யா!! கொஞ்சநாள் கழித்து செய்து சாப்பிடுங்க...

நன்றி சசி!!

நன்றி ப்ரியா!!செய்து பார்த்து சொல்லுங்கள்...

Jaleela Kamal said...

படம் விளக்கத்துடன் அருமையாக இருக்கு எனக்கு ரொம்ப பிடிச்ச ஐட்டம்,

முன்பு ஒரு முறை தான் செய்தேன் அந்த அளவுக்கு திருப்தி இல்லை. கொஞ்சம் கல்லாகீ விட்டது,
என்ன தீபாவளி ஸ்பெஷலா?

Akila said...

Wow so lovely n yummy....
Event: Dish Name Starts with C
Learning-to-cook
Regards,
Akila

Priya Suresh said...

Appadiye rendu badusha yedukalam pola irruku, super cute looking badusha Menaga..

அஹ‌ம‌து இர்ஷாத் said...

Looking Very Nice..

PriyaRaj said...

unga badhusha romba super aa eruku menaga...Ungala romba naalaiku aapuram pakarathula romba happy ..

01 09 10