Friday, 16 October 2009 | By: Menaga Sathia

இனிப்பு பூந்தி/Sweet Bhoondi

தே.பொருட்கள்:

கடலை மாவு - 1 கப்
சர்க்கரை - 2 கப்
சமையல் சோடா - 1 சிட்டிகை
நெய் - 3 டீஸ்பூன்
முந்திரி,திராட்சை,டைமண்ட் கல்கண்டு - தேவைக்கு
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் கலர் - 1 சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க

செய்முறை :

*கடலை மாவு+சமையல் சோடா இரண்டையும் கலந்து சலிக்கவும்.

*அதனுடன் மஞ்சள் கலர் கலந்து தோசை மாவு பதத்திற்க்கு நீர் சேர்த்து கலக்கவும்.கண் கரண்டியில் ஊற்றினால் மாவு விழணும் அதுதான் சரியான பதம்.

*எல்லா மாவையும் கண்கரண்டியில் தோய்த்து பூந்திகளாக பொரித்து வைக்கவும்.

*முந்திரி,திராட்சையை நெய்யில் வறுக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு 3/4 கப் நீர் சேர்த்து பாகு காய்ச்சவும்.2 விரல்களால் தொட்டால் பிசுபிசுப்பாக இருக்கனும்.அதுதான் பூந்திக்கு சரியான பதம்.

*அடுப்பை நிறுத்திவிட்டு பூந்தி+ஏலக்காய் பொடி+கல்கண்டு+முந்திரி திராட்சை+மீதமிருக்கும் நெய் சர்க்கரை பாகில் கலந்து மூடி வைக்கவும்.

*சிறிது நேரம் கழித்து பார்த்தால் பூந்தி பொலபொலவென இருக்கும்.


பி.கு:

*இது நான் லட்டுக்காக செய்த குறிப்பு.சர்க்கரை பாகு ஆறிவிட்டதால் லட்டு பிடிக்க வரவில்லை.இளஞ்சூடாக இருக்கும் போதே நெய் தொட்டு லட்டுகளாக பிடிக்கவும்.

*கரைத்த கடலைமாவில் 3 பங்காக பிரித்து சிவப்பு+பச்சை+மஞ்சள் கலர் சேர்த்து கலர் பூந்தி செய்யலாம்.பார்ப்பதற்க்கு அழகாக இருக்கும்.

21 பேர் ருசி பார்த்தவர்கள்:

இராகவன் நைஜிரியா said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் சகோதரி...

இராகவன் நைஜிரியா said...

பூந்தி எப்படி சாப்பிட்டாலும் பூந்திதான்... அது உருண்டையா இருந்தாலும் உடைச்சுத்தானே சாப்பிடணும் அப்படிங்கிறதுக்காக, இது மாதிரி பண்ணியிருக்கேன்னு சமாளிக்கணும்.

suvaiyaana suvai said...

poonthi nalla irukku

Priya Suresh said...

Iniya deepavali vaazhuthukkal Menaga..Boondi looks marvellous..

UmapriyaSudhakar said...

பார்க்கும்போதே சாப்பிடத்தோணுது. பத்து நாளில் இந்தியா போறேன். அங்க போய் ஒரு கை பார்த்துவிட வேண்டியது தான்.

SUMAZLA/சுமஜ்லா said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

தீபாவளி ஸ்வீட்ட சும்மா படத்துல மட்டும் காட்டிட்டா போதுமா?

S.A. நவாஸுதீன் said...

நண்பர்கள் அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

SUFFIX said...

நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!

R.Gopi said...

//பி.கு:

*இது நான் லட்டுக்காக செய்த குறிப்பு.சர்க்கரை பாகு ஆறிவிட்டதால் லட்டு பிடிக்க வரவில்லை.இளஞ்சூடாக இருக்கும் போதே நெய் தொட்டு லட்டுகளாக பிடிக்கவும்.//

மேனகா... அப்படியே சாப்பிடலாம்...

ஜெட்லி... said...

ஆஹா எனக்கு புடிச்சா பூந்தி....
தீபாவளி வாழ்த்துக்கள் அக்கா.

Jaleela Kamal said...

பூந்தி ரொம்ப சூப்பர், இப்போதைக்கு எல்லாமே ரெடி மேட் கிடைப்பதால் செய்வதில்லை, இதேல்லாம் முன்பு செய்தது ஞாபகம் வருது.

குறை ஒன்றும் இல்லை !!! said...

என்னோட ஃபேவரட் !!!நன்றி,,ஆனா செய்யரதில்லே ரெடிமேடா வாங்கி சாப்பிடரது மட்டும்..

Menaga Sathia said...

//பூந்தி எப்படி சாப்பிட்டாலும் பூந்திதான்... அது உருண்டையா இருந்தாலும் உடைச்சுத்தானே சாப்பிடணும் அப்படிங்கிறதுக்காக, இது மாதிரி பண்ணியிருக்கேன்னு சமாளிக்கணும்.// ஹா ஹா

தங்கள் கருத்துக்கும்,வாழ்த்துக்கும் நன்றி அண்ணா!!

Menaga Sathia said...

நன்றி ஸ்ரீ!!

நன்றி ப்ரியா!!உங்க லட்டு ரொம்ப நல்லாயிருக்குப்பா.

Menaga Sathia said...

ஓஓ இந்தியா போறிங்களா,நல்லபடியாக போய்ட்டுங்க வாங்க.வாழ்த்துக்கள்!!ரொம்ப மிஸ் பண்ணுகிறேன்..பிடித்தமானவைகளை செய்து சாப்பிடுங்க.நன்றி உமா!!

Menaga Sathia said...

நன்றி சுகைனா தங்கள் வாழ்த்திற்க்கு.

பிளைட் டிக்கட் அனுப்புறேன் வாங்க வீட்டுக்கு,உடனே செய்து தரேன்..

Menaga Sathia said...

தங்கள் வாழ்த்திற்க்கு நன்றி நவாஸ் ப்ரதர் மற்றும் ஷஃபி ப்ரதர்!!

Menaga Sathia said...

ஆமாம் கோபி அப்படியே சாப்பிடலாம்.இராகவன் அண்ணா சொன்ன மாதிரி சமாளிக்கலாம்.நன்றி கோபி!!

Menaga Sathia said...

நன்றி ஜெட்லி!!

நன்றி ஜலிலாக்கா!!

நன்றி ராஜ்!!

my kitchen said...

அப்படியே சாப்பிடலாம் போல இருக்கு

Menaga Sathia said...

நன்றி செல்வி!!

01 09 10