Wednesday 14 October 2009 | By: Menaga Sathia

ஈஸி தட்டை / Easy Thattai

தே.பொருட்கள்:

பச்சரிசிமாவு - 2 கப்
காய்ந்த மிளகாய் - 3
பெருஞ்சீரகம் - 2 டீஸ்பூன்
பூண்டுப்பல் - 5
ஊறவைத்த கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கட்லை - 1/2 கப்
மிளகு - 1 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
உருக்கிய பட்டர் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - பொரிக்க

செய்முறை:

*மிளகாய்+பெருஞ்சீரகம்+பூண்டுபல் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*பொட்டுக்கடலை+மிளகு மிக்ஸியில் பவுடராக அரைக்கவும்.

*ஊறிய கடலைப்பருப்பு+பொட்டுக்கடலை மாவு+அரைத்த மிளகாய் விழுது+உப்பு+உருக்கிய பட்டர்+கறிவேப்பிலை இவற்றை அரிசி மாவுடன் கலந்து கெட்டியாக பிசையவும்.

*பிசைந்த மாவு சிறு உருண்டையாக எடுத்து ஒரு ப்ளாஸ்திக் கவரில் எண்ணெய் தொட்டு வட்டமாக தட்டி பேப்பரில் போட்டு உலர விடவும்.

*ரொம்ப நேரம் உலர விடக்கூடாது அப்படி செய்தால் பேப்பரிலிருந்து எடுக்கும் போது தட்டை உடைந்து விடும்.

*எல்லா மாவையும் இதே மாதிரி செய்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

பொன்னியரிசி (புழுங்கலரிசி) தட்டையின் செய்முறைக்காண இங்கே க்ளிக் செய்யவும்.


பி.கு:

கடையில் விற்கும் அரிசிமாவில் செய்தேன்.செய்வதற்க்கும் மிக எளிது.

34 பேர் ருசி பார்த்தவர்கள்:

UmapriyaSudhakar said...

ஹாய் மேனகா, உங்க வீட்டுல தீபாவளி snacks எல்லாம் ரெடி பண்ணிட்டீங்க போல இருக்கே. நான் இனிமே தான் செய்யனும்பா. ஈசி தட்டை தான் செய்யப்போறேன். தீபாவளி வாழ்த்துக்கள் மேனகா.

Malini's Signature said...

மேனகா நான் இப்ப தான் தட்டை செய்து முடித்தேன்...ஆனா அரிசி மாவில்...ம்ம்ம் தீபாவளி வந்தாச்சு :-)

இராகவன் நைஜிரியா said...

இந்த இடுகையை எங்க மேடம்கிட்ட காண்பிச்சுட்டேன்.

தீபாவளிக்கு எல்லாம் ரெடி பண்ணியாச்சு, ப்ரீயா இருக்கும் போது செய்து கொடுக்கின்றேன் என்று சொல்லியிருக்கின்றார்கள்.

R.Gopi said...

தட்டை...

one of the finest snacks available...

முன்னாடி எல்லாம் வீட்டுல பண்ணுவாங்க... இப்போ, ரொம்ப straஇந் பண்ண வேண்டாம்னு கடையிலயே வாங்கி விடுகிறேன்...

மெட்ராஸ்ல "அடையார் ஆனந்த பவன்"ல கிடைக்கறது தான் பெஸ்ட்... வாங்கி, டேஸ்ட் பண்ணி விட்டு சொல்லவும்...

உங்க ப்ரிபரேஷன்ல பூண்டு சேர்க்க சொல்லி இருக்கீங்க... ஆனால், கடையில் வாங்கும் தட்டையில் பூண்டு சேர்க்கப்படவில்லை...

எனிவே... வாழ்த்துக்கள் மேனகா... எங்களுக்கும் சேர்த்து நீங்களே சாப்பிடுங்க...

சாருஸ்ரீராஜ் said...

