Thursday 22 March 2012 | By: Menaga Sathia

மைக்ரோவேவ் ரிக்கோட்டா சீஸ் பால்கோவா /Microwave Ricotta Cheese Palghova

 இதுதான் என்னுடைய முதல் மைக்ரோவேவ் சமையல்.யாஸ்மினின் குறிப்பை பார்த்து மைக்ரோவேவ்வில் செய்தது.நன்றி யாஸ்மின்!!

தே.பொருட்கள்
ரிக்கோட்டா சீஸ் - 250 கிராம்
பால் பவுடர் -1 கப்
தயிர் -1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை -3/4 கப்
வெண்ணெய் -4 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் -1/4 டீஸ்பூன்

செய்முறை
*மைக்ரோவேவில் பாத்திரத்தில் வெண்ணையைப் போட்டு 1 நிமிடம் வைத்து உருகவைக்கவும்.

*அதனுடன் ரிக்கோட்டா சீஸ்+சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி 6-8 நிமிடங்கள் வரை வைக்கவும்.
*ஒவ்வொரு 1 நிமிடத்திற்க்கும் ஒரு முறை கலக்கி விடவும்.

*பின் தயிர்+பால்பவுடர் சேர்த்து கலக்கி மேலும் 3 நிமிடம் வைக்கவும்.இடையிடையே கலக்கி விடவும்.

*இப்போழுது வெண்ணெய் பிரிந்து ,பால்கோவா உதிரியாக இருக்கும்.ஏலக்காய்த்தூள் சேர்த்து கலக்கிவிடவும்.

*இன்னும் கெட்டியாக வேண்டுமெனில் மேலும் 1 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.சுவையான பால்கோவா ரெடி!!

பி.கு

*தயிர் சேர்த்தால் தான் பால்கோவா உதிரியாக வரும்.

*ஒரு கண்ணாடி பாத்திரத்தில் பாதியளவு தண்ணீர் ஊற்றி ஹையில் 3 நிமிடங்கள் வரை வைத்து எடுத்தால் பாத்திரம் சுடக்கூடாது.அதுவே மைக்ரோவேவில் சமைக்க ஏற்றது.

18 பேர் ருசி பார்த்தவர்கள்:

ஸாதிகா said...

சீஸில் பால்கோவாவா?பலே!
படத்தைப்பார்த்தால் எடுத்து சாப்பித்தூண்டுகிறது!!

MyKitchen Flavors-BonAppetit!. said...

Very yumm made Paal Khova. Luks delicious

radhu said...

So Sweet. I Love Paal Kova..

radhu said...

So Sweet..

Akila said...

Paakarathike supera iruku. Saapita epdi irukum

Hema said...

Even I do this, very easy when we use the microwave, delicious..

Ms.Chitchat said...

Looks very very tasty, an easy breezy too.

hotpotcooking said...

romba supera irukku

San said...

Ricotta cheese khova is so scrumptious and needless to say it takes hardly no efforts with microwave. Nice recipe.

Mahi said...

/இதுதான் என்னுடைய முதல் மைக்ரோவேவ் சமையல்/ நிஜமாவா சொல்றீங்க??!?!!! :)))) இவ்ளோ நாளா மைக்ரோவேவ் யூஸ் பண்ணலையா நீங்க?

மைக்ரோவேவ் சமையலை இனிப்போட ஆரம்பிச்சிருக்கீங்க,வாழ்த்துக்கள் மேனகா!

Yasmin said...

மிக்க நன்றி மேனகா. என் குறிப்பை செய்து பார்த்தற்க்கு மிக சந்தோஷமாக இருக்கிறது.நன்றி.நீங்கள் சொன்னமாதிரி தயிர் சேர்த்து கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.நிச்சயம் சுவையகத்தான் இருக்கும்.வாழ்த்துக்கள்....

Unknown said...

New recipe!ive tried using condensed milk in mw...

Vimitha Durai said...

Looks so tasty.. SImple and easy too...

Vijiskitchencreations said...

மேனகா, சூப்பராவும் சீக்கிரமாகவும் செய்யகூடியது. நான் பால் பௌடரில் செய்திருக்கேன். இதில் செய்ததில்லை அவசியம் அடுத்த தடவை செய்கிறேன். நல்ல குறிப்பு.

Jaleela Kamal said...

ரொம்ப நல்ல இருக்கு மேனகா/

நான் கண்டெஸ்ட் மில்கில் செய்துள்ளேன்.

நேரம் இருக்கும் போது போடு கிறேன்
குயிக்க்க செய்thudalaam

Priya dharshini said...

Yummy pal kova...never tried with cheese

'பரிவை' சே.குமார் said...

அருமை...

மாதேவி said...

சுவையான பால்கோவா.

01 09 10