இந்த பிரியாணியில் வெங்காயம்+தக்காளி+காரம்+நெய் +புதினா+கொத்தமல்லி எதுவும் சேர்க்க தேவையில்லை.இதன் ஸ்பெஷலே வெள்ளை கலரில் தான் இருக்கும்.
காரம் இல்லாததால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.தயிர் பச்சடியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.இதை நான் சிக்கன் குருமாவுடன் பரிமாறினேன்.
Recipe Source : Anisha
தே.பொருட்கள்
முழு கோழி - 1
சிக்கன் ஸ்டாக் செய்ய
பூண்டுப்பல் - 5
துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
சோம்பு +தனியா தலா - 1 டேபிள்ஸ்பூன்
கறுப்பு ஏலக்காய் - 1பிரியாணி இலை - 1
மிளகு - 1 டீஸ்பூன்
கிராம்பு - 2
பச்சை மிளகாய் - 8
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1/2 கப்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
நீர் - 2 கப்
செய்முறை
*குக்கரில் எண்ணெய் விட்டு கிராம்பு+ஏலக்காய்+இஞ்சி பூண்டு சேர்த்து தாளிக்கவும்.
*நறுக்கிய வெங்காயம் + பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
*பின் சிக்கன் தோல்+சிக்கன் துண்டுகள் சிறிது சேர்த்து வதக்கவும்.
*பின் 2 கப் நீர்+உப்பு+தனியா+சோம்பு + மிளகு சேர்த்து 4 5 விசில் வரை வேகவைத்து நீரை வடிக்கவும்.
தே.பொருட்கள்
பாஸ்மதி - 2 கப்
தயிர் - 3/4 கப்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
அரைக்க
இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன்
பூண்டுப்பல் - 10
பட்டை - 1சிறுதுண்டு
ஜாதிக்காய் - 1 துண்டு(சிறிதளவு)
தாளிக்க
மிளகு - 1/2 டீஸ்பூன்
கறுப்பு ஏலக்காய் - 2
செய்முறை
*குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து அரைத்த விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
*பின் கறிதுண்டுகளை சேர்த்து வதக்கி பின் தயிர் சேர்த்து வதக்கவும்.
*உப்பு+சிக்கன் ஸ்டாக் +பாஸ்மதி+நீர் சேர்த்து 3 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.
பி.கு
*இந்த அளவு அரிசிக்கு 3 கப் நீர் (சிக்கன் ஸ்டாக் 3 கப் குறைவாக இருந்தால் மேலும் நீர் சேர்த்து கொள்ளவும்)தேவைப்படும்.
*சிக்கன் ஸ்டாக்கில் உப்பு இருப்பதால் தேவைக்கு பிரியாணி செய்யும் போது உப்பு சேர்க்கவும்.
*இதே போல் ஸ்டாக் மட்டனிலும் செய்யலாம்,கூடுதல் நேரம் வேகவைத்து எடுக்கவும்.
*இதில் முழுஜாதிக்காயில் கால்வாசி சேர்த்தால் போதும்,அதிகம் சேர்த்தால் சுவை மாறிவிடும்.
11 பேர் ருசி பார்த்தவர்கள்:
வெள்ளை கலர்ல பிரியாணி அதும் காரம் இல்லாமயா?! செஞ்சு பார்க்கனும்.
பாதி பொருட்கள் இல்லாமல் ஒரு பிரியாணி... நன்றி சகோதரி...
Menaga name pudhusaa irukkennu parthen recipient pudhusaagavum easyagavun irukkunga very thanks menaga srythu parkkalaam pillainga saappiduvsanganu ninaikkiren..........koini
ரொம்பவும் அருமை மேனகா! வழக்கமான முறையிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கிறது! அவசியம் செய்து பார்க்க வேண்டிய நல்லதொரு ருசியான குறிப்பு!
Wow supera irukku... Bookmarking it...
super Menaga, nalla irukku... I love the name...
காரமில்லாமல் பிரியாணி...
செய்து பார்த்துடலாம்...
//முழு கோழி - 1 //
இந்த முழு கோழியை என்ன செய்யனுமின்னு கடைசி வரை நீங்க சொல்லவே இல்லையே...அவ்வ்வ்வ் :-).
(( முழு கோழி கத்திகிட்டே இருக்கு ஹி..ஹி.. ))
நீண்ட இடைவேளைக்கு பின்னர் நானும் அலிகார் பிரியான ருசி பார்க்க வந்தேன்.
kuska maathiri irukku. veg version senju parkaren :)
குழந்தைகளுக்கு பிடித்தமாக இருக்கும். நல்ல குறிப்பு மேனகா.
Post a Comment