Sunday 21 May 2017 | By: Menaga Sathia

வெண்டைக்காய்&பாகற்காய் வத்தல் / Okra & Bittergourd Vathal | Summer Spl

வெண்டைக்காய் மற்றும் பாகற்காய் வத்தல் செய்யும் போது தயிர் சேர்த்து செய்ய வேண்டும்.
வெண்டைக்காயில் தயிர் சேர்ப்பது அதன் கொழகொழப்பு தன்மையை நீக்கும்.பாகற்காயில் தயிர் சேர்ப்பது வாசனையாகவும்,கசப்பில்லாமலும் இருக்கும்.
பாகற்காய் வத்தல் சேர்த்து குழம்பு செய்யும் போது அதனுடன் வேறு காய் வத்தல் சேர்த்து செய்ய வேண்டாம்.

தே.பொருட்கள்
வெண்டைக்காய் -1/4 கி
பாகற்காய் -1/4 கி
புளித்த தயிர்  - 1 கப்
உப்பு-தேவைக்கு

செய்முறை

*காய்களை கழுவி வெண்டைக்காயை நடுத்தர துண்டுகளாகவும்,பாகற்காயை வட்டமாகவும் நறுக்கவும்.

*நான் மிதி பாகற்காயில் செய்துள்ளேன்,பெரிய பாகற்காயில் செய்யும் போது நறுக்கும் போது விதைகளை நீக்கவும்.

*நறுக்கிய வெண்டைக்காயினை மட்டும் 1 நாள் முழுக்க வெயிலில் காய வைக்கவும்.

*தயிரை உப்பு சேர்த்து நன்கு கடைந்துக் கொள்ளவும்.

*மாலையில் காய வைத்த வெண்டைக்காயில் கடைந்த 1/2 கப் தயிர் சேர்த்து ஊறவைக்கவும்.

*பாகற்காயில் மீதி 1/2 கப் தயிர் சேர்த்து கலக்கி 1 நாள் ஊறவைக்கவும்.

*மறுநாள் வெயிலில் காய்களை மட்டும் எடுத்து காயவைக்கவும்.மாலையில் திரும்ப தயிரில் ஊறபோடவும்.

*இதே போல் தயிர் வற்றும் வரை செய்து பின் நன்கு வெயிலில் காயவைத்து எடுத்து வைக்கவும்.

*காய்கள் இல்லாத சமயத்தில் இந்த வத்தல் போட்டு குழம்பு செய்யலாம்.


4 பேர் ருசி பார்த்தவர்கள்:

Angel said...

ஆவ் !!வெண்டைக்காய் வற்றல் இப்போதான் கேள்விப்படறேன் ..வற்றல் நல்லா இருக்கு ..இங்கே தொடர்ந்து ரெண்டு நாள் வெயில் தான் கஷ்டம் ..பாப்போம் வந்தா செய்து சொல்றேன்

Menaga Sathia said...

@ Angelin

செய்து பாருங்க ஏஞ்சல்,நன்றாக இருக்கும்.நன்றிப்பா !!

வை.கோபாலகிருஷ்ணன் said...

வெண்டைக்காய் வற்றலும், பாகற்காய் வற்றலும் செய்முறை + படங்களுடன் மிக அழகாகக் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.

இவற்றைவிட சுண்டைக்காய் வற்றல் + துமுட்டிக்காய் அல்லது மினுக்கு வற்றல் என காது ஜிமிக்கி போல ஒன்று இருக்கும். அவை இரண்டும் எனக்கு மிகவும் பிடித்தமான ருசியோ ருசியானவைகளாகும். இங்குள்ள கடைகளில் ரெடிமேடாக வற்றலாகவே அவை கிடைக்கின்றன.

Lifewithspices said...

our favorite at home, should make it some time.. over veyil adhaan problem

01 09 10