Friday, 19 December 2014 | By: Menaga Sathia

பஞ்சாபி பிந்தி(வெண்டைக்காய்) மசாலா /Punjabi Bhindi Masala



தே.பொருட்கள்

வெண்டைக்காய் - 1/4 கிலோ
பொடியாக நறுக்கிய வெங்காயம்+தக்காளி  - தலா 1 
தனியாத்தூள் -  1 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா+மஞ்சள்தூள் - தலா 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கசூரி மேத்தி -  1/2 டீஸ்பூன்
ஆம்சூர் பவுடர் - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை

*வெண்டைக்காயை கழுவி துடைத்து 1 இஞ்ச் அள்வில் நறுக்கி,கடாயில் சிறிது எண்ணெய் விட்டு 10 நிமிடங்கள் வரை வதக்கி தனியாக வைக்கவும்.

*பின் அதே கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+இஞ்சி பூண்டு+தூள்வகைகள் என ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் வதக்கிய வெண்டைக்காய் சேர்த்து மேலும் 10 நிமிடங்கள் வரை சிறுதீயில் கிளறி கசூரி மேத்தி+ஆம்சூர் பொடி சேர்த்து இறக்கவும்.

*சாதம்(அ) ரொட்டியுடன் சூடாக பரிமாறவும்.

7 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

Bhindi masala looks so yummy!!

மனோ சாமிநாதன் said...

இது எனக்கு மிகவும் பிடித்த குறிப்பு. குறிப்பும் புகைப்படமும் சிறப்பாக இருக்கிறது மேனகா!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அருமையான செய்முறை விளக்கம் செய்து பார்க்கிறோம் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Unknown said...

Delicious Bhindi.. Love to have with roti's

Vimitha Durai said...

super side dish

விச்சு said...

பார்க்கவே அழகா இருக்கு...

'பரிவை' சே.குமார் said...

நல்ல ரெஸிபி சகோதரி..

அரபு நாட்டில் கசூரி மேத்திக்கும் அம்பூர் பொடிக்கும் எங்க போறது?

01 09 10