Friday 13 November 2015 | By: Menaga Sathia

கடலைப்பருப்பு குருமா / Channa Dal Kurma | Side Dish For Idli/ Dosa

இந்த குருமா இட்லி,தோசைக்கு பெஸ்ட் காம்பினேஷன். இதில் கடலைப்பருப்பை கொஞ்சமாக சேர்த்து செய்யவும்.அதிகம் சேர்த்தால் குழம்பு கெட்டியாகி சுவை மாறுபடும்.

Recipe Source : Raji

தே.பொருட்கள்
வெங்காயம் -2
தக்காளி - 2
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
கொத்தமல்லிதழை -சிறிது
கடுகு -1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

எண்ணெயில் வதக்கி அரைக்க

கடலைப்பருப்பு -2 டேபிள்ஸ்பூன்
பட்டை -சிறுதுண்டு
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கிராம்பு -2
இஞ்சி -சிறுதுண்டு
பூண்டுப்பல் - 4
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் -2

செய்முறை

*வெங்காயம்+தக்காளியை நறுக்கவும்.

*எண்ணெயில் வதக்க கொடுத்துள்ள பொருட்களுடன் நறுக்கிய வெங்காயம்+தக்காளி இவற்றில் பாதி  சேர்த்து வதக்கி அதனுடன்  சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து தாளிக்கவும்.
*பின் மீதமுள்ள நறுக்கிய வெங்காயம்+தக்காளியை சேர்த்து வதக்கி மஞ்சள்தூள்+மிளகாய்த்தூள்+உப்பு சேர்த்து வதக்கவும்.

*பின் தேவையான அளவு நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
*பச்சை வாசனை போனதும் அரைத்த விழுது சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
*பின் கறிவேப்பிலை,கொத்தமல்லி தூவி இறக்கவும்.
பி.கு

*அரைத்த விழுதினை சேர்த்த பிறகு குருமாவை நீண்ட நேரம் கொதிக்கவிட தேவையில்லை.

*இதனை தண்ணியாக இல்லாமலும்,குருமா போல கெட்டியாக இல்லாமலும் செய்தால் சூப்பரா இருக்கும்.

4 பேர் ருசி பார்த்தவர்கள்:

sangeetha senthil said...

parkave supera irukku akka... muyarchi seithu parkiren ...pagirvukku nandri

great-secret-of-life said...

so comforting.. Yummy!

'பரிவை' சே.குமார் said...

கடலைப் பருப்பு குருமா...
புதுமையா இருக்கே.

மனோ சாமிநாதன் said...

வித்தியாசமான, சுவையான குறிப்பு மேனகா! சீக்கிரம் செய்து பார்க்கிறேன்!!

01 09 10