Tuesday, 10 December 2013 | By: Menaga Sathia

இறால் மசாலா / Prawn Masala - A Guest Post By Asiya Akka




ஆசியா அக்கா -  இவரை எனக்கு அறுசுவையிலிருந்து நன்கு தெரியும்.இவரின் நான் வெஞ் சமையல்கள் வித்தியாசமா நன்றாக இருக்கு.3 வலைப்பூவில் எழுதி வருகிறார்.

ஆங்கில வலைப்பூவில் நிறைய ஈவெண்ட்கலில் கலந்துகொண்டு நிறைய பரிசுகளையும் வென்றிருக்கிறார்...இவரின் தமிழ் வைப்பூவில் ஏராளமான நான் வெஜ் பிரியாணி குறிப்புகள் இருக்கு.

இவரிடம் நான் இறால் அல்லது நண்டு சமையல் கெஸ்ட் போஸ்ட் போடுமாறு கேட்டபோது உடனே இந்த இறால் மசாலை விளக்கபடங்களுடன் எனக்கு அனுப்பி வைத்தார்..

இதோ அவர் அனுப்பிய இறால் மசாலா செய்முறை குறிப்பு.இதில் மசாலாவை வறுத்து பொடித்து செய்திருப்பதால் சுவை நிச்சயம் நன்றாக இருக்கும்.நான் இன்னும் செய்து பார்க்கவில்லை.செய்து பார்த்த பின் படம் இணைக்கிறேன்.

சுவையான குறிப்புக்கு மிக்க நன்றி ஆசியா அக்கா!!

அவரின் சுய அறிமுகத்தை எனக்கு மெயிலில் அனுப்பியதை அப்படியே காப்பி பேஸ்ட் செய்துள்ளேன்..


மேனகா என்னிடம் தன்னுடைய வலைப்பூவில் கெஸ்ட் போஸ்ட் போடும் படி கேட்ட  பொழுது மிக சந்தோஷமாகயிருந்தது.இது தான் என்னோட முதல் முதலான கெஸ்ட் போஸ்ட்.அப்ப  இது ரொம்ப ஸ்பெஷல் தானே!



மேனகா பற்றி சொல்லனும் என்றால் சொல்லிகிட்டே போகலாம், இணைய நட்பில் எனக்கு கிடைத்த ஒரு நல்ல தங்கை.இதுவரை எந்தவொரு கருத்து வேற்றுமையும் இல்லாமல் ஒரே போல் மனதுடன் பழகி வராங்க,புரிந்துணர்வுடன் கூடிய ஒரு நல்ல உறவு.குறிப்புக்கள் கொடுக்கும் விதம் நச்சென்று இருக்கும், சொல்ல வந்ததை சுருக்கமாக அனைவருக்கும் இலகுவாக புரியும்  படி எழுதி குறிப்பு கொடுப்பது எனக்கு அவங்க வலைப்பூவில் மிகவும் பிடித்த விஷயம், அவங்க கொடுக்காத குறிப்பு எது என்று என்னை யோசிக்க வைக்கும் அளவு குறிப்புக்கள் மலை போல் குவிந்து இருக்கு இங்கே.படங்களும் மிகத் தெளிவாக இருக்கும்.இடைவெளி இல்லாமல் ஓரளவு தொடர்ந்து வலைப்பூவில் பகிர்ந்து வருவது மிகவும் பாரட்டப் பட வேண்டிய விஷயம்.

இனி என்னைப்பற்றி சொல்ல வேண்டும் என்றால் ,சொந்த ஊர் நெல்லை, வசிப்பது அல்- ஐன்,அரபு ஐக்கிய அமீரகம்,வேளாண்மை பட்டதாரி, அன்பான மகன்,மகள்,உயிரான கணவர் என்று பூரிக்கும்  மகிழ்ச்சியான இல்லத்தரசி, நான் சமைத்து அசத்தலாம் என்ற வலைப்பூவில் 2010 பிப்ரவரி மாதம் தொடங்கி இதுவரை சமையல் குறிப்புக்கள் கொடுப்பதோடு அல்லாமல் அனுபவம்,கதை என்றும் சில விஷயங்களையும் ஒரு மாற்றத்திற்காக பகிர்ந்து வருகிறேன். 2012 ஜனவரி முதல் மை ஹெல்தி ஹேப்பி கிச்சன் என்ற ஆங்கில வலைப்பூ ,மற்றும் மணித்துளி என்ற வலைப்பபூவும் சென்ற வருடம் ஆரம்பித்து அங்கும் பொதுவாக பகிர்ந்து வருகிறேன்,பொதுவாக என்னோட  இரண்டு சமையல் வலைப்பூக்களில் வேறு வேறு குறிப்புக்கள் கொடுக்க விரும்பி ஓரளவு முயற்சி செய்தும் வருகிறேன்.


 நான் வலைப்பூவிற்காக எடுக்கும் புகைப் படங்களில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை,நான் சமைக்கும் சமயம் அவசரமாக மொபைலில் என்ன எடுக்கிறேனோ அது தான்.அது எப்படி வந்தாலும் பகிர்ந்து விடுவேன்.என்னோட குறிக்கோள் வலைப்பூவிற்காக அதிகம் நேரம் மெனக்கெடாமல் ஒரு பொழுது போக்காக நான் சமைப்பதை படங்களோடு புதிதாக சமைப்பவர்களுக்கு பயன் தரும் வகையில் பகிர வேண்டும் எனபதே! முக்கியமாக மதிய உணவுகள் அதிகம் பதிவு செய்கிறேன். நேரம் கிடைக்கும் பட்சத்தில் தொடர்ந்து முடிந்தளவு பல வித்தியாசமான குறிப்புக்கள் பகிரவும் ஆசைப்படுகிறேன்.


