Thursday, 15 October 2009 | By: Menaga Sathia

வெல்ல அதிரசம்

தே.பொருட்கள்:

பச்சரிசி - 2 கப்
வெல்லம் - 2 கப்
பொடித்த ஏலக்காய் - 1/4 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க

செய்முறை:

*அரிசியை 1/2 மணிநேரம் ஊறவைத்து தண்ணியில்லாமல் வடிகட்டி நிழலில் ஈரமில்லாமல் உலர்த்தி மாவாக்கவும்.

*மாவு ரொம்ப நொறநொறன்னு இருக்ககூடாது.

*ஒரு பாத்திரத்தில் வெல்லம் போட்டு அது சிறிது நீர்விட்டு காய்ச்சவும்.வெல்லம் கரைந்ததும் மண்ணில்லாமல் வடிகட்டவும்.

*வடிகட்டிய வெல்லத்தை மீண்டும் காய்ச்சி பாகு எடுக்கவும்.

*ஒரு கிண்ணத்தில் நீர் விட்டு வெல்லத்தை விடவும் அது உருட்டும் பதத்திற்க்கு வந்தால் அதுதான் சரியான பதம்.

*சரியான பதம் வந்ததும் இறக்கி அரிசி மாவு+ஏலக்காய் போட்டு நன்கு கிளறவும்.அதன் மீது நெய்விடவும்.

*பின் உருண்டைகளாக உருட்டி ரொம்ப மெல்லியதாக இல்லாமலும்,தடினமாக இல்லாமலும் தட்டி எண்ணெயில் பொரிக்கவும்.

*சுவையான அதிரசம் ரெடி.

கவனிக்க:

*கிளறிய மாவு கெட்டியாக இருக்கனும்,தண்ணியாக இருந்தால் மீண்டும் அரிசியை ஊறவைத்து அரைத்து போடவும்.

*அதிரசத்திற்க்கு ஈரமாவு தான் பயன்படுத்த வேண்டும்.

*மாவை கிளறி உடனே சுடுவதை விட 2 நாள் கழித்து சுட்டால் நன்றாக இருக்கும்.

*அதிரசத்தை எண்ணெயிலிருந்து பொரித்ததும் ஒரு கிண்ணத்தை வைத்து அழுத்தி எடுத்தால் எண்ணெய் வந்து விடும்.ஆறியதும் மெத்தென்று இருக்கும்.

30 பேர் ருசி பார்த்தவர்கள்:

ப்ரியமுடன் வசந்த் said...

இனிக்க இனிக்க அதிரசம்

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் மேடம்

suvaiyaana suvai said...

nice athirasam
http://susricreations.blogspot.com

Unknown said...

மாமி மாமி எப்படி எனக்கு பிடிச்ச ஐட்டம் எல்லாம் பண்ணி கலக்குறீங்க? இப்போ உடம்பு இருக்கிற நிலைல எண்ணெய் பலகாரம் எல்லாத்துக்கும் தடை எங்க வீட்டுல, உங்க சம்பந்தியோட உத்தரவு! விடாமல் தட்டை பண்ணி சாப்பிட்டேன்,இப்போ அதிரசம் பண்ணினால் அவ்ளோதான் அதனால ஒரு 3அதிரசம்(ஆளுக்கு ஒன்னுதான்) பார்சல்!

Unknown said...

தீபாவளி வந்தாச்சு போல எங்க மாமிக்கு...உங்கள் அனைவருக்கும் எங்கள் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! சந்தோசமா கொண்டாடுங்கள் எங்களுக்கும் சேர்த்து!

பித்தனின் வாக்கு said...

எங்க அப்பாவிற்கு இந்த அதிரசம்தான் புடிக்கும். எங்க வீட்டில் அடிக்கடி செய்வார்கள். நானும் அடையார் ஆனந்த பவனில் வாங்கிச் செல்லுவேன். சிறுவயதில் எங்க வீட்டில் இந்த மாவை செய்து ஒரு நாள் ஊற வைப்பார்கள். முதல் இரவு மாவி பிசைந்து மறுனாள் அதிரசம் தட்டுவார்கள். நான் மாவு திருடி தின்பேன். நன்றி

GEETHA ACHAL said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

சூர்யா ௧ண்ணன் said...

