Thursday 25 July 2013 | By: Menaga Sathia

கத்திரிக்காய் ரசவாங்கி / Brinjal Rasavangi


ஆஹா என்ன ருசியில் பார்த்து செய்தது..

ரசவாங்கியில் வெங்காயம்+தக்காளி சேர்க்க தேவையில்லை.இது சாம்பார் மற்றும் கூட்டு  போல் செய்முறையில் மாற்றம் இருக்கும்.

தே.பொருட்கள்

கத்திரிக்காய் - 1 பெரியது
புளிபேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்
வேகவைத்த துவரம்பருப்பு - 1/4 கப்
தேங்காய்ப்பால் - 1/2 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
பெருங்காயத்தூள் - 3/4 டீஸ்பூன்
உப்பு -  தேவைக்கு
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்

தாளிக்க
கடுகு - 1/2 டீஸ்பூன்
கா.மிளகாய் - 3
கடலைப்பருப்பு -  1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி -1 டீஸ்பூன்

செய்முறை

*புளிவிழுதினை 1 1/2 கப் நீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போடு தாளித்து
புளிகரைசல்+உப்பு+மஞ்சள்தூள்+பச்சை மிளகாய் சேர்த்து கொதிக்கவிடவும்.


 *நன்கு கொதித்ததும் கத்திரிகாயை சிறுதுண்டுகளாக நறுக்கி பெருங்காயத்தூள்  சேர்த்து வேகவிடவும்.

 *வெந்ததும் வேகவைத்த து.பருப்பு சேர்த்து கொதிக்கவைக்கவும்.
 *பின் தேங்காய்ப்பால் சேர்த்து சிறிதுநேரம் கொதிக்கவைத்து இறக்கவும்.
பி.கு

சிறிய கத்திரிக்காயில் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

This is off to Priya's Vegan Thursday.

13 பேர் ருசி பார்த்தவர்கள்:

Lifewithspices said...

hv never tasted tis .. looks sooperb

great-secret-of-life said...

it has been a while since I made this.. so tempting

வை.கோபாலகிருஷ்ணன் said...

ரசவாங்கிப் படங்களும் செய்முறை விளக்கங்களும் அருமை. பாராட்டுக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

செய்து பார்ப்போம்... நன்றி...

Priya Anandakumar said...

very delicious Menaga, looks yummy senji romba naal aachi...
thanks for sharing...

KrithisKitchen said...

Rasavangi rusithadhae illai... Kandippa seyya poraen..

'பரிவை' சே.குமார் said...

படங்களும் செய்முறை விளக்கமும் அருமை.

MANO நாஞ்சில் மனோ said...

கத்தரிக்காய் எனக்கு ரொம்பவும் பிடிக்கும், இதை அப்படியே வீட்டம்மாவுக்கு அனுப்பிருதேன்.

Unknown said...

looks yummy..I follow the same recipe with snake gourd..

Priya Suresh said...

Rasavangi naan yethana time venalum saapiduven,super Menaga.

divya said...

Ohhhh mouth watering!!!!!!thanx for the recipe

Sangeetha Priya said...

delicious dish with coconut flavor, love it...

மாதேவி said...

ரசவாங்கி அருமையாக இருக்கின்றது.

01 09 10