Thursday, 13 February 2014 | By: Menaga Sathia

ஸ்ட்ராபெர்ரி ரோஸ் பூங்கொத்து /Strawberry Rose Bouquet |Valentines Day Spl - A Guest post By Geetha Achal


கீதா ஆச்சல் - இவரை ஏற்கனவே நான் அவருக்கு கெஸ்ட் போஸ்ட் போட்ட பதிவினில் சொல்லியிருக்கிறேன்.அவரிடம் எனக்கு கெஸ்ட் போடுமாறு நான் கேட்ட போது,அவர் எனக்கு அனுப்புகிறேன் என்று சொல்லிய குறிப்புகளை எல்லாம்  நான் போஸ்ட் செய்துவிட்டதால் என்ன அனுப்புவதென்று அவருக்கு தெரியவில்லை.

கடைசியாக இந்த ஸ்ட்ராபெர்ரி பூங்கொத்து  பதிவினைப் பற்றி சொல்லியபோது நானும் ஆர்வமாகி அனுப்ப சொன்னேன்.இதோ அவருடைய அழகான ஸ்ட்ராபெர்ரி ரோஸ் பூங்கொத்து.மிக்க நன்றி கீதா!!

இந்த அழகான பூங்கொத்தினை  எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

தே.பொருட்கள்

ஸ்ட்ராபெர்ரி பழங்கள் - 250 கிராம்
சிறிய கத்தி
மூங்கில் குச்சிகள் -தேவைக்கு
வெங்காயத்தாளின் பச்சை கலர் பகுதி -தேவைக்கு

செய்முறை


* ஸ்ட்ராபெர்ரி பழத்தினை ஒன்று எடுத்துக் கொள்ளவும்.
 *அதனை அடிப்பக்கமாக எடுத்துக் கொண்டு,மேலிருந்து கீழாக முழுவதும் கீறிவிடாமல் நான்கு இதழுகளாக மெதுவாக கீறி இழுக்கவும்.
 *இதே போல் முதல் 4 இதழ்க்கு நேருமாறாக முன்பு சொன்னதுபோல் 4 இதழுகளாக கீறி மெதுவாக இழுக்கவும்.
 *இப்போ இதனை பார்ப்பதற்கு அழகான ரோஜாப்பூ போல இருக்கும்.
 *இந்த படத்தினை பார்க்கும் போது நிஜப்பூக்களை போலவே இருக்கு இல்லையா..
 *வெங்காயத்தாளின் பச்சைகலர் பகுதியை மட்டும் எடுத்து அதனை மெதுவாக மூங்கில் குட்டியில் சொருகி பூவின் அடிப்பாகத்தில் சொருகிவிடவும்.



*பூச்சாடியில் சொருகி அலங்காரமாக 1 நாள்வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

பி.கு
*அதன் பிறகு அந்த பழத்தினை என்ன செய்வதென்று கேட்பவர்களுக்கு பதில் கீதா தான் சொல்லனும்..


Tuesday, 11 February 2014 | By: Menaga Sathia

வெந்தய தோசை/Vendaya Dosa


இந்த தோசை உடலுக்கு மிக குளிர்ச்சியை தரும்,மிகவும் நல்லது.உளுந்துக்கு பதில் வெந்தயம் கூடுதலாக சேர்த்து செய்வது தான் இந்த தோசை.இதில் இட்லி சரியாக வராது.

தே.பொருட்கள்
புழுங்கலரிசி  - 3 கப்
வெந்தயம் - 2 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை

*அரிசி+வெந்தயம் இவற்றை தனிதனியாக 4 மணிநேரம் ஊறவைக்கவும்.



*முதலில் கிரைண்டரில் வெந்தயத்தை சேர்த்து உளுந்து அரைப்பது போல் நன்கு பொங்க அரைத்து அதிலேயே அரிசியை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*உப்பு சேர்த்து 8 மணிநேரம் புளிக்க வைத்து தோசையாக ஊற்றி எடுக்கவும்.
*தோசையை ஊற்றி மூடிபோட்டு வேகவைத்து எடுக்கவும்.மறுபக்கம் திருப்பி போட சரியாக வராது.


