Thursday 1 October 2015 | By: Menaga Sathia

கோஸ் கோப்தா/Cabbage Kofta

தே.பொருட்கள்

துருவிய கோஸ் - 1 கப்
கடலைமாவு - 1/4 கப்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
உப்பு +எண்ணெய் =தேவைக்கு

செய்முறை
*துருவிய கோஸில் உப்பு சேர்த்து பிசைந்து 10 நிமிடங்கள் வைத்திருந்து எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து கெட்டியாக பிசையவும்.
*நீர் சேர்க்க தேவையில்லை.கோஸிலிருந்து வரும் நீரே போதுமானது.
*உருண்டைகளாக உருட்டி குழிபணியார கல்லில் எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.
பி.கு

*விரும்பினால் உருண்டைகளை எண்ணெயில் பொரித்தெடுக்கலாம்.

*கிரேவி போல் செய்து கோப்தக்களை பரிமாறும் போது போட்டு பரிமாறலாம்.

1 பேர் ருசி பார்த்தவர்கள்:

Hema said...

Easy and healthy koftas..

01 09 10