Sunday 25 September 2011 | By: Menaga Sathia

களகோஸ் பொரியல்/Brussels Sprouts Poriyal

களகோஸ்,இது கேபேஜ் வகையை சார்ந்தது.இதில் அதிகளவு விட்டமின் K&C  இருக்கிறது.மற்றும் விட்டமின் A,B6,B1,B2, ப்ரோட்டின்,Omega3 Fattyacids,கால்சியம்,இரும்புச்சத்தும் இருக்கு.அதிகளவு நார்ச்சத்தும் இருக்கு..கர்ப்பிணிகள் சேர்த்துக் கொள்ளவேண்டிய காய்களில் இதுவும் ஒன்று...

குறைந்தளவு கலோரிஸ் இருப்பதால் உடல் எடையினை குறைக்க பெரிதும் உதவுகிறது.100 கிராமில் 40 கிராம் கலோரிஸ் தான் இருக்கு..

நல்ல பச்சைநிறமுள்ள காயாக பார்த்து வாங்கவேண்டும்.வெதுவெதுப்பான உப்புக் கலந்த நீரில் கழுவி வெட்டவேண்டும்.

குறைந்தளவு நீர் ஊற்றி சமைத்தால் போதுமானது,இது சீக்கிரம் வெந்துவிடும்.

ஆவியில் வேகவைத்து சாலட் போல செய்து சாப்பிட நன்றாகயிருக்கும்...


தே.பொருட்கள்
களகோஸ் - 12
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 சிறியது
பாசிப்பருப்பு - 1 கைப்பிடி
தேங்காய்த்துறுவல்  - 1/2 கப்
கடுகு,உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை
*களகோஸை பொடியாக நறுக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு கடுகு+உளுத்தம்பருப்பு+கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

*பின் நறுக்கிய களகோஸ்+பாசிப்பருப்பு+உப்பு+தேவையானளவு நீர் விட்டு வேகவைக்கவும்.

*வெந்ததும் தேங்காய்த்துறுவல் சேர்த்து இறக்கவும்.

17 பேர் ருசி பார்த்தவர்கள்:

Mahi said...

ஷிவானிக்கு மொட்டை போட்டாச்சு போல இருக்கே?! :)

பொரியல் நல்லா இருக்கு மேனகா!

Angel said...

இந்த கேபேஜ் வகை ரொம்ப உடலுக்கு நல்லது .ரெசிபிக்கு நன்றி

Vardhini said...

I do this poriyal .. love brussel sprouts.

Vardhini
Zesty Palette

Prema said...

Healthy poriyal,luks delicious...

ஸாதிகா said...

களகோஸ் இப்பொழுதுதான் கேள்விப்பட்டுள்ளேன்.அவசியம் இதில் பொரியல் செய்து பார்த்துவிட வேண்டும்.

ஆயிஷா said...

களகோஸ்..நானும் இப்பதான் கேள்விபட்டுள்ளேன்.

ரெசிபிக்கு நன்றி

சசிகுமார் said...

பகிர்வுக்கு நன்றி

இமா க்றிஸ் said...

நாங்கள் அவித்துச் சாப்பிடுவோம். மாசி போட்டு வெள்ளைக்கறியாகவும் வைப்போம். அடுத்த தடவை பொரியல் ட்ரை பண்ணுகிறேன். குறிப்புக்கு நன்றி.

MANO நாஞ்சில் மனோ said...

சமையுங்க சமையுங்க ம்ஹும் எனக்குதான் குடுப்பினை இல்லாம போச்சி.....!!!

சி.பி.செந்தில்குமார் said...

மார்க்கெட் போகும்போதே இன்னைக்கு என்ன புது பதிவு போடலாம்னு யோசிச்சுட்டே போவீங்களோ?

'பரிவை' சே.குமார் said...

களகோஸ்..நானும் இப்பதான் கேள்விபட்டுள்ளேன்.

Priya Suresh said...

Healthy poriyal, i can have with a bowl of rice..

GEETHA ACHAL said...

ரொம்ப சூப்பராக இருக்கின்றது...

avainaayagan said...

''களகோஸ் பற்றி இப்பொழுதுதான் நான் கேள்விப்படுகின்றேன். அது எங்கு கிடைக்கும்? தயவு செய்து விவரம் தெரிவிப்பீர்களா?

MyKitchen Flavors-BonAppetit!. said...

Hi Menaga,nice to come across a Tamil recipe blog.This is my first time here and I luv this Brussels Sprouts Poriyal.Happy to follow U.

Menaga Sathia said...

@avainaayagan

இந்த காய் ரிலையன்ஸ்,பழமுதிர் நிலையம் கடைகளில் கிடைக்கும்....

aotspr said...

சூப்பர் சமையல்............

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

01 09 10