தே.பொருட்கள்
ரவை - 1 கப்
நீர் - 2 கப்
வெங்காயம் -1 சிறியது
பச்சை மிளகாய் -2
நெய் -1 டீஸ்பூன்
எண்ணெய் + உப்பு = தேவைக்கு
தாளிக்க
கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை
*ரவையை லேசாக வெறும் கடாயில் வறுத்தெடுக்கவும்.வெங்காய்த்தை மெலிதாக நீளவாக்கில் நறுக்கவும்,பச்சை மிளகாயை கீறவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி 2 கப் நீர்+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
*நீர் கொதிக்கும் போது வருத்த ரவை கொஞ்ச கொஞ்சமாக சேர்த்து கெட்டிபடாமல் கிளறவும்.
*தண்ணீர் சுண்டிவரும் போது நெய் சேர்த்து இறக்கி மூடி போட்டு 10 நிமிடம் வைக்கவும்.
*சிறிது நேரம் கழித்து கிளறினால் ரவை வெந்து பொலபொலவெனவும் நெய் வாசனையுடனும் நன்றாக இருக்கும்.
*சட்னி/ சர்க்கரை உடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
9 பேர் ருசி பார்த்தவர்கள்:
lovely, filling and delicious upma...
wow very very inviting rava upma :) looks yumm !!
நெய் மட்டும் சேர்ப்பதில்லை...!
Love this simple Rava upma anytime...looks very inviting!
easy to make and tasty upma! love it.
Simple and filling breakfast
நானும் இதே முறையில் தான் நெய் சேர்க்காமல் செய்வேன்.சூப்பர்!!
Easy and tasty upma :)Lovely dear.
yummy yummy
Post a Comment