தே.பொருட்கள்
பாசிப்பருப்பு - 1 கப்
கடலைப்பருப்பு - 1/2 கப்
ஜவ்வரிசி - 1 டேபிள்ஸ்பூன்
வெல்லம் - 3/4 கப்
சுண்டக் காய்ச்சிய பால் - 1/2 கப்
ஏலக்காய்த்தூள் -1/4 டீஸ்பூன்
முந்திரி,திராட்சை - தேவைக்கு
பொடியாக நறுக்கிய தேங்காய்ப்பல் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை
*பாசிப்பருப்பை வெறும் கடாயில் லேசாக வாசனை வரும்வரை வறுக்கவும்.ஜவ்வரிசியையும் லேசாக வறுக்கவும்.
*பாத்திரத்தில் கடலைப்பருப்பை வேகவைக்கவும்.3/4 பதம் வெந்ததும் வறுத்த பாசிப்பருப்பை அதனுடன் சேர்த்து வேகவைக்கவும்.
*பாசிப்பருப்பு 1/2 பதம் வெந்ததும் ஜவ்வரிசியை சேர்த்து வேகவைக்கவும்.
*வெல்லத்தை சிறிது தண்ணீரில் கரைத்து மண்ணில்லாமல் வடிக்கட்டி வைக்கவும்.கடாயில் நெய் விட்டு தேங்காய்ப்பல்+முந்திரி திராட்சையை வறுக்கவும்.
*ஜவ்வரிசி வெந்ததும் வெல்லம்+பால்+ஏலக்காய்த்தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கி வறுத்த தேங்காய்ப்பல் முந்திரிகளை சேர்க்கவும்.
21 பேர் ருசி பார்த்தவர்கள்:
I already taste that payasam. After taste your style preparation I will tell
Healthy delicious payasam dear :)
மாசத்தோட முதல் நாளை மங்களகரமா ஸ்வீட்டோட ஸ்டார்ட்டா? ம்ம்ம் ம்ம்
Wow....3 in 1payasam...super Menaga very nice idea...looks so delectable...definitely will try this way...kalakkals :)
எனக்கு ரொம்ப பிடிக்கும் .இப்ப தான் ரெசிபி கிடைச்சாச்சே.sunday க்கு செஞ்சுடறேன்
Tasty payasam .. hubby loves it.
Vardhini
Event: Fast food not Fat food
Delicious payasam,i too make this same way...yummy!!!
Amma seiivanga..So mouthwatering for a sweet tooth person like me..
My huss's favorite payasam... Looks yum...
Mom makes this every month and just love it :)
சூப்பர் பாயாசம் மேனகா. எனக்கு நான் செய்யும் பாயாசம் பிடிக்காது, ஆராவது செய்து தந்தால் பிடிக்கும்:).
My fav, can have it anytime..delicious payasam..
ஆஹா டெம்ப்ளேட் மாதிடீங்களா ரொம்ப சந்தோஷம் பார்க்கவும் அழகாக இருக்கு
என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....
அருமையா இருக்கு மேனகா!
பாசிப் பருப்பு பாயாசம்... ம்... நல்லா இருக்கு...
nice preparation- my mom usually makes it and it has always engaged me !
ஹை சூப்பர் எனக்கு ஒரு கப்.:).. இது மூணும் சேர்த்து செய்ததில்லைடா மேனகா. செய்து பார்க்கிறேன்.:)
சூப்பர் பாயாசம்.
என் ஃபேவரிட் பாயஸம் இது.
நன்றிப்பா. இதுக்குன்னே ஓணம் வரக் காத்துருக்கேன்:-))))
இன்றைய வலைச்சரத்தில் தங்களுடைய இந்தப் பதிவினைப் பகிர்ந்துள்ளேன்..
நேரமிருந்தால் வருகை தாருங்களேன்..
http://blogintamil.blogspot.com/2011/08/4.html
Post a Comment