மேனகா இது எப்படி நான் பச்சரிசி மாவுல தட்டை செய்றது தேடனும்னு வந்து பார்கிறேன் , நீங்க போட்டு இருக்கிங்க ரொம்ப நன்றி . தீபாவளி வந்துவிட்டதா ,செய்துட்டு சொல்லுறேன் , தீபாவளி வாழ்துக்கள் .

S.A. நவாஸுதீன் said...

தீபாவளிக்கு ரொம்ப வேகமா தயாராகிக்கிட்டு இருக்கீங்க. தட்டையில் தட்டை நல்லா இருக்கு.

அனைவருக்கும் மனமார்ந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

பித்தனின் வாக்கு said...

தட்டை நல்லா இருக்கு. அது ஏன் குட்டி குட்டியா தட்டி இருக்கிங்க. நல்லா பெரிசா ரவுண்டா தட்டுலாய. இது அவசரத்தில் பண்ணியது போல உள்ளது. ஆனாலும் அப்படியே தட்டேட வச்சு சாம்பியன்ஸ் லீக் போட்டிகளைப் பார்க்கலாம். நல்ல இருக்குங்க. நன்றி.நான் சிங்கையில் தனியா இருக்கங்க அதுனால பலகாரம் எல்லாம் கடையில் தான் வாங்கி சாப்பிடனும், ஏற்கனவே அச்சுமுறுக்கு வாங்கி சாப்பிட்டாச்சு.

பித்தனின் வாக்கு said...

தட்டை நல்லா இருக்கு. அது ஏன் குட்டி குட்டியா தட்டி இருக்கிங்க. நல்லா பெரிசா ரவுண்டா தட்டுலாய. இது அவசரத்தில் பண்ணியது போல உள்ளது. ஆனாலும் அப்படியே தட்டேட வச்சு சாம்பியன்ஸ் லீக் போட்டிகளைப் பார்க்கலாம். நல்ல இருக்குங்க. நன்றி.நான் சிங்கையில் தனியா இருக்கங்க அதுனால பலகாரம் எல்லாம் கடையில் தான் வாங்கி சாப்பிடனும், ஏற்கனவே அச்சுமுறுக்கு வாங்கி சாப்பிட்டாச்சு.

Jaleela Kamal said...

ரொம்ப நல்ல இருக்கு மேனகா தீபாவளிக்கு எல்லா பலகாரமும் ரெடியா, எடுத்து வையுங்கள் வரேன்.

ம்ம் கொண்டாடுங்க கொண்டாடுங்க நல்ல படியா கொண்டாடுங்க

Jaleela Kamal said...

மேனகா நேரம் கிடைத்தால் (அயர்ன் சத்து, புரோட்டீன் சத்து )ஒருவர் எனக்கு மெயிலில் கேட்டார் நானும் யோசித்து முடிந்த வரை சொல்லி விட்டேன், இது இரன்டும் இல்லாத உணவு வகை ஒரு ஆறு ரெசிபி வேண்டும், தெரிந்தால் உடனே சொல்லவும்

நாஸியா said...

எனக்கு வாய் ஊருது.. செஞ்சு பாக்கணும் இன்ஷா அல்லாஹ்

குறை ஒன்றும் இல்லை !!! said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!!

தெய்வசுகந்தி said...

மேனகா,
உங்க தட்டை சூப்பர் . நான் தட்டை செய்யறப்போ நடுவுல வேகாத மாதிரி இருக்குதே. நான் என்ன தப்பு பண்ணறேன்னு தெரியல.ஏதாவது டிப்ஸ் இருந்தா சொல்லுங்களேன். (எங்க அம்மாவும் இதே முறைல தான் செய்ய சொன்னாங்க).

சிங்கக்குட்டி said...

சூப்பர் மேனகா :-)

Unknown said...

மாமி கலக்குங்க!கலக்குங்க!150 அடிச்சு 151 ஆகிடுச்சு! நான் கொஞ்ச நாள் கவனிக்கல, இப்போ பார்த்தால் ஆச்சர்யமா இருக்கு, தட்டை நல்லா வந்ததுபா, மாவு கொஞ்சம் வெறும்னே வறுத்து பிசைந்தேன், அதுனால என்ன யூஸ்னு தெரியல, எல்லாரும் சொன்னாங்கனு செய்தேன், தேங்ஸ் மாமி!

