Thursday, 4 June 2009 | By: Menaga Sathia

தர்பூசணி சாம்பார்


தர்பூசணி பழத்தினை நாம் சாப்பிட்டு விட்டு தோலை தூக்கிப் போடுவோம் அப்படி தூக்கி போடாமல் தோலுக்கும் சிவப்பு பகுதிக்கும் நடுவில் உள்ள வெள்ளைப் பகுதியை சாம்பார் வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.!!

தே.பொருட்கள்:

த்ர்பூசணி வெள்ளைப் பகுதி - 1/2 கப்
துவரம்பருப்பு - 1 கப்
வெங்காயம் - 1 சிறியது
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 4
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை - சிறிது
புளி - 1 கோலிகுண்டளவு
பூண்டுப் பல் - 5
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவைக்கு
எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பில்லை -சிறிது
காய்ந்த மிளகாய் - 2

செய்முறை:

*பருப்பை 20 நிமிடம் ஊறவைக்கவும்.

*வெங்காயம் +தக்காளி அரியவும்,பச்சை மிளகாயை கீறவும்.தர்பூசணி வெள்ளை பகுதியை நார்மல் துண்டுகளாக நறுக்கவும்.

*குக்கரில் ஊறிய பருப்பு+வெங்காயம்+பூண்டு+தக்காளி+மஞ்சள்தூள்+பச்சை மிளகாய்+தர்பூசணி வெள்ளை பகுதி இவை அனைத்தும் சேர்த்து 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

*புளியை 1/4 கப் அளவில் கரைக்கவும்.

*ப்ரெஷர் அடங்கியதும் குக்கரை திறந்து சாம்பார் பொடி+உப்பு+புளி கரைசல் அனைத்தும் சேர்க்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து பருப்பை ஊற்றி 15 நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

*இந்த சாம்பாரின் சுவை தூக்கலாக இருக்கும்.

12 பேர் ருசி பார்த்தவர்கள்:

GEETHA ACHAL said...

தர்பூசணியில் சாம்பரா....வித்தியாசாமாக நன்றாக இருக்கு...

Menaga Sathia said...

ஆமாம் கீதா இந்த சாம்பார் ரொம்ப நல்லாயிருக்கும்.தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!!

Malini's Signature said...

எப்பவும் தர்பூசணி சாப்பிட்டு விட்டு இந்த பகுதி குப்பைக்கு தான் போகும் இப்போ இதுலையும் சாம்பாரா!!!!!!... அடுத்த முறை கண்டிப்பா பன்னி பாக்கனும்.

dsfs said...

nalla samaiyal panringa.super blog in cooking

NISWAN DHARUSSALAM said...

எப்பவும் தர்பூசணி சாப்பிட்டு விட்டு இந்த பகுதி குப்பைக்கு தான் போகும் இப்போ இதுலையும் சாம்பாரா!!!!!!... அடுத்த முறை கண்டிப்பா பன்னி பாக்கனும்.

Menaga Sathia said...

நிச்சயம் செய்துப் பாருங்க,ரொம்ப நல்லாயிருக்கும்.நன்றி நிஸ்வான்!!

எல் கே said...

இப்படி ஒரு நாளுக்கு ரெண்டு போஸ்ட் எல்லாம் போட்ட நாங்க எப்படி படிக்கறது ??? நல்ல இருக்கு நன்றி

Menaga Sathia said...

இது பழைய போஸ்ட்ங்க..இப்பதான் தமிலிஷ்ல சப்மிட் செய்தேன்.மிக்க நன்ரி எல்கே!!

ஸாதிகா said...

தர்பூசணித்தோலையும் விடவில்லையா?டிரை பண்ணிடுவோம்.

Menaga Sathia said...

நன்றி ஸாதிகாக்கா!! செய்து பார்த்து சொல்லுங்கள்...

ஜெயந்தி said...

தர்பூசணி சாம்பார். இன்று ஒரு புது சமையல் கற்றுக்கொண்டேன்.

Menaga Sathia said...

நன்றி ஜெயந்தி!!

01 09 10