Wednesday 7 October 2015 | By: Menaga Sathia

மொச்சை சுண்டல்/ Field Beans ( Mochai ) Sundal | Navaratri Recipes

print this page PRINT IT 
இதில் மசாலாவிற்கு பிஸிபேளாபாத் பொடியை பயன்படுத்தியிருக்கேன்.

தே.பொருட்கள்
மொச்சை- 1/2 கப்
பிஸிபேளாபாத் பொடி- 1 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு

தாளிக்க‌
எண்ணெய் -1 டீஸ்பூன்
கடுகு- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
பெருங்காயப்பொடி -1/4 டீஸ்பூன்

செய்முறை

*மொச்சையை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் உப்பு+தேவைக்கு நீர் சேர்த்து குக்கரில் 3விசில் வரை வேகவைக்கவும்.

*வெந்த மொச்சையை நீரை வடிக்கவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து மொச்சை+பிஸிபேளாபாத் பொடி சேர்த்து சிறிது நேரம் கிளறி இறக்கவும்.

பி.கு
*விரும்பினால் தேங்காய்த்துறுவல் சேர்க்கலாம்.

*வாங்கிபாத் மசாலா சேர்த்தும் செய்யலாம்.

2 பேர் ருசி பார்த்தவர்கள்:

great-secret-of-life said...

So healthy and Interesting to use Bisebalabath podi

'பரிவை' சே.குமார் said...

சூப்பராத்தான் இருக்கும்... ஆனா நம்மதான் பயரெல்லாம் சாப்பிடுவதை விட்டு ரொம்ப நாள் ஆச்சு...

01 09 10