Thursday 9 February 2017 | By: Menaga Sathia

பிடி கருணை மசியல் / Pidi Karunai Masiyal | Karunai Kizhangu Masiyal

 30 நாள் வெஜ் லஞ்ச் மெனுவில் சேனை கிழங்கில் மசியல் செய்துருப்பேன்.சேனை கிழங்கை விட  பிடி கருணை மசியல் நன்றாக இருக்கும்.

பிடி கருணையின் அரிப்பு தன்மையை போக்க வாங்கியதும் உடனே சமைக்காமல் 2 வாரம் கழித்து சமைத்தால் அரிப்பு இருக்காது.

மேலும் இதனை வேக வைக்கும் போது தேங்காய் ஒடு சேர்த்து வேகவைத்தாலும் அரிப்பு இருக்காது என்பது என் அம்மாவின் டிப்ஸ்.

இந்த குறிப்பினை முகநூல்  பானுமதி மாமியிடம் கற்றுக்கொண்டேன்.

தே பொருட்கள்
பிடிகருணை - 6
சிறிய தேங்காய் ஒடு - பிடிகருணை வேகவைக்க
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு -1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு

செய்முறை
*பிடி கருணையை மண்ணில்லாமல் கழுவி தேங்காய் ஒடு சேர்த்து குக்கரில் 2 விசில் வரை வேகவிடவும்.

*வெந்ததும் தோலுரித்து கட்டியில்லாமல் மசித்துக் கொள்ளவும்.
 *பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து பச்சை மிளகாய்,இஞ்சி,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
 *பின் மசித்த கருணை,உப்பு சேர்த்து தேவையானளவு நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
*லேசாக கொதித்ததும் எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.

பி.கு
*இதனை சாதத்தில் சேர்த்து  வறுவலுடன்  சேர்த்து சாப்பிடலாம்.அல்லது பக்க உணவாக காரகும்புடன் சேர்த்து சாப்பிடலாம்.

3 பேர் ருசி பார்த்தவர்கள்:

Angel said...

இங்கே கிடைக்குமான்னு பார்கிரேன்பா ..அம்மா புளி குழம்பு செய்வாங்க ஊர்ல ..தேங்காய் ஓட்டுக்கு இப்படி ஒரு யூஸ் இருக்கா ..இனிமே சேர்த்து வைக்கணும்

ராஜி said...

புதுசா இருக்கு ரெசிப்பி. ஐ ட்ரை திஸ்

'பரிவை' சே.குமார் said...

இங்க இல்லை...
ஊருக்குப் போகும்போது பார்க்கலாம்....

01 09 10