Tuesday, 27 September 2011 | By: Menaga sathia

வேப்பம்பூ ரசம்/Neem Flowers(Vepampoo) Rasam

 வேப்பமரத்தின் மருத்துவகுணங்கள் பற்றி அனைவரும் அறிந்ததே!!
குடலில் இருக்கும் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் வேப்பம்பூவுக்கு உண்டு.

இதனை வாரம் ஒருமுறை குழந்தைகளுக்கு செய்து கொடுப்பது நல்லது.

தே.பொருட்கள்
புளிகரைசல் - 2 கப்
தக்காளி - 1 பெரியது
ரசப்பொடி - 1 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்(விரும்பினால்)
மஞ்சள்தூள் ,பெருங்காயத்தூள் - தலா1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க
நெய்(அ)எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
கா.மிளகாய் - 1
வேப்பம்பூ - 2 டீஸ்பூன்

செய்முறை

*புளிகரைசலில் தக்காளியை கரைத்து அதனுடன் மஞ்சள்தூள்+பெருங்காயத்தூள்+உப்பு+மிளகாய்த்தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
 *பச்சை வாசனை அடங்கியதும் ரசப்பொடி சேர்த்து கொதிக்கவிட்டு நுரைவரும் போது இறக்கவும்.
 *கடாயில் நெய் விட்டு கடுகு+காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து வேப்பம்பூவை சேர்த்து கருகாமல் வறுத்து ரசத்தில் சேர்க்கவும்.
பி.கு
*வேப்பம்பூ கருக விட்டால் ரசம் கசக்கும்.

*கறிவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்தால் ரசத்தின் சுவை மாறுபடும்.

*வேப்பம்பூ நாட்டு மருந்துகடைகளில் கிடைக்கும்.

25 பேர் ருசி பார்த்தவர்கள்:

சி.பி.செந்தில்குமார் said...

பின் குறிப்புல வேப்பம்பூவை கரு விட்டாலா? கருக விட்டலா?


பாப்பாவுக்கு பர்த்டே கிஃப்ட்டா மொட்டையா? அவ்வ்வ்வ்

S.Menaga said...

தவறை திருத்திவிட்டேன்,மிக்க நன்றி!! ஏதாவது தவறா எழுதியிருந்தா அது எப்படி உங்க கண்ணுக்கு மட்டும் தெரியுது....

என் பொண்ணு சும்மா இருந்தாக்கூட நீங்க அழ வைத்துடுவீங்க போல...

சிநேகிதி said...

மாசம் ஒரு முறையாவது குழந்தைகளுக்கு கொடுக்கனும் என்று முயற்சி செய்கிறேன்.. ஆனால் இந்த வாடையினை கண்டாலே என் பொண்ணு ஓடுறா என்ன பண்ண மேனகா.... நீங்கள் செய்த ரசம் பார்க்கவே நல்லா இருக்கு

சே.குமார் said...

வேப்பம்பூ ரசம் கேள்விப்பட்டிருக்கிறேன். சாப்பிட்டதில்லை.
சுலபமாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள். உடம்புக்கு நல்லது. இங்கு கிடைக்காதே.

Premalatha Aravindhan said...

Amma makes this often,now a days very difficult to get the neem flowers...wonderful recipe,luks delicious...

Priya said...

Naanum oorula irrunthu vepampoo yeduthu vanthu irruken, rasam super ponga..

ஆயிஷா அபுல் said...

அருமையான ரசம் .கசக்காதா மேனகா

"என் ராஜபாட்டை"- ராஜா said...

சுவையான குறிப்பு

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில்

காடுவெட்டி குருவை கோணி பையுடன் அனுப்பினாரா ராமதாஸ்?

MANO நாஞ்சில் மனோ said...

உபயோகமான ரசம் சாரி பதிவு....!!!

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
பின் குறிப்புல வேப்பம்பூவை கரு விட்டாலா? கருக விட்டலா?//


எலேய் விட்றா விட்றா....

MANO நாஞ்சில் மனோ said...

S.Menaga said...
தவறை திருத்திவிட்டேன்,மிக்க நன்றி!! ஏதாவது தவறா எழுதியிருந்தா அது எப்படி உங்க கண்ணுக்கு மட்டும் தெரியுது....//

விடுங்க மேனகா, இவன் எப்பவும் இப்பிடித்தான், இப்பிடித்தான் எப்பவும், அதான் நான் அவனை மூதேவி மூதேவி'ன்னு திட்டுறது ஹா ஹா ஹா ஹா....

Uma said...

I have tasted once when My MIL prepared it. Whenever I get neemflower nexttime, I am sure I'll make this.

Cheers,
Uma

Shanavi said...

Tamil New year andru , indha rasam kanidpaga enga veetil seivanga..migavum arumai

avainaayagan said...

வேப்பம்பூ ரசம் செய்யும் முறையை மிக எளிதாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி

Jay said...

awesome preparation..my fav..:)
Tasty Appetite

தேனம்மை லெக்ஷ்மணன் said...

மிக அருமையான ரசம் மேனகா.

revathi said...

Arumaiyaana rasam akka..:) superb..
Reva

S.sampath kumar said...

happy to see u again sister your blog was totally changed very nice...

S.Menaga said...

@ஆயிஷா
இந்த ரசம் கொஞ்சம் கூட கசப்பு தெரியாது,செய்து பாருங்கள்...

Prabhamani said...

Wow..Very nice rasam.Luks perfect.

Now Serving said...

Menaga - you have taken rasam to the next level with this recipe :) What a fantastic idea to use neem flowers - so many curative properties in them too :)
Engiyo poyiteenga :)

Cheers,
Priya
Do check out my blog anniversary giveaways dear

MyKitchen Flavors-BonAppetit!. said...

Luvly Rasam,very innovative and healthy too.

RAKS KITCHEN said...

Nice recipe. I literally cry when my mom makes and compels to eat :D

Kalpana Sareesh said...

this is one of my very fav rasam.. with so many medicinal properties.. yumm..

01 09 10