குஸ்கா என்பது ஒருவகை பிரியாணி.இதனை காரசாரமான க்ரேவியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.நன்றி சவிதா!!
தே.பொருட்கள்
பாஸ்மதி - 2கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி -1 சிறியது
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் -4
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
தயிர் - 1/4 கப்
புதினா,கொத்தமல்லி - தலா 1 கைப்பிடி
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க
கிராம்பு -3
ஏலக்காய் -2
பிரியாணி இலை -2
சோம்பு -1 டீஸ்பூன்
செய்முறை
*அரிசியை கழுவி நீரை வடிகட்டி சிறிது நெய்யில் லேசாக வறுத்து தனியாக வைக்கவும்.
*குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+உப்பு+பச்சை மிளகாய் என ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*பின் தயிர்+புதினா சேர்த்து வதக்கவும்.
*கடைசியாக தக்காளி சேர்த்து லேசாக கிளறி அரிசி+3 கப் நீர்+கொத்தமல்லிதழை+நெய் சேர்த்து 3 விசில் வரை வேகவைத்தெடுக்கவும்.
பி.கு
*தக்காளியை சேர்த்ததும் குழைய வதக்ககூடாது,சாதத்தின் கலர் மாறிவிடும்.
*பாதிக்கு பாதி தேங்காய்பாலும் சேர்க்கலாம்.
14 பேர் ருசி பார்த்தவர்கள்:
Kushka romba nalla vandhirukku Menaga.Super ponga.Thanks for trying my recipe.
Semaya irukku, kathirikkai gravy udan saapital eppadi irukkum..
பாஸ்மதி ரைஸில் மசாலா கம்மியாக அருமையாக குஸ்கா சமைத்து நாவூற செய்துவிட்டீர்கள் மேனகா.
I love khuska a lot. will try soon. :) thnx for sharing !
அருமையான குறிப்பு மேனகா. செய்து பார்க்கிறேன். நன்றி.
Thengai paal serthu seithal suvai innum thookalaga irukum.. good post dear
You know? I came to know about this name only when I started blog and it was from my classmate. Like to have it. looks flavourful.
Khuska with fried chicken, i can die for..
wow...looks great..
படத்தைப் பார்த்தாலே அள்ளி சாப்பிடத் தோணுதுங்க...! ம்ம்ம்ம்...
Briyani supera irukku, nalla weekend lunch.
Would love it with potato chips. Simple and flavorful
கிட்டத்தட்ட கீ (ghee)ரைஸ் மாதிரியே இருக்கே.... நான் இவ்வளவு நாளும் குஸ்கா என்றால் செய்ய ரொம்ப கஷ்டம் என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன்???? இவ்வளவு ஈஸியா??? :-))
Looks delicious!!
Saras Dish In 30 minutes ~ Breakfast Recipes with Giveaway
Post a Comment