தே.பொருட்கள்:
சிக்கன் லெக்பீஸ் - 1/2 கிலோ
தயிர் - 125 கிராம்
கரம் மசாலா - 1டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
ரெட்கலர் - 1 சிட்டிகை
தந்தூரி மசாலா பவுடர் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு- தேவைக்கு
செய்முறை :
*சிக்கனை சுத்தம் செய்து அதில் கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் கலந்து 1மணிநேரம் ஊறவைக்கவும்.
*அவனில் 300 டிகிரியில் 20 நிமிடம் வைத்து க்ரில் செய்து எடுக்கவும்.
பி.கு:
*.அவரவர் அவனுக்கேற்ப டைம் செட் செய்யவும்.
*தந்தூரி மசாலா இல்லையெனில் மிளகாய்த்தூளை கொஞ்சம் தேவைக்கேற்ப அதிகம் சேர்த்து செய்யவும்.
35 பேர் ருசி பார்த்தவர்கள்:
நல்ல டிஷ்....
ஹாய் மேனகா, சூப்பர் சிக்கன்பா.நான் நாளை ஊருக்கு போறேன்பா. மூன்று மாதத்திற்கு பிறகு சந்திக்கலாம்.முடிந்தால் இடையில் comments போடுகிறேன்.
ஒரு பார்சல் பிளிஸ் :-)...கிரில்னா எப்படிப்பா ட்ரேலே வைக்கமே அப்பரியே பேக் பன்னனுமா?
வாய் ஊருது.. இதை microwave அவனில் செய்யலாமா?
Restaurant style chicken tandoori madhriye irruku Menaga..kalakals..
wow super
நினைத்தாலே சாப்பிடனும்போல இருக்கு
ரொம்ப சூப்பரான தந்தூரி கலர்புல்லா இருக்கு.
ஹி ஹி . நான் சாப்பிடமாட்டேன் அதுனால ஒன்னும் சொல்லவில்லை படம் பார்க்க நல்லா இருக்கு .
எளிமையாத்தான் இருக்கு.சூப்பராவும் இருக்கு
இது எனக்கு இல்லை, எனக்கு வேண்டாம், நான் ஆப்செண்ட். நல்ல பதிவு.
சூப்பர்ப்...ரெஸ்டரண்டில் கிடைக்கும் தந்தூரி சிக்கன் மாதிரியே இருக்கின்றதே...கலக்கல்
//நாஸியா said...
வாய் ஊருது.. இதை microwave அவனில் செய்யலாமா?//
அதே சந்தேகம் தான் எனக்கும், எங்க வீட்ல் கன்வென்ஷன் ஓவன் இல்லைங்களே!!
நன்றி ஜெட்லி!!
நன்றி உமா!!நல்லபடியாக போய்ட்டு வாங்க.நல்லா எஞ்சாய் பன்ணுங்க.குட்டிப் பையனையும் கவனமா பார்த்துக்குங்க.முடியும் போது கமெண்ட் போடுங்க.
ஓ பார்சல் வந்துக்கிட்டே இருக்கும் ஹர்ஷினி அம்மா.டிரெயில் தான் வைக்கனும்ப்பா.நன்றி ஹர்ஷினி!!
மைக்ரோவேவில் க்ரில் மோட் இருந்தால் தாராளமா செய்யலாம்.நன்றி நாஸியா!!
நன்றி ப்ரியா!!
நன்றி சுகந்தி!!
நன்றி சந்ரு!!
நன்றி ஜலிலாக்கா!!
நன்றி சாரு!!சிக்கன் சாப்பிடமாட்டிங்களா?
நன்றி நவாஸ் ப்ரதர்!!
நன்றி பித்தன்!! உங்க பின்னூட்டம் படித்து சிரித்துவிட்டேன்.நீங்க சைவமா இருந்தாலும் அசைவ குறிப்புக்கு கமெண்ட் போட்டதற்க்காக நன்றிகள்...
நன்றி கீதா!!
////நாஸியா said...
வாய் ஊருது.. இதை microwave அவனில் செய்யலாமா?//
அதே சந்தேகம் தான் எனக்கும், எங்க வீட்ல் கன்வென்ஷன் ஓவன் இல்லைங்களே!!//
அவனில் க்ரில் மோட் இருந்தால் செய்யலாம்.நீங்க மைக்ரோவேவ் வாங்கும் போது சில்வரில் முக்காலி போல ஒரு ஸ்டாண்ட் கொடுத்திருப்பாங்க.அதன் மேல் சிக்கனை வைத்து க்ரில் செய்யலாம்.அவங்க கொடுத்திருக்கும் கேட்டலாக் புக்கில் பாருங்க.விபரமாக இருக்கும்.நன்றி ஷஃபி ப்ரதர்!!
Colorful & yummy chicken
நன்றி செல்வி!!
ஓவன் இல்லாம எப்படி பண்ணனும்னு சொல்லுங்க.....
அவன் இல்லையென்றால் எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம்.நன்றி புலிகேசி!!
புலவன் புலிகேசி கேட்டதைத்தான் நானும் கேட்க நினைத்திருந்தேன்.
என் பிரன்ச் நண்பர்களுக்கு இது ரொம்ப பிடிக்கும். செய்து தரச்சொல்லி கேட்பார்கள். அதெல்லாம் உணவ்கங்களில்தான் முடியும் என்று சொல்லிவிட்டேன்.
இனி வீட்டில் செய்து கொடுத்து அச்த்திவிடுவோம்!
நன்றி தமிழ்நாடான்!! இனி செய்து அசத்துங்க..
தந்தூரி ஒரு முறை ஓட்டலில் சாப்பிட்டு புகை வடை வந்தது. அதிலிருந்து சாப்பிடுவதில்லை!
தந்தூரி அடுப்பில் செய்யும் போது அந்த வாடை வரும்.அவனில் செய்தால் வராது.நன்றி மருத்துவரே!!
It's Tempting to eat.With out oven how it can be prepared without oil?
அவனும்,எண்ணெயும் இல்லாமல் என்றால் பர்பிக்யூ மாதிரி நெருப்பில் சுட்டு சாப்பிடலாம்.நன்றி ஆஷா தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்...
சிக்கன் தந்தூரி உணவகங்களில் செய்வதைப்போலவே செய்து கவர்ந்து விட்டீர்கள் மேனகா.பார்ப்போரின் நாவெல்லாம் ஊறிவிடும்.
நன்றி ஸாதிகாக்கா தங்கள் பாராட்டுக்கும்,கருத்துக்கும்..
சிக்கன் என்னை கூவி கூவி அழைக்கிறது,, பேஷ் பேஷ் ரொம்ப சூப்பராக இருக்கு...
நன்றி மலிக்கா!!
Post a Comment