மேனகா என்னிடம் கெஸ்ட் போஸ்ட் பற்றி சொன்ன பொழுது ஏதாவது குறிப்பிட்ட சமையல்  வேண்டுமா ? என்று கேட்டேன், இறால் அல்லது நண்டு சமையல் செய்து அனுப்புங்க அக்கான்னு சொன்னாங்க, அதனால் என்னோட இந்த  இறால் மசாலா செய்து அசத்தியாச்சு.இதில் வறுத்துப் பொடித்து மசாலா சேர்ப்பதால் அதன் சுவை நிச்சயம் வித்தியாசமாக இருக்கும் .நீங்களும் செய்து பாருங்க.

இறால் மசாலா குறிப்பு இதோ உங்களுக்காக சஷிகாவில் பகிர்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.இந்த அருமையான வாய்ப்பு அளித்த மேனகாவிற்கு மனமார்ந்த நன்றியையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேவையான பொருட்கள்; 

இறால் - அரைக்கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 + 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 (அ)  2  டீஸ்பூன்
நறுக்கிய மல்லி, கருவேப்பிலை - சிறிது.
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்


வறுத்து பொடிக்க:

முழு மல்லி - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்


செய்முறை:

முதலில் இறாலை  தண்ணீர் விட்டு அலசவும்.பின்பு  இறால் ஓட்டை நீக்கி,தலைப்பகுதியை நீக்கி பின்பக்கம் இருக்கும் கருப்பு நரம்பு போன்ற பகுதியை கத்தியால் கீறி விட்டு கையால் எடுக்கவும்.இப்படி சுத்தம் செய்த பின்பு இறாலை பளிச்சென்று மீண்டும் மூன்று தண்ணீர் வைத்து அலசி சுத்தமாக தண்ணீர் வடிகட்டி வைக்கவும்.வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி வைக்கவும்.


*தண்ணீர் வடித்த  இறாலுடன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், தேவைக்கு சிறிது உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.


* வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு மல்லி,சீரகம்,சோம்பு வறுத்தெடுக்கவும். ஆற வைக்கவும்.

*பின்பு வறுத்தவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்து எடுக்கவும்.

* ஒரு அடி கனமான கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன்,வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.


* வெங்காயம் நன்கு வதங்கியதும் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.நன்கு வதக்கவும், தக்காளி சேர்க்கவும்.சிறிது உப்பு சேர்க்கவும்.உப்பு பார்த்து அளவாய் சேர்க்கவும்,ஏற்கனவே இறாலில் சிறிது உப்பு சேர்த்து பிரட்டியிருக்கிறோம்.

* வெங்காயம் தக்காளி வதங்கி வரும் பொழுது  இறாலை சேர்க்கவும், கலந்து விடவும். வறுத்துப் பொடித்த மசால் சேர்த்து நன்கு மீண்டும் பிரட்டி மூடவும்.


*. இறாலிலிலேயே  தண்ணீர் ஊறி வரும், வெந்து கூட்டு போல் கெட்டியாகும். அந்த சமயம் மிளகுத்தூள் சேர்க்கவும். பிரட்டி விடவும்.

* நறுக்கிய மல்லி,கருவேப்பிலை தூவி  அடுப்பை அணைக்கவும். சூடாகப் பரிமாறவும்.

*சுவையான இறால் மசாலா ரெடி.

இது சாதத்துடன் பக்க உணவாகச் சாப்பிட அருமையாக இருக்கும்.

13 பேர் ருசி பார்த்தவர்கள்:

sujitha said...

yummy prawn.. looks delicious..

ஸாதிகா said...

தங்கைக்கும்,தோழிக்கும் வாழ்த்துகக்ள்.சுய அறிமுக சுவாரஸ்யம்..அது போல் குறிப்பும் படு சுவை,

சாரதா சமையல் said...

சகோதரி ஆசியாவின் கெஸ்ட் போஸ்ட் இறால் மசாலா குறிப்பு அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

superb...

meena said...

looks so delicious.i get only cooked prawns,do u have any idea abt#the cooking time.

'பரிவை' சே.குமார் said...

வாவ்... சூப்பர்.

Jaleela Kamal said...

கெஸ்ட் போஸ்ட் உடன் இறால் மசாலா கம கமக்கிறது

Unknown said...

Eral masala romba nalla irukku. Aasiya akka ,eppavume super a dhan recipe poduvaanga.

மனோ சாமிநாதன் said...

நல்ல குறிப்பு மேனகா! ஆசியாவிற்கும் உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்!!

Priya said...

arumayana pathivu.asiya akkavai patri athigam therinthu kondathil magilchi.

Asiya Omar said...

Thank you friends for the lovely comments.
@Meena - Total Cooking time maximum 15 minutes.

Chitra said...

Non-veg kalalkkal aa :)

sangeetha senthil said...

வாவ் அருமை...

01 09 10