International Food Challenge - இந்த ஈவெண்டினை சரஸ்வதி மற்றும் ஷோபனா இருவரும் சேர்ந்து நடத்துறாங்க.இதில் அனைத்து வகையான உணவுகளை செய்து ரசித்து ருசிக்கலாம்.மேலும் இதனைப் பற்றி தெரிந்துக் கொள்ள இங்கே பார்க்கவும்.
இந்த மாதம் மஞ்சுளா அவர்கள் ராஜஸ்தானிய மெனுவை நம்மிடையே பகிர்ந்துட்டாங்க.அதில் நான் தாளி மெனுவை தேர்ந்தெடுத்து செய்துள்ளேன்.சுவையான குறிப்புக்கு மிக்க நன்றி மஞ்சுளா!!
தக்காளி சாலட் / Tomato Salad
தே.பொருட்கள்
தக்காளி -2
சாட் மசாலா + வரமிளகாய்த்தூள் - தலா 1/4 டீஸ்பூன்
செய்முறை
* தக்காளியை வட்டமாக நறுக்கி சாட் மசாலா மற்றும் வரமிளகாய்த்தூள் தூவி பரிமாறவும்.விரும்பினால் உப்பு சேர்க்கலாம்.
பாசிப்பருப்பு வடை /Moongdal Vada
தே. பொருட்கள்
பாசிப்பருப்பு -1/2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்
சோம்பு - 3/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -1
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை -சிறிது
கறிவேப்பிலை -சிறிது
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
*பாசிப்பருப்பை 1/2 மணிநேரம் ஊறவைத்து நீறை வடித்து உப்பு+சோம்பு சேர்த்து அரைக்கவும்.
*அதனுடன் வெங்காயம்+பெருங்காயத்தூள்+கறிவேப்பிலை கொத்தமல்லி+பச்சை மிளகாய் சேர்த்து பிசைந்து வடைகளாக தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
ஒரிஜினல் ரெசிபியில் சீரகம் +இஞ்சி சேர்த்திருப்பாங்க அதற்கு பதில் சோம்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்துருக்கேன்.
மிஸ்ஸி ரொட்டி /Missi Roti
தே.பொருட்கள்
கோதுமைமாவு - 1 கப்
கடலைமாவு - 1/2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1 சிறியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -1
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை -2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகப்பொடி -1/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
ஓமம் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
நெய் -சுடுவதற்கு
செய்முறை
*பாத்திரத்தில் நெய் தவிர மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து நீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 1/2 மணிநேரம் வைக்கவும்.
*பின் சிறு உருண்டையாக எடுத்து தேய்த்து தவாவில் நெய் தடவி 2 பக்கமும் சுட்டு எடுக்கவும்.
பப்பட் சப்ஜி /Papad Ki Sabzi
தே.பொருட்கள்
பப்பட் -1 பெரியது
வரமிளகாய்த்தூள் -1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
கடுகு -1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
நீர் -1/4 கப்
செய்முறை
*கடாயில் எண்ணெய் விட்டு கடுகு+கரிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
*பின் தூள் வகைகள் சேர்த்து வதக்கி 1/4 கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.கொதித்ததும் பப்பட்டை உடைத்து சேர்த்து 2-3 நிமிடங்களில் இறக்கவும்.
கறுப்புக் கடலை மோர்க்குழம்பு /Kale Channa Ki Kadhi
தே.பொருட்கள்
கறுப்புக்கடலை -1/4 கப்
தயிர் -1/2 கப்
கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை -சிறிது
உப்பு -தேவைக்கு
தாளிக்க
கடுகு -1/4 டீஸ்பூன்
சீரகம் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
பெருங்காயத்தூள் + வரமிளகாய்த்தூள் -தலா 1/4 டீஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் -2
நெய் - 2 டீஸ்பூன்
செய்முறை
*கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்து உப்பு சேர்த்து வேகவைத்தெடுக்கவும்.
*மிக்ஸியில் தயிர்+உப்பு+மஞ்சள்தூள்+கடலை மாவு சேர்த்து நன்கு அடிக்கவும்.
*பாத்திரத்தில் நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து வேகவைத்த கடலை+ தயிர் கலவையை ஊற்றி கொதிக்கவிடவும்.
*இடையிடையே கலக்கி 5-10 நிமிடங்கள் கொதிக்கவைத்து கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.
கோதுமைமாவு அல்வா / Atte Ke Sheera
தே.பொருட்கள்
கோதுமைமாவு +நெய் = தலா 1/4 கப்
கொதிக்க வைத்த நீர் -1 கப்
வெல்லத்துறுவல் -1/8 கப்
செய்முறை
* கடாயில் 1 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு கடலைமாவு வறுக்கவும்.தேவையெனில் மேலும் நெய் சேர்த்து வறுக்கவும்.
*வருபட்டதும் கொதிநீரை கொஞ்சமாக ஊற்றி இடைவிடாமல் கிளறவும்.
*பின் வெல்லத்துறுவல் சேர்த்து கரைந்ததும் மீதமுள்ள நெய்யை ஊற்றி ஒட்டாமல் சுருண்டு வரும் போது இறக்கவும்.
*விரும்பினால் முந்திரியை வறுத்து சேர்க்கலாம்.
10 பேர் ருசி பார்த்தவர்கள்:
wonderful spread , looks delicious and very tempting :)
very nice platter dear. Thanks for sharing
நல்லது...நன்றி...
மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருக்கும் என்று சொல்கிறார்களே... இது காசு, பணம், நகைகள் வைத்து வந்த பழமொழியா...? இல்லை ஆசை, சூது, வஞ்சகம் போன்ற மனித குணங்களை வைத்து வந்த பழமொழியா...?
http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Stress-Fear.html
அருமையான மிகவும் ருசிகரமான பதிவு.
அற்புதமான படங்கள்.
பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
அன்புள்ள மேனகா,
என் தொடரின் முதல் 89 பகுதிகளுக்கும் வருகை தந்து கருத்தளித்துள்ளீர்கள். மிக்க நன்றி.
Please visit my Serial's Part-90 today itself.
http://gopu1949.blogspot.in/2013/12/90.html
இன்றே கடைசிநாள் என என் கணக்குப்பிள்ளை கிளி அறிவிக்கிறது.
அன்புடன் கோபு
Super Menaga. Thanks for sharing.
Delicious spread, thali looks very tempting..
wonderful thali...
looks sooo delicious n yummy..
சிறப்பான குறிப்புகள்... பகிர்வுக்கு நன்றி..
Post a Comment