Thursday, 22 September 2011 | By: Menaga sathia

தலப்பாக்கட்டு மட்டன் பிரியாணி/ Thalappakattu Mutton Biryani


திண்டுக்கல் என்றாலே பூட்டு ஞாபகம் வருவது போல பிரியாணியும் புகழ் பெற்றது.திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து சிறிது தூரத்தில் வேணு பிரியாணி ஹோட்டல் இருக்கு.திண்டுக்கல் போனால் யாரும் மிஸ்பண்ணிடாதீங்க அந்த ஹோட்டலில் பிரியானி சாப்பிட....சிறிய ஹோட்டல்தான் என்றாலும் அங்கு பிரியாணி ரொம்ப சூப்பரா இருக்கும்.

விதவிதமா பிரியாணி சமைப்பது ரொம்ப பிடிக்கும்.ஒருமுறை டி.வியில் பார்த்து செய்த குறிப்பு இது...

இந்த பிரியாணி செய்ய சில டிப்ஸ்

*பிரியாணி செய்ய நல்ல தண்ணீர் அவசியம்.உப்புத்தண்ணீர் சுவையை மாற்றி விடும்.

*தேங்காய்ப்பால் சேர்த்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.

*சீரக சம்பா அரிசியில் செய்தால் நன்றாக இருக்கும். 1 கப் = 2 கப் நீர் சேர்க்கவேண்டும்.பாஸ்மதிக்கு 1 கப் = 1 1/2 கப் நீர் சேர்க்கவேண்டும்.

*மட்டன் இளங்கறியாக இருந்தால் சுவை சூப்பர்.

*பூண்டைவிட இஞ்சி அதிகளவில் சேர்க்கவேண்டும்.

நான் பாஸ்மதி அரிசியைதான் உபயோகித்துள்ளேன்.

தே.பொருட்கள்
மட்டன்  1/2 கிலோ
அரிசி - 4 கப்
வெங்காயம் - 2 பெரியது
தக்காளி - 2 பெரியது
தேங்காய்ப்பால் - 3 கப்
இஞ்சி - 1 பெரிய துண்டு
பூண்டுப்பல் - 6
நெய் - 100 கிராம்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
தயிர் - 125 கிராம்
பச்சை மிளகாய் - 10
புதினா கொத்தமல்லி - தலா 1 கைப்பிடி
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

எண்ணெயில் வறுத்து பொடிக்க
கசகசா - 2 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் - 2 டீஸ்பூன்
ஏலக்காய் - 5
பட்டை - சிறுதுண்டு
பிரியானி இலை -3
கிராம்பு - 5

செய்முறை

*எண்ணெயில் வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை நைசாக பொடிக்கவும்.

*கறியை சிறிது உப்பு+மஞ்சள்தூள்+தயிர் சேர்த்து பிரட்டி குக்கரில் 3 விசில் வரை வேகவைத்து தண்ணிரை அளந்து வைக்கவும்.

*வெங்காயம்+தக்காளி அரியவும்.பச்சை மிளகாயை கிறவும்.இஞ்சி பூண்டை அரைக்கவும்.அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம்+பச்சை மிளகாய்+இஞ்சி பூண்டு+தக்காளி அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் பொடித்த பொடி சேர்த்து கிளறவும்.அடுப்பை சிம்மில் வைக்கவும்.இல்லையெனில் அடி பிடிக்கும்.

*பின் கறிவேக வைத்த நீரை அளந்து அதற்க்கு தேவையானளவு நீர் 2ம் 3 கப் வருமாறு அளந்து ஊற்றி கொதிக்கவிடவும்.

*கொதிவந்ததும் அரிசி+உப்பு சேர்க்கவும்.தண்ணீர் சுண்டி வரும் போது தேங்காய்ப்பால்+வேகவைத்த கறி சேர்க்கவும்.

*நீர் சுண்டி வரும் போது புதினா கொத்தமல்லி+நெய் சேர்த்து தம்மில் 15 நிமிடம்  போடவும். அல்லது 190°C முற்சூடு செய்த அவனில் 15 நிமிடம் வைத்து எடுக்கவும்.


