Sunday, 31 January 2016 | By: Menaga Sathia

கத்திரிக்காய் பொரிச்ச குழம்பு / Kathirikkai (Brinjal ) Poricha Kuzhambu | Kuzhambu Recipe


print this page PRINT IT

30 நாள் வெஜ் லஞ்ச் மெனுவில் இந்த குறிப்பினை போட்டுள்ளேன்..பொரியல்/வறுவலுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

இதில் வேகவைத்த பாசிப்பருப்பு (அ) துவரம்பருப்பு சேர்க்கலாம்.

அதே போல் வேகவைத்த காராமணி (அ) வேர்கடலை சேர்க்கலாம்.

தே.பொருட்கள்

பொடியாக நறுக்கிய பிஞ்சு கத்திரிக்காய்- 8
புளிகரைசல் -1 கப்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
வேகவைத்த துவரம்பருப்பு- 1/4 கப்
வேகவைத்த வேர்கடலை- 1 கைப்பிடி
சீரகம்- 3/4 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல்- 2 டேபிள்ஸ்பூன்
உப்பு- தேவைக்கு

எண்ணெயில் வறுத்தரைக்க‌

மிளகு- 1/2 டீஸ்பூன்
வெ.உளுத்தம்பருப்பு -2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 6
கறிவேப்பிலை- 1 கொத்து

தாளிக்க‌

எண்ணெய் -2 டீஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து
பெருங்காயத்தூள்- 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 1

செய்முறை

*எண்ணெயில் வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களுடன் சீரகம்+தேங்காய்த்துறுவல் சேர்த்து மைய அரைக்கவும்.

*பாத்திரத்தில் 1 டீஸ்பூன் ஊற்றி நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும்.

*பின் புளிகரைசல்+உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.

*காய் வெந்ததும் அரைத்த விழுது+வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

*நன்றாக கொதித்து வரும் போது வேகவைத்த வேர்கடலை சேர்க்கவும்.


*கடைசியாக மீதமுள்ள எண்ணெயில் தாளித்து சேர்க்கவும்.

1 பேர் ருசி பார்த்தவர்கள்:

ஸ்ரீராம். said...

காராமணி, வேர்க்கடலை சேர்க்க மாட்டோம். பிடிக்காது. அதே போல பெரும்பாலும் பாசிப் பருப்புதான். சுவையான குழம்பு.

01 09 10