அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் !!
பதிவுகள் எழுதி நீண்டநாட்களாகிவிட்டது.3 மாதமாக டிராப்ட் போஸ்ட் மட்டுமே போட்டேன்.
இனி உருளை அல்வாவின் செய்முறையை பார்க்கலாம்.
தே.பொருட்கள்
உருளை -3 நடுத்தர அளவு
சர்க்கரை- 1/2 கப் +2 டேபிள்ஸ்பூன்
குங்குமப்பூ -2 சிட்டிகை
பால்- 1/3 கப் +2 டேபிள்ஸ்பூன்
நெய்- 1/2 கப்
செய்முறை
*உருளையை கழுவி நன்கு வேகவைத்து தோலுரித்து கட்டியில்லாமல் மசித்துக் கொள்ளவும்.
*வேகவைத்த மசித்த உருளையை 1/2 கப் அளவில் எடுத்துக் கொள்ளவும்.
*2 டேபிஸ்பூன் வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூவை ஊறவைக்கவும்.
*நான்ஸ்டிக் கடாயில் 1/2 கப் நெய் ஊற்றி மசித்த உருளையை சேர்த்து நன்கு வதக்கவும்.
*பின் பால் + ஊறவைத்த குங்குமப்பூ சேர்த்து வேகவைத்த பின் சர்க்கரை சேர்க்கவும்.
*சர்க்கரை இளகி ஓரங்களில் ஒட்டாமல் சுருண்டு வரும் பதத்தில் இறக்கவும்.
*சுவையான அல்வா தயார்...
5 பேர் ருசி பார்த்தவர்கள்:
அருமை. ஊற வைத்து அரைத்த பாதாமையும் சேர்ப்பேன்.
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள், மேனகா :)!
மிக்க நன்றி அக்கா கூடுதல் டிப்ஸ்க்கு....தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!
சூப்பர்..
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
அருமை. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
Post a Comment