Kanchana Radhakrishnan said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் மேனகா

Priya Suresh said...

Thattai nalla crispyaa irruku Menaga, appo deepavaliku veetuku vara poren naan..

Menaga Sathia said...

ஆமாம் பலகாரம் செய்தாச்சு.நீங்க இப்போ செய்து முடித்திருப்பிங்கன்னு நினைக்கிறேன்.நன்றி தங்கள் வாழ்த்திற்க்கும்,கருத்திற்க்கும்.

உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உமா!!

Menaga Sathia said...

ஓஓ நீங்களும் செய்து முடித்தீங்களா.நானும் அரிசி மாவில் தான் செய்துள்ளேன்.நன்றி தங்கள் கருத்திற்க்கு ஹர்ஷினி அம்மா!!

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

Menaga Sathia said...

பண்டிகை முடித்ததும் செய்து பாருங்க அண்ணா.நன்றி தங்கள் கருத்திற்க்கு!!

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

Menaga Sathia said...

நான் எங்க கோபி மெட்ராஸ்க்கு போக போறேன்.போனால் டிரை பண்றேன்.பூண்டு சேர்த்தால் வாசனையா இருக்கும்.அப்பாடா உங்களுக்கும் சேர்த்து சாப்பிட சொல்லிட்டீங்க.பார்சல் செலவு மிச்சம்...ஹி..ஹி..நன்றி கோபி!!


இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

Menaga Sathia said...

தட்டை செய்தீங்களா சாரு,எப்படி இருந்தது?நன்றி கருத்திற்க்கும்,வாழ்த்திற்க்கும்...


இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

Menaga Sathia said...

தங்கள் வாழ்த்திற்க்கும்,கருத்திற்க்கும் நன்றி நவாஸ்!!

Menaga Sathia said...

தட்டை பெரிசா தட்டினா எண்ணெயில் போடும் உடைந்து விடும்.அதனால் சின்னதா போட்டேன்.நன்றி தங்கள் கருத்திற்க்கு..


இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

Menaga Sathia said...

வாங்க வாங்க.உங்களுக்கு இல்லாததா..நன்றி தங்கள் கருத்திற்க்கும்,வாழ்த்துக்கும் ஜலிலாக்கா...

Menaga Sathia said...

நேரம் கிடைக்கும் போது சொல்றேன் ஜலிலாக்கா.

வாங்க நாஸியா.செய்துப் பார்த்து சொல்லுங்க.தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி!!

Menaga Sathia said...

நன்றி ராஜ்!! உங்களுக்கும்


இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

Menaga Sathia said...

நன்றி சுகந்தி!!தட்டையை தட்டும் போது ரொம்ப மெல்லியதாக இல்லாமலும்,தடினமாக இல்லாமலும் தட்டவும்.இந்த அளவில் செய்து பாருங்க நல்லா வரும் .


இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

Menaga Sathia said...

நன்றி சிங்கக்குட்டி!!


இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

Menaga Sathia said...

செய்துப் பார்த்து பின்னுட்டம் அளித்ததில் மகிழ்ச்சி மாமி.மாவு வறுத்து போட்டீங்களா.அதுவும் நல்லது தான்.அடுத்த முறை அப்படி செய்து பார்க்கிறேன்.நன்றி மாமி!!


இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

Menaga Sathia said...

நன்றி காஞ்சனா!!


இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!வாங்க தீபாவளிக்கு உங்க வரவை எதிர்ப்பார்க்கிறேன்.


இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

மன்னார்குடி said...

ஈஸி தட்டை செய்து பார்த்தாச்சு. நன்றாக வந்திருந்தது. நன்றி.

Menaga Sathia said...

செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததில் மிக்க மகிழ்ச்சி+நன்றி மன்னார்குடி!!

01 09 10