Wednesday 1 February 2017 | By: Menaga Sathia

பிரண்டை துவையல் / Pirandai (Adamant Creeper ) Thuvaiyal | Pirandai Chutney



பிரண்டை துவையல் சாப்பிடுவது சுவையின்மையை நீக்கி பசியை தூண்டும்.இது செரிமாண சக்தியை தூண்டும்,அஜீரணக் கோளாறை நீக்கும்.மேலும் இதன் துவையல் சாப்பிடுவதால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி,வீக்கம் குணமாக்கும்.

பிரண்டை உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும்.

இந்த துவையலின் ரெசிபியை விற்றவரிடமே கேட்டு செய்தேன்.மிகவும் வித்தியாசமான சுவையில் இருந்தது.
Pirandai
 தே.பொருட்கள்

பிரண்டை -1 கற்று
இஞ்சி- 2 டேபிள்ஸ்பூன்
பூண்டுப்பல் -1/4 கப்
புளி -சிறிய எலுமிச்சை அளவு
காய்ந்த மிளகாய்- 8
உப்பு- தேவைக்கு
எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*பிரண்டையை கழுவி ,நடு கணுவை நீக்கி நறுக்கி நார் நீக்கவும்.
 *இதனை நறுக்கும் போது கையில் அரிப்பு ஏற்படும்,கையில் எண்ணெய் தடவி நறுக்கினால் அரிக்காது.

*பின் பிரண்டையை பொடியாக நறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய இஞ்சி,பூண்டு,காய்ந்த மிளகாய் என தனிதனியாக வறுத்து எடுக்கவும்.
*கடைசியாக நறுக்கிய பிரண்டையை சேர்த்து நன்கு வெளிர் நிறமாக மாறும் வரை வதக்கி எடுக்கவும்.

*ஆறியதும் ஒன்றாக புளி+உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும்.

*சாதத்தில் நெய்/நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

பி.கு

*பிரண்டையை நன்கு வதக்கவில்லை எனில் சாப்பிடும் போது அரிப்பு எடுக்கும்.

*உளுத்தம் ப‌ருப்பு சேர்க்காமல் அரைத்ததில் துவையல் மிகவும் சுவையாக இருந்தது.

2 பேர் ருசி பார்த்தவர்கள்:

Angel said...

Do you get this in Paris? ? ..

Shall try if I can get it from asian punjab shops

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றி சகோதரி...

01 09 10