Monday, 15 July 2013 | By: Menaga Sathia

கருவாடு தொக்கு/Dry Fish Thokku

கீதாவிடம் பேசிய போது அவர்களின் மாமியார் சமையலை என்னிடம் பகிர்ந்துகிட்டாங்க.அதன்படி இந்த கருவாடு தொக்கு செய்ததில் மிக அருமையாக இருந்தது.

இந்த தொக்கின் ஸ்பெஷாலிட்டி தக்காளி இல்லாமல் செய்வதும்,தேங்காயை நீர் சேர்க்காமல் அரைத்து செய்வதும் தான்.அதுபோல் இந்த தொக்கினை செய்யும்போது நீர் சேர்க்காமல் குறைந்த தீயில் செய்வதுதான் ஸ்பெஷல்.

மிக்க நன்றி கீதா!! இப்போதெல்லாம் க‌ருவாடு தொக்கினைதான் அதிகம் செய்கிறேன்.இதே போல் இறாலிலும் செய்யலாம்.

தே.பொருட்கள்

வஞ்சிர கருவாடு - 1 துண்டு
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 4 பெரியது
சோம்பு -1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
வரமிளகய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை

*கருவாட்டை சுத்தம் செய்து உப்பு+மஞ்சள்தூள்+மிளகாய்த்தூள்+சோம்பு சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

*தேங்காயை நீர் சேர்க்காமல் நன்கு நைசாக அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் நன்கு வதங்கி ப்ரவௌன் கலரில் வரும் போது ஊரவைத்த கருவாட்டினை சேர்த்து சிறுதீயில் வதக்கவும்.

*நன்கு வெந்து சுருண்டுவரும் போது வெங்காயத்தின் கலர் நன்கு பொன்முறுவலாக வரும் போது அரைத்த தேங்காயினை சேர்த்து மேலும் 3-  4 நிமிடங்கள் வரை கிளறி இறக்கவும்.

பி.கு

*தேவையெனில் தேங்காய் அரைக்கும்போது 1 டேபிள்ஸ்பூன் நீர் சேர்த்து அரைக்கலாம்.அதிகம்  நீர் சேர்த்து அரைத்து ஊற்றினால் தொக்கின் சுவை மாறுபடும்.

11 பேர் ருசி பார்த்தவர்கள்:

திண்டுக்கல் தனபாலன் said...

பிடித்த டிஷ்...! ஆனால் வஞ்சிர கருவாடு தான் கிடைப்பதில்லை...

நன்றி...

ஸாதிகா said...

வித்தியாசமாக உள்ளது மேனகா.இடியாப்பத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

Shama Nagarajan said...

yummy

Jaleela Kamal said...

அருமையான கருவாட்டு தொக்கு படம் பார்க்க்கவே ரொம்ப சூப்பர், பருப்பு சாதத்துக்கு வைத்து சாப்பிட்டால் ரொம்ப நல்ல இருக்கும்.

Sangeetha Nambi said...

Super tempting thokku.. Well go with simple rasam...

மனோ சாமிநாதன் said...

தக்காளி இல்லாமல் கருவாட்டுத்தொக்கு பார்ப்பதற்கே மிகவும் சுவையாய்த் தெரிகிறது மேனகா!!

Sangeetha Priya said...

delicious thokku :-)

Priya Anandakumar said...

Very yummy Menaga, supera irrukku. Its been years now after I made karuvadu, yours looks awesome...

MANO நாஞ்சில் மனோ said...

கருவாடு மணம் இங்கவர கமகமக்குதுங்கோ.

Unknown said...

mm nalla suvaiyaana karuvaadu thokku .enga athai kooda oorla itunthu vaangi vanthu seythu tharuvaanga.annum ungainly muraippadi seythu parkiren.thakkali serthaaldhan nalla irukkum karuvaadu Kavuchi thrriyadhunnu en athai niraiya thakkali serpanga.naan ithupola seythu parkiren .thanks menaga.

mano said...

100 கி 70 ரூ,,,thoothukudi

01 09 10