PRINT IT
அம்மா எப்போழுதும் ஒரே முறுக்கு மாவில் முள்ளு முறுக்கு மற்றும் தேன் குழல் செய்வாங்க.மாமியார் வீட்டில் இந்த முறுக்கு செய்யும் போது எனக்கு புதுசாக இருந்தது.அவரின் இந்த முறுக்குக்கு ஏகப்பட்ட டிமாண்ட்.எல்லோரும் இந்த முறுக்கினை தான் அதிகம் கேட்பாங்க.இதை மட்டும் அதிகமாக செய்வாங்க.
முறுக்கு மாவில் தேங்காய்ப்பால் +பயத்தமாவு சேர்த்து கடைசியில் முறுக்கு சுட்டதும் பொடித்த கல்கண்டில் போட்டு பிரட்டி எடுப்பாங்க.முறுக்கு வெள்ளை வெளேர் என்று இருக்கும்.
அவரிடம் குறிப்பினை கேட்டுகும் இந்த செய்முறை சொன்னதும் எனக்கு சர்க்கரையில் போட்டு எடுப்பது பிடிக்கலைன்னு சொன்னதும் மாவிலையே பொடித்த கல்கண்டை சேர்க்கலாம்னு சொன்னாங்க.
அப்படி சேர்க்கும் போது சில டிப்ஸ்களும் தந்தாங்க,அதனால் தான் அவர் பொடித்த கல்கண்டினை மாவில் சேர்க்காமல் கடைசியில் பிரட்டி எடுப்பதாக சொன்னாங்க.
தே.பொருட்கள்
அரிசிமாவு -2 கப்
பாசிப்பருப்பு மாவு- 1/4 கப்
வெண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்
உப்பு- 1/8 டீஸ்பூன்
கல்கண்டு- 1 1/2 டேபிள்ஸ்பூன்
எள்- 1 டீஸ்பூன்
தேங்காய்ப்பால்- 1/3 கப்
எண்ணெய் -பொரிக்க
செய்முறை
*கல்கண்டினை பொடித்து தேங்காப்பாலில் கலந்து லேசாக சூடு செய்துக் கொள்ளவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் தவிர மீதி பொருட்களை கலந்து சூடு செய்த தேங்காய்ப்பால்+கல்கண்டு கலவையை சேர்த்து பிசையவும்.
*பின் தேவைக்கு நீர் தெளித்து மிருதுவான பதத்தில் மாவினை பிசைந்து வைக்கவும்.
*ஒற்றை ஸ்டார் அச்சியில் மாவினை போட்டு பிழிந்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
*ஆறியதும் காற்று புகாத டப்பாவில் வைத்திருந்து பயன்படுத்தவும்.
பி.கு
*எப்பொழுதும் பிசைந்த முறுக்கு மாவினை மூடி வைக்கவும்.
*தேங்காய்பால்+கல்கண்டு அதிக அளவு சேர்த்தால் முறுக்கு சிவந்துவிடும்.
*இதையே கல்கண்டு சேர்க்காமல் உப்பின் அளவை அதிகபடுத்தில் செய்யலாம்.
*நான் ரெடிமேட் பயத்தமாவு பயன்படுத்தியிருக்கேன்,இல்லையெனில் 1/2 கப் பயத்தம்பருப்பினை லேசாக வெறும் கடாயில் வறுத்து ஆறியதும் பொடித்து,சலித்தபின் பயன்படுத்தவும்.
*இந்த முறுக்கில் சர்க்கரைக்கு பதில் கல்கண்டினையே சேர்க்கவும் ஏனெனில் முறுக்கு சிவந்துவிடுவதற்க்கும் வாய்ப்பு உண்டு.அதனால் தான் மாமியார் மாவில் கலகண்டு பொடியை கலக்காமல் கடைசியில் பிரட்டி விடுவதாக சொன்னார்.
3 பேர் ருசி பார்த்தவர்கள்:
Tasty murukku I have this in my draft too.. Looks perfect
வணக்கம்
செய்முறை விளக்கத்துடன் அசத்தியுள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்பு-
-ரூபன்-
அருமை! பாராட்டுக்கள்!
Post a Comment