*சுவையான பிரியாணி ரெடி!!

35 பேர் ருசி பார்த்தவர்கள்:

MANO நாஞ்சில் மனோ said...

ம்ம்ம் எங்க வீட்ல இந்தவாரம் இந்த பிரியாணியாதான் இருக்கும், என் வீட்டம்மா உங்கள் பதிவை படித்துக் கொண்டிருக்கிறாள், ம்ம்ம்ம் எனக்குதான் குடுத்து வைக்கலை, ஆனால் மூணு மாசம் லீவுல சாப்புட்டு அஞ்சிகிலோ உடம்பு ஏறிப்போச்சு, என்ன மனோ'வுக்கு வீட்டுல பலமான சாப்பாடு போலன்னு சொந்தமும் நட்பும் கிண்டல் பண்ணுனாங்க....!!! நீங்க அசத்துங்க மேடம்....

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நான் விரும்பிச்சென்று உண்ணும் இடம் .ஆனால் ,இப்ப சரியில்ல .

jaisankar jaganathan said...

அசத்துங்க பிரியாணி போட்டு

அமுதா கிருஷ்ணா said...

தலப்பாக்கட்டு பிரியாணி,வேணு பிரியாணி இரண்டும் சீரக சம்பா அரிசியில் செய்ய படுகிறது.இரண்டு கடைக்காரர்களும் எனக்கு சொந்தக்காரர்கள்.நீங்கள் சொன்ன மாதிரி தண்ணீர் மிக முக்கியம்.தேங்காய் பாலும் அதிக சுவை கொடுக்கும்.திண்டுக்கல் ஸ்டேஷன் அருகில் இருக்கும் கடை பொன்ராம் என்று நினைக்கிறேன். வேணுபிரியாணி தெற்கு வீதியில் இருக்கும் பெரிய ஹோட்டல் ஆகும்.

அமுதா கிருஷ்ணா said...

இந்த இரு ஹோட்டல்களிலும் பிரியாணி பட்டை கலரிலே இருப்பது இதன் ஸ்பெஷல்.பட்டை பொடி அதிகம் சேர்ப்பார்கள்.சென்னையில் கிடைக்கும் பிரியாணி தக்காளி அதிகம் சேர்த்து அந்த கலரிலே இருக்கும்.

சி.பி.செந்தில்குமார் said...

மீ வெஜ்.. சோ கிரேட் எஸ்கேப்

Priya said...

Omg, even i was planning to make this authentic briyani, cant wait to try..

ஆயிஷா அபுல் said...

சூப்பர் பிரியாணி

மருதமூரான். said...

நமக்கும் மட்டன் பிரியாணி ரொம்பப்பிடிக்கும்!

Jaleela Kamal said...

பிரியாணி இங்கு வரை மனக்குது

பூண்டை விடஇஞ்சி நாங்க பிரியாணியில் எப்போதுமே அதிகமா தான் போடுவோம்

suryajeeva said...

நான் சைவ குரங்கு

நட்புடன் ஜமால் said...

My choice always Fish or chicken

so next meet panren :)

சசிகுமார் said...

பிரிண்ட் எடுத்தாச்சு... எவ்வளவு பிரிண்ட் தான் எடுப்பதோ எல்லாமே ஒரு புக் அளவுக்கு வந்துடுச்சி

ஜெய்லானி said...

ஆஹா...மட்டன் பிரியாணியா......:-))))))))))))))))))))))))))))))))))))))))))). ஆசைய கிளப்பிட்டீங்களே . நைட்டுக்குக்கு போட்டுட வேண்டியதுதான் :-)

ஆமினா said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

வாசனை இங்கே பறந்து வருது... நாளைக்கே செய்துடுறேன்/

நானும் அடிக்கடி திண்டுக்கல் பிரியாணி செய்வேன். பட் பேகம்பூர் ஏரியா பக்கம் செய்முறை வித்தியாசமாக இருக்கும்

ரம்மி said...

