Friday, 13 September 2013 | By: Menaga Sathia

ஒலன் /Olan |Onam Sadya Recipes



தே.பொருட்கள்

நறுக்கிய வெண்பூசணி துண்டுகள் - 250 கிராம்
வேகவைத்த காராமணி -  1/4 கப்
முதலாம் தேங்காய்ப்பால் - 1/4 கப்
இரண்டாம் தேங்காய்ப்பால் - 1 கப்
கீறிய பச்சை மிளகாய் -3
கறிவேப்பிலை - 1 கொத்து
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு  - தேவைக்கு

செய்முறை

*இரண்டாம் தேங்காய்ப்பாலில் பூசணிதுண்டுகள்+உப்பு +பச்சை மிளகாய் சேர்த்து வேகவிடவும்.

*காய் வெந்ததும் காராமணி சேர்க்கவும்.

*க்ரேவி திக்கான பதம் வந்ததும் முதலாம் தேங்காய்ப்பால்+கறிவேப்பிலை+தேங்காய் எண்ணெய் சேர்த்து இறக்கவும்.

*சூடான சாதம்+காரகுழம்புடன் பரிமாற நன்றாக இருக்கும்.

பி.கு
*முதலாம்பால் சேர்த்ததும் க்ரேவியை கொதிக்கவிடக்கூடாது.

*பூசணிக்காய் சீக்கிரம் வெந்துவிடும்.குழைய வேகவிடாமல் 3/4 பதம் வெந்தால் போதும்.







12 பேர் ருசி பார்த்தவர்கள்:

'பரிவை' சே.குமார் said...

ஆஹா... சூப்பரு.......

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஒலன் ...

புதிய பெயராக உள்ளது.

கேள்விப்பட்டதே இல்லை.

எங்கள் வீட்டில் பறங்கிக்காய் பால் கூட்டு என்றும், பூசணிக்காய் மோர்க்கூட்டு என்றும் சொல்லி அவ்வப்போது செய்வார்கள்.

அது போல உள்ளது.

பாராட்டுக்கள்.

படங்களும், செய்முறையும் அழகு.

மிக்க நன்றி, மேனகா.

ஸாதிகா said...

ஆஹா இதுதான் ஓலனா! கண்டிப்பாக டிரை பண்ணவேண்டும்.

ஸாதிகா said...

http://shadiqah.blogspot.in/2013/09/blog-post.html

மேனகா,உங்களை தொடர்பதிவுக்கு அழைத்து இருக்கிறேன்.

great-secret-of-life said...

my fav side dish.. love it

Prema said...

wow yummy olan menaga,luks delicious...

Vimitha Durai said...

Yummy dish

Priya Suresh said...

Delicious olan,superaa irruku Menaga..

Unknown said...

olan looks really delicious..

ADHI VENKAT said...

சுவையான ஓலனுக்கு நன்றி. செய்து பார்க்கிறேன்.

Asiya Omar said...

சூப்பர்,நான் இதில் கொஞ்சம் சேப்பங்கிழங்கும் சேர்ப்பேன்.

Priya Anandakumar said...

Simply superb Menaga...

01 09 10