Monday 5 October 2015 | By: Menaga Sathia

கடலைப்பருப்பு சுண்டல் /CHANNA DAL SUNDAL | KADALAI PARUPPU SUNDAL | SUNDAL RECIPES


print this page PRINT IT 
தே.பொருட்கள்

கடலைப்பருப்பு - 1/2 கப்
தேங்காய்த்துறுவல் -2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய மாங்காய் -1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -2
பொடியாக நறுக்கிய இஞ்சி -1/2 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு

தாளிக்க

எண்ணெய் -1 டீஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு  -தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை

*கடலைப்பருப்பை உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து முழ்குமளவு நீர் சேர்த்து வேகவைத்து நீரை வடிக்கவும்.




*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து  பச்சை மிளகாய்+வேகவைத்த கடலைப்பருப்பு +மாங்காய் சேர்த்து வதக்கி தேங்காய்த்துறுவல்+எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.

பி.கு
*விரும்பினால் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்க்கலாம்.

*வடிகட்டிய நீரை வீணாக்காமல் சூப்/ரசம் செய்யலாம்.

1 பேர் ருசி பார்த்தவர்கள்:

great-secret-of-life said...

healthy snack... Looks yum!

01 09 10