Thursday, 19 February 2015 | By: Menaga Sathia

முருங்கைக்கீரை கடையல்/ DRUMSTICK LEAVES(MURUNGAIKEERAI) KADAIYAL


print this page PRINT IT
தே.பொருட்கள்
சுத்தம் செய்த முருங்கைக்கீரை -2 கப்
துவரம்பருப்பு -1/3 கப்
பூண்டுப்பல்- 4
பச்சை மிளகாய்- 2
உப்பு+எண்ணெய் -தேவைக்கு

தாளிக்க‌
வடகம் -1/2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -1

செய்முறை
*குக்கரில் துவரம்பருப்பு+பச்சை மிளகாய்+பூண்டு +தேவையான  நீர் சேர்த்து 2 விசில் வரை வேகவிடவும்.


*இப்போழுது பருப்பு முக்கால் பதம் வெந்து இருக்கும்.அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.

*கீரையை சேர்த்து மூடி போடாமல் வேகவிடவும்.



*கீரை வெந்ததும் நன்கு ஆறவிடவும்.

*ஆறியதும் கீரையில் இருக்கும் நீரை வடித்துவிட்டு கீரை மட்டும் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.


*பின் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து அதனையும் அரைத்த கீரையில் சேர்த்து 1 சுற்று சுற்றி எடுக்கவும்.



*கீரை வேகவைத்த நீரை சேர்த்து கலக்கி பரிமாறவும்.

பி.கு 

*கீரை கலவை கெட்டியாக இருந்தால் சாதம் வடித்த நீரை சேர்த்து கலக்கி பரிமாறவும்.குளிர்ந்தநீரை சேர்க்கவேண்டாம்.

*கீரை வேகவைக்கும் போது மூடி போட்டு வேகவைக்கவேண்டாம்,கீரையின் நிரம் மாறிவிடும்.


5 பேர் ருசி பார்த்தவர்கள்:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

இரும்புச்சத்து நிறைந்த உணவு... அருமையான விளக்க குறிப்பு எனக்கு பிடித்தது என்னவென்றால் முருங்கை கீரை சுண்டல் விரும்பி சாப்பிடுவது வழக்கம்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

”தளிர் சுரேஷ்” said...

சத்தான சமையல் பகிர்வு! நன்றி!

தனிமரம் said...

வித்தியாசமான செய்முறை பகிர்வுக்கு நன்றிகள்.

great-secret-of-life said...

healthy and tasty masiyal perfect for steamed rice

'பரிவை' சே.குமார் said...

வித்தியாசமான செய்முறை....
அருமை.

01 09 10