Tuesday 13 October 2015 | By: Menaga Sathia

பச்சை பட்டாணி சுண்டல் / Green Peas Sundal | Pachai Pattani Sundal | Sundal Recipes

இந்த சுண்டலில் கொத்தமல்லிதழை+பச்சை மிளகாயினை அரைத்து சேர்த்துள்ளேன்.

தே.பொருட்கள்

பச்சை பட்டாணி -1/2 கப்
கொத்தமல்லித்தழை- 1 கைப்பிடி
பச்சை மிளகாய் -2
தேங்காய்த்துறுவல்- 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய மாங்காய் -1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து
உப்பு -தேவைக்கு

தாளிக்க‌
எண்ணெய்- 1 டீஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு தலா -1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள்- 1/8 டீஸ்பூன்

செய்முறை

*பச்சை பட்டாணியை முதல் நாள் இரவே ஊறவைக்கவும்.

*மறுநாள் குக்கரில் பட்டாணி+உப்பு சேர்த்து தேவைக்கு நீர் ஊற்றி 3 விசில் வரை வேகவைத்து நீரை வடிக்கவும்.

*கொத்தமல்லித்தழை+பச்சை மிளகாயினை கொரகொரப்பாக அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து அரைத்த கொத்தமல்லி மசாலாவை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.


*பின் வேகவைத்த பட்டாணியை சேர்த்து நன்கு கிளறிய பின் தேங்காய்த்துறுவல்+கறிவேப்பிலை+மாங்காயினை சேர்த்து கிளறவும்.



*கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கவும்.

1 பேர் ருசி பார்த்தவர்கள்:

Priya said...

arumaiyana sundal.

01 09 10