தற்போது அந்தக் கடை பிரியாணியில் உப்பு,காரம் சராசரி அளவைக் காட்டிலும் குறைவாக சப்பென்று இருக்கிறது! கோளா உருண்டை மட்டும் தேவலை!

ANU said...

very nice and yummy biriyani...

CHECK OUT My DIWALI Event and Recipes
September - ALMONDS Event & GIVEAWAY
September - WWC - "Cornmeal for Breakfast"
100 Friends/Followers & GIVEAWAY

GEETHA ACHAL said...

வாவ்...ரொம்ப ரொம்ப சூப்பராக இருக்கின்றது மேனகா...

Shanavi said...

Ippove saapidanum pola iruku Menaga..Romba arumai

ஸாதிகா said...

பேஷ்..பேஷ்..தலைப்பாகட்டு பிரியாணியையும் சமைத்துக்காட்டி விட்டீர்கள் மேனகா.

மனோ சாமிநாதன் said...

பிரியாணியின் குறிப்புக்கள் பிரமாதம் மேனகா! தஞ்சை, திருச்சி பகுதிகளில் சீரக சம்பா அரிசியைத்தான் பிரியாணிக்குப் பயன்படுத்துவார்கள்!

Kannan said...

சூப்பர் பிரியாணி.பாராட்டுகள்...


நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Agape Tamil Writer said...

அன்பு சகோதரா, இந்த வலைபதிவு முயற்சி மிகவும் அருமை, தமிழர்கள் தமிழில் பிண்ணூட்டமிட, தமிழ் எழுதியை நிறுவி வாசகர்களுக்கு உதவலாமே, அதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் நன்றி

Uma said...

Great one. I'll try this weekend and get back to you soon. Looks delicious.

Cheers,
Uma

Jay said...

my fav to eat n make too..
perfect version..:)
Tasty Appetite

சே.குமார் said...

தலப்பாகட்டு பிரியாணி சுவையே தனிதான்..

IlayaDhasan said...

திண்டுக்கல் ல இருந்து எவ்வளோவ தடவை டிரைன் பிடிச்சிருக்கேன் , ஆனால்
இந்த ஓட்டல எப்படி மிஸ் பண்ணேன் ...அடுத்த தடவை கண்டிப்பா சுவைக்கணும்.

சிறை என்னை வாட்டுகிறது - கனி மொழி

அப்பாவி தங்கமணி said...

சென்ற முறை கோவை சென்ற போது.. திண்டுக்கல் பிரியாணினு நெறைய கடை வாசலில் பார்த்தேன்... இதானா அது... :)

ரெவெரி said...

ரெண்டு வருஷம் முன்னே கொடைக்கானல் போகையில் ஒரு கட்டு கட்டினோம்...மறுபடி நினைபடுத்தீட்டீங்க...

இன்னும் ஒரு மாசத்திலே மறு ட்ரிப்... எதுக்கும் பிரிண்ட் பண்ணிக்கிறேன்...அங்க போய் கம்பர் பண்ண..:)

ADAM said...

VENUS BRIYANI SUPER

Shama Nagarajan said...

arumai arumai....

mrs.kader said...

இப்ப தான் கீதாஆச்ச பக்கத்தில் பிரியாணியினை பார்த்தேன்... இந்த வாரம் செய்யலாம் என்று சொலிவிட்டு வந்தேன்.. இந்த பிரியாணியும் சூப்பரா இருக்கே.. செய்து பார்ப்போம்

Aarthi said...

First time here..Glad I reached here..Following you right away...This looks delicious..A blog in tamil makes me hapy,because i am from the south of india...My mum would love to read your blog.....Thanks for sharing it dear…Should try it soon…If you have time do check my blog too…

Aarthi
http://yummytummy-aarthi.blogspot.com/

Gnanavel Thandapani said...

what is the wt of one cup rice?

Menaga sathia said...

@Gnanavel Thandapani

1 Cup Basmati Rice = 195 gm !!

01 09 10