PRINT IT
இந்த பதிவு எனக்கு மிகவும் ஸ்பெஷல்,ஏனென்றால் இது என்னுடைய 1000 வது பதிவு !! நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி...
ஏற்கனவே நான் இனிப்பு பூந்தி செய்துருக்கேன்,லட்டுக்காக செய்த பூந்தி பாகு ஆறிவிட்டதால் உருண்டை பிடிக்க முடியவில்லை.அதனை அப்படியே இனிப்பு பூந்தியாக பயன்படுத்திவிட்டேன்.
இனிப்பு பூந்தி செய்வதற்கு ,சர்க்கரை பூத்து போனதுபோல் வருவதற்கு இரண்டு கம்பிபதம் மிக முக்கியம்.
இதில் ஆரஞ்சு மற்றும் பச்சை கலர் சேர்த்து செய்துள்ளேன்,கலர் சேர்க்காமல் ப்ளெயினாகவும் செய்யலாம்.
தே.பொருட்கள்
கடலைமாவு- 2 கப்
அரிசி மாவு- 1/4 கப்
பேக்கிங் சோடா -1 சிட்டிகை
சர்க்கரை- 2 கப்
ஏலக்காய் பொடி- 1/4 டீஸ்பூன்
பச்சை கற்பூரம்- 1 பிஞ்ச்
ஜாதிக்காய் பொடி -1/8 டீஸ்பூன்
கிராம்பு- 3
முந்திரி- 10
திராட்சை- 10
நெய்- 2 டீஸ்பூன்
ஆரஞ்சு மற்றும் பச்சை கலர் -1 துளி
எண்ணெய் பொரிக்க
செய்முறை
*கடலைமாவு+அரிசிமாவு+பேக்கிங் சோடா ஒன்றாக கலந்து நீர் சேர்த்து கரைத்து கெட்டியாக கொள்ளவும்.
*ஒரு பெரிய குழிக்கரண்டி மாவினை எடுத்து 2 கிண்ணங்களில் ஆரஞ்சு மற்றும் பச்சை கலர் கலந்து வைக்கவும்.
*எண்ணெய் காயவைத்து பூந்திகரண்டி அல்லது ஜல்லிகரண்டி வைத்து அதன் மேல் ஒரு கரண்டி மாவினை ஊற்றி தேய்த்து பூந்திகளாக பொரித்தெடுக்கவும்.
*இதேபோல் மற்ற ஆரஞ்சு மற்றும் பச்சை கலர் மாவினை செய்துக் கொள்ளவும்.
*ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து 1 கப் நீர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை கொதிக்கவிடவும்.
*சர்க்கரை கரைந்து இரண்டு கம்பி பதம் வரும் போது இறக்கிவிடவும்.(இரண்டு கம்பி பதம் என்பது பாகினை 2 விரல்களுக்கிடையே தொட்டு பார்த்தால் 2 நூலிழைபோல வரும்).
*இப்போழுது பூந்தி+பச்சை கற்பூரம்(நொறுக்கி சேர்க்கவும்)+ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.
*நெய்யில் முந்திரி+திராட்சை+கிராம்பு+ஜாதிக்காய்த்தூள் இவற்றை வறுத்து பூந்தியில் சேர்த்து நன்றாக கிளறவும்.
*சர்க்கரை பாகு ஆறம்போது பூந்தி பூத்து போய் உதிர் உதிராக வரும்.
*நன்றாக ஆறியதும் காற்றுபுகாத பாத்திரத்தில் வைத்து பயன்படுத்தவும்.
பி.கு
*கடலைமாவில்,கரண்டியின் பின் பக்கத்தில் தோய்த்து எண்ணெயில் விட்டால் பூந்தியில் வால் போல வந்தால் மாவு கெட்டியாக இருக்கிறது என அர்த்தம்,1 டீஸ்பூன் அளவு நீர் சேர்த்து கரைத்து செய்யவும்.
*பூந்தி தட்டையாக வந்தால் மாவு நீர்க்க இருக்கிறது,1 டீஸ்பூன் கடலைமாவு சேர்த்து கரைக்கவும்.
*பூந்திகளை மொறுமொறுவென பொரிக்க தேவையில்லை,லட்டுகளுக்கு செய்வது போல லேசாக வெந்தாலே போதும்.
*பச்சை கற்பூரத்தை சிறிதளவே சேர்க்கவும்.
Add caption |

8 பேர் ருசி பார்த்தவர்கள்:
1000 வது பதிவுக்கு வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்..!! மேனகா. சூப்பரா இருக்கு இனிப்பு பூந்தி.
அருமையான குறிப்பு.
இன்னும் பல ஆயிரம் குறிப்புகள் பதிந்திட வாழ்த்துகள்!
கலர்ஃபுல் பூந்தி சூப்பர். 1000 -மாவது பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து அசத்துங்க மேனகா.
Arumaiyana boondi,1000 padhivai niraivu seiyya edhu migavum porunthum
வணக்கம்
100வது பதிவுக்கு வாழ்த்துக்கள் இன்னும் பல ஆயிர பதிவுகள் மலரட்டும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Congrats! Nice way to celebrate
அருமையான இனிப்புடன் ஆயிரத்தை தொட்டுவிட்டதற்கு பாராட்டுகள் தோழி.
சமையல் செய்றதைவிட அதை அழகா அலங்கரிச்சு தனித்தனியா போட்டோ எடுத்து போஸ்ட் போடவும் எவ்ளோ பொறுமை வேணும்னு ஆச்சர்யப் பட்டுகிட்டே இருக்கிறேன். உங்களைப் போலவே தோழி ஆசியாவும் இந்த விசயத்தில் என்னை ஆச்சர்யப் படுத்துவார்... உண்மையில் இது பெரிய விசயம்பா... சந்தோசமா இருக்கு.
இன்னும் நிறைய நிறைய போஸ்டுகள் போடுங்கன்னு அன்பா வாழ்த்துகிறேன்.
Congrats dear...I wish you to reach so many milestones in future...
Post a Comment