*இதற்கு தொட்டுக்கொள்ள காரமான சட்னிதான் நன்றாக இருக்கும்.
Saturday, 8 February 2014 | By: Menaga Sathia

அசைவ பிரியாணி வகைகள் / Non Veg Biryani Varieties | Collection Of Recipes

Non – Veg Biryani Varieties

மட்டன்  பிரியாணி வகைகள் / Mutton Biryani Varieties
Chettinad  Biryani
Hyderabad Biryani
Thalapakattu Biryani
Mutton Pulao
Parankipettai Biryani
Madras Biryani
Ambur Star Hotel Biryani
Mutton Biryani
Mutton Biryani -2



Malabar Biryani

சிக்கன் பிரியாணி வகைகள் / Chicken Biryani Varieties

Chicken Biryani
Anjappar Style Biryani
Chicken Pulao

Hyderabad Biryani
Ambur Biryani
Aligarh Biryani



 Kovai Hotel Anganan Biryani
Kovai Hotel Anganan Biryani
Sivakasi Biryani
Sivakasi Biryani

கடல் உணவு பிரியாணி வகைகள் / Sea Food Biryani Varieties

Prawn Biryani
Fish Biryani

Thursday, 6 February 2014 | By: Menaga Sathia

ஹார்ட் ஷேப் முறுக்கு/ Heart Shaped Murukku | Valentine's Day Spl


 இந்த ரெசிபியின் செய்முறை  ரிங் முறுக்கு  செய்வது போல தான் ,நான் வட்டமாக செய்வதற்கு பதில் இதய வடிவில் செய்துள்ளேன்.முறுக்கு அச்சில் ஒற்றை நாழியில் போட்டு நீளமாக பிழிந்து இதய வடிவில் ஷேப் எண்ணெயில் பொரிக்க வேண்டும்.கையால் உருட்டியும் செய்யலாம் ரொம்ப நேரமாகும்.

Recipe Source - Hotpotcooking

தே.பொருட்கள்

அரிசி மாவு -1 கப்
பாசிபருப்பு -1.5 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் -1 கப்
எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்
எள் -1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
உப்பு -1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க

செய்முறை

*பாசிப்பருப்பை 1 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும்.

*பாத்திரத்தில் தண்ணீர்+உப்பு+ஊறவைத்த பாசிப்பருப்பு+1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொதிக்கவிடவும்.
*கொதிக்கும் அரிசிமாவை சேர்த்து கிளறி 15 நிமிடம் மூடி வைக்கவும்.
*ஆறியதும் மிளகாய்த்தூள்+எள் சேர்த்து பிசையவும்.
*உருட்டும் போது மாவு உடைந்தால் மேலும் சிறிது வெந்நீர் சேர்த்து பிசையலாம்.
*சிறிய உருண்டை மாவு எடுத்து மெலிதாக கயிறு போல் உருட்டி இதய வடிவில் செய்யவும்.

அல்லது முறுக்கு அச்சில் போட்டு செய்யலாம்.ரொம்ப ஈசி ஆனா பிழியதான் கொஞ்ச கஷ்டமா இருந்தது.

*முறுக்கினை ஈரத்துணியால்  உலராதவாறு மூடி வைக்கவும்.பின் எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

This is off to Priya's Vegan Thursday
Monday, 3 February 2014 | By: Menaga Sathia

சிக்கன் மலாய் கபாப் / Murg Malai Kabab | Chicken Appetizer Recipe

 இதில் பப்பாளி விழுது (அ ) Meat Tenderiser பதில் எலுமிச்சை சாறு சேர்த்தும் சீஸ் சேர்க்காமலும் செய்தேன்.இதுவே மிக சுவையாக இருந்தது.

பரிமாறும் அளவு - 3
ஊறவைக்கும் நேரம் - 1 மணிநேரம் 30 நிமிடங்கள்
பேக்கிங் நேரம் - 20 நிமிடங்கள்

தே.பொருட்கள்

மூங்கில் குச்சிகள் -4  (தண்ணீரில் 2 மணிநேரம் ஊறவைக்கவும்.)

பாகம் -1
எலும்பில்லாத சிக்கன் - 15 துண்டுகள்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

பாகம் - 2
ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை
ப்ரெஷ் கீரீம் - 1 டேபிள்ஸ்பூன்
தயிர் - 2 டீஸ்பூன்
சோளமாவு - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் கொத்தமல்லிதழை விழுது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவைக்கு

செய்முறை

*பாகம் -1 ல் கொடுத்த பொருட்களை ஒன்றாக கலந்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.

 *பின் பாகம் -2 கொடுக்கப்பட்ட பொருட்களை ஒன்றாக கலந்து  ஊறவைத்த சிக்கனில் கலந்து மீண்டும் 1 மணிநேரம் ஊறக்கவும்.
 *மூங்கில் குச்சியில் சொருகி  அவனில் 210°C டிகிரியில்  20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
*பரிமாறும் போது சாட் மசாலா தூவி பரிமாறவும்.

பி.கு

இளம் கோழியாக இருந்தால் Meat Tenderiser தேவையில்லை.

This is off to Sangee's Love2Bake
01 09 10