ஆஹா! தீபாவளி சமையல் கலக்குறிங்க!
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! சகோதரி..

Priya Suresh said...

Yennaku romba pidicha athirasam...Udane saapidanam pola irruku Menaga..Deepavali vaazhuthukkal ungalukum unga kudumbathinarukum..

Shama Nagarajan said...

lovely recipe dear

Menaga Sathia said...

நன்றி வசந்த்!!


இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

Menaga Sathia said...

நன்றி ஸ்ரீ!!


இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

Menaga Sathia said...

ஓ உங்களூக்கு ரொம்ப பிடிக்குமாப்பா..ஏன் டயட்ல இருக்கிங்களா?3 அதிரசம் என்ன மாமி செய்ததை அனைத்தும் பார்சல் அனுப்புறேன் சாப்பிடுங்க.நன்றி மாமி!!

Menaga Sathia said...

உங்களுக்கும்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் மாமி!!நன்றி தங்கள் வாழ்த்திற்க்கு!!

Menaga Sathia said...

அந்த அதிரசம் மாவை சாப்பிட நல்லாயிருக்கும்.நானும் எங்கம்மா செய்து வைத்து வேலையா இருக்கும் போது அவங்களுக்கு தெரியாமல் திருடி சாப்பிட்ட அனுபவம் இருக்கு.அப்புறம் அம்மா கண்டுப்பிடித்து கேட்டால் நீயில்லை நானில்லை என்ற பதில் தான் வரும்.நன்றி பித்தன் தங்கள் கருத்திற்க்கு!!


இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

Menaga Sathia said...

நன்றி கீதா!!


இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

Menaga Sathia said...

நன்றி சகோதரரே!!


இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!! தங்களுக்கும்,உங்க குடும்பாத்தாருக்கும்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

Menaga Sathia said...

நன்றி ஷாமா!!


இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

GEETHA ACHAL said...

இன்று தான் அதிரசம் அம்மா செய்து கொடுப்பாங்க...இதுவரை நான் அதிரசம் செய்தது இல்லை.

இது அம்மா செய்ய வேண்டியது.

S.A. நவாஸுதீன் said...

நண்பர்கள் அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

R.Gopi said...

மேனகா

வெல்லம் சேர்ப்பதற்கு பதிலாக சர்க்கரை சேர்த்து கூட அதிரசம் செய்வார்கள் இல்லையா? அதுவும் ரொம்ப வித்தியாசமான டேஸ்டா இருக்கும்...

இப்போ என்னை மாதிரி தாமரைசெல்வியும் பார்சல் கேக்க ஆரம்பிச்சுட்டாங்க...

எனக்கு பார்சல் போடறப்போ, அவங்களுக்கும் சேர்த்து போடுங்க...

Jaleela Kamal said...

ஆஹா எனக்கு ரொம்ப பிடித்த அதிரசம்.

Menaga Sathia said...

அதிரசம் செய்தீங்களா கீதா!!நன்றி தங்கள் கருத்துக்கு!!

Menaga Sathia said...

நன்றி நவாஸ் தங்கள் வாழ்த்திற்க்கு...

Menaga Sathia said...

சர்க்கரை சேர்த்தும் அதிரசம் செய்வாங்க.அதுவும் நல்லாயிருக்கும்.
ஒரே நேரத்துல 2 பெருக்கும் பார்சல் அனுப்பிட வேண்டியதுதான்.
நன்றி கோபி!!

Menaga Sathia said...

உங்களுக்கு இது ரொம்ப பிடிக்குமா ஜலிலாக்கா?நன்றி தங்கள் கருத்துக்கு...

my kitchen said...

எனக்கு பிடிச்ச ஐட்டம்,நல்லாயிருக்கு

Menaga Sathia said...

நன்றி செல்வி!!

Unknown said...

Hi menaga eppadi irukkeenga..?adhirasam superbaa irukku paakkumpothe saappidanum pola irukku....diwali nalla enjoy panneegalaa....good.how is kuttiponnu...

Menaga Sathia said...

ஹாய் கினோ நீங்க நலமா?நானும் குட்டிப் பொண்ணூம் நல்லாயிருக்கோம்.நல்லபடியாக பண்டிகையை கொண்டாடினோம்.நீங்க எப்படி கொண்டாடினீங்க?

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி கினோ!!

01 09 10