Monday 4 August 2014 | By: Menaga Sathia

பேக்ட் வரகு (உப்பு&இனிப்பு) சீடை / Baked Varagu (Salt&Sweet) Seedai | Kodo Millet (Salt & Sweet) Seedai |Millet Recipes | Gokulastami Recipes



print this page PRINT IT
இந்த வாரம் Friendship 5 Series நாம் பார்க்க போவது பண்டிகை ஸ்பெஷல்

முதன் முதலாக செய்ததால் 1/2 கப் மட்டுமே போட்டு செய்தேன்,நன்றாக இருந்தது.அரிசிமாவுக்கு பதில் வரகினை லேசாக வறுத்து ஆறியதும் மாவாக்கி செய்தேன்.

சிறுதானியங்களில் கல் இருக்கும்,அதனால் அதனை நன்கு சுத்தம் செய்டஹ் பிறகே எண்ணெயில் பொரிக்கவேண்டும்,இல்லையெனில் வெடிக்கும் அபாயம் உண்டு.

நன்றாக வரகினை சுத்தம் செய்துதான் பயன்படுத்தினேன்,இருந்தாலும் ஒரு பயம் இருந்தததால் சீடையை அவனில் பேக் செய்து எடுத்தேன்.

பேக்ட் வரகு உப்புச் சீடை

தே.பொருட்கள்

வரகு மாவு 1 -/2 கப்
வறுத்த உளுத்தமாவு  - 1 1/2 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
எள் - 1/2 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் -  1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1/4டீஸ்பூன்+1/8 டீஸ்பூன்
எண்ணெய் - ஸ்ப்ரே செய்ய‌

செய்முறை

*எண்ணெய் தவிர கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கலந்து தேவையான நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து 10 நிமிடங்கள் வைக்கவும்.

*பின் சிறு உருண்டைகளாக பிடித்து 10 - 15 நிமிடங்கள் உலர்ந்தவும்.

.அவன் டிரேயில் அலுமினியம் பேப்பர் வைத்து எண்ணெய் தடவி உருண்டைகளை வைத்து 200°C முற்சூடு செய்த அவனில் 10 நிமிடம்
வைக்கவும்.

*பின் டிரேயினை ஷேக் செய்து எண்ணெய் ஸ்ப்ரே செய்து மீண்டும் 10 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

பேக்ட் வரகு வெல்லச்சீடை

தே.பொருட்கள்

வரகு மாவு  -1/2 கப்
வறுத்த உளுத்தமாவு -1 டேபிள்ஸ்பூன்
எள் -1/2 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
ஏலக்கய்த்தூள் -1/8 டீஸ்பூன்
நெய்- 1 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் -1 டேபிள்ஸ்பூன்
துருவிய வெல்லம் -1/2 கப்
எண்ணெய் - ஸ்ப்ரே செய்ய‌

செய்முறை

*வெல்லத்தை 1/8 கப் நீர் வைத்து கொதித்ததும் வடிகட்டவும்.

*பாத்திரத்தில் மேற்கூறிய பொருட்களை சேர்த்து வெல்லநீரை கலந்து பிசையவும்,தேவைக்கு நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து 10 நிமிடம் வைக்கவும்.

*பின் சிறு உருண்டைகளாக உருட்டி 10 நிமிடங்கள் உலர்த்தி அவன் டிரேயில் அலுமினியம் பேப்பர் வைத்து எண்ணெய் தடவி உருண்டைகளை வைத்து 200°C முற்சூடு செய்த அவனில் 10 நிமிடம் வைக்கவும்.

*பின் டிரேயினை ஷேக் செய்து எண்ணெய் ஸ்ப்ரே செய்து மீண்டும் 10 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.


பி.கு
இதே போல் மற்ற சிறுதானியங்களிலும் செய்யலாம்.

9 பேர் ருசி பார்த்தவர்கள்:

nandoos kitchen said...

loved this baked version. looks toooo good and healthy..

Sangeetha Priya said...

healthy version!!!

Hema said...

Menaga, I've never tried seedai, vedikkumnu bayam, inda baking idea nalla irukku, varagu arisi use panni, healthyum kooda, super..

Mrs.Mano Saminathan said...

அருமையான குறிப்பு மேனகா! வரகரிசியில் வெல்ல சீடை செய்யும் உத்தி அபாரம்!!

Priya Suresh said...

Baked seedais superaa irruku Menaga, loved the addition of millets here.

GEETHA ACHAL said...

ரொம்ப ஹெல்தியான முறையில் செய்து கலக்கிட்டிங்க...ரொம்ப சூப்பராக இருக்கின்றது...கொஞ்சம் இங்கே பார்சல் செய்யுங்க...

sangeetha senthil said...

வாவ் ... கலக்கிடிங்க sashiga ... நானும் செய்து பார்க்கிறேன் ...நன்றி

Shama Nagarajan said...

delicious ...

Anuprem said...

இன்று தான் உங்கள் தளத்திற்கு வந்தேன் .....அருமையான குறிப்புக்கள்....

01 09 10