Monday 3 February 2014 | By: Menaga Sathia

சிக்கன் மலாய் கபாப் / Murg Malai Kabab | Chicken Appetizer Recipe

 இதில் பப்பாளி விழுது (அ ) Meat Tenderiser பதில் எலுமிச்சை சாறு சேர்த்தும் சீஸ் சேர்க்காமலும் செய்தேன்.இதுவே மிக சுவையாக இருந்தது.

பரிமாறும் அளவு - 3
ஊறவைக்கும் நேரம் - 1 மணிநேரம் 30 நிமிடங்கள்
பேக்கிங் நேரம் - 20 நிமிடங்கள்

தே.பொருட்கள்

மூங்கில் குச்சிகள் -4  (தண்ணீரில் 2 மணிநேரம் ஊறவைக்கவும்.)

பாகம் -1
எலும்பில்லாத சிக்கன் - 15 துண்டுகள்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

பாகம் - 2
ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை
ப்ரெஷ் கீரீம் - 1 டேபிள்ஸ்பூன்
தயிர் - 2 டீஸ்பூன்
சோளமாவு - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் கொத்தமல்லிதழை விழுது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவைக்கு

செய்முறை

*பாகம் -1 ல் கொடுத்த பொருட்களை ஒன்றாக கலந்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.

 *பின் பாகம் -2 கொடுக்கப்பட்ட பொருட்களை ஒன்றாக கலந்து  ஊறவைத்த சிக்கனில் கலந்து மீண்டும் 1 மணிநேரம் ஊறக்கவும்.
 *மூங்கில் குச்சியில் சொருகி  அவனில் 210°C டிகிரியில்  20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
*பரிமாறும் போது சாட் மசாலா தூவி பரிமாறவும்.

பி.கு

இளம் கோழியாக இருந்தால் Meat Tenderiser தேவையில்லை.

This is off to Sangee's Love2Bake

12 பேர் ருசி பார்த்தவர்கள்:

nandoos kitchen said...

Yummy, tasty kabab.

Priya said...

elithaga samaika kudiya kuripu .Pakirvuku nandri...

Asiya Omar said...

மை ஃபேவரைட்.சூப்பராக செய்திருக்கீங்க.

திண்டுக்கல் தனபாலன் said...

அட...! சூப்பர்... செய்து பார்த்து விடுவோம்... நன்றி...

Unknown said...

Pakave supera iruku da menaga ...apa sapta ..yumm !!

Shama Nagarajan said...

drooling kababs

Sangeetha M said...

I am yet to try kabab in oven baking method...your kebab looks good and perfectly done! Thanks for linking it to Love2Bake!

Unknown said...

கோழியின் தொடைப் பகுதியில் இருக்கும் கறியைப் பிரித்து...இதற்கு பயன்படுத்த வேண்டும்! இது கூடுதல் தகவல்!

சாரதா சமையல் said...

பார்க்கும் போதே சாப்பிடணும் போல இருக்கு.சூப்பர்!!

Shanthi said...

Perfectly done....awesome color...

Sangeetha Priya said...

tempting kebab, must try for my kidsdear!!!

Priya Anandakumar said...

Super kebab Menaga, very lovely and delicious...

01 09 10