மீன் குழம்பு - 2
என் கணவர் எனக்கு வைத்துக் குடுத்த மீன் குழம்பு.அவர் செய்யும் போது ஒரமா ஒரு சேர்ல உட்கார்ந்துக்கிட்டு வேடிக்கைப் பார்த்தேன் எப்படி செய்தார்ன்னு சொல்றேன் கேளுங்க.குழம்பு கொதிக்கும் போது வாசனை நல்லா கமகமன்னு இருந்தது.நல்லா சாப்பிட்டேன்.ரொம்ப ஈஸிதான் நீங்களும் செய்து பாருங்க.
தே.பொருட்கள்:
நாக்கு மீன் - 8 துண்டுகள்
புளி - 1 பெரிய எலுமிச்சையளவு
வெங்காயம் - 1
தக்காளி - 2
பூண்டுப்பல் - 5
கறிவேப்பில்லை - சிறிது
கலந்த மிளகாய்த்தூள் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
பச்சை மிளகாய் - 2
வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
*வெங்காயம்+பூண்டு நீளவாக்கில் அரியவும்,பச்சை மிளகாயை கீறவும்.
*புளியை ஒரு கோப்பையளவு கரைத்துக் கொள்ளவும்.அதில் உப்பு+வெங்காயம்+பச்சை மிளகாய்+கறிவேப்பில்லை+தக்காளி+மிளகாய்த்தூள்+பூண்டு அனைத்தையும் போட்டு கரைத்துக் கொள்ளவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வடகத்தைப் போட்டு தாளித்து புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.
*நன்கு கொதித்ததும் மீனைப் போடவும்.
*15 நிமிடம் கழித்து மறுபடியும் கறிவேப்பில்லை போட்டு இறக்கவும்.
பி.கு:
விருப்பட்டால் கத்திரிக்காய்,மாங்காய் சேர்க்கலாம்.இப்படி செய்ததில் இதுவும் வித்தியாசமான சுவையில் இருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
8 பேர் ருசி பார்த்தவர்கள்:
:)))
//நாக்கு மீன் - 8 துண்டுகள்//
அப்படின்னா??
மிகவும் கொடு்த்து வச்சவங்க மேனகா நீங்கள்.
சென்ஷி மீன் பெயரே அதான் அதுல பஜ்ஜிகூட போடுவாங்க.குட்டியா விரல் நீட்டுக்கு சப்பையா இருக்கும்.
உண்மைதான் கீதா.நான் வெஜ் ஐயிட்டம்ஸ்லாம் நல்லா சமைப்பார்.
/அவர் செய்யும் போது ஒரமா ஒரு சேர்ல உட்கார்ந்துக்கிட்டு வேடிக்கைப் பார்த்தேன் /....ம்ம்ம்ம் கொடு்த்து வச்சவங்கப்பா... ;-)
மீன் குழம்பு நல்ல ருசியா வைத்திருக்காங்க அண்ணன்..
இந்தியா வரை வாசனை வருகிறது
ஆமாம் ஹர்ஷினி அம்மா,அவர்க்கு எனக்கு சாப்பாடு செய்து குடுப்பதில் ஒரு சந்தோஷம்.நானும் எனக்கு வேலை மீதமாச்சுன்னு இருப்பேன்.
//மீன் குழம்பு நல்ல ருசியா வைத்திருக்காங்க அண்ணன்..
இந்தியா வரை வாசனை வருகிறது// ஆஹா அவர் சமையலுக்கு இவ்வள்வு பாராட்டா.கண்டிப்பா அவரிடம் சொல்றேன் பாயிசா.
Post a Comment