வெந்தயத்தின் பயன்கள்
1.வெந்தயம் இதன் கீரை,விதை இரண்டுமே மருத்துவகுணம் கொண்டவை.கீரையை வேகவைத்து பருப்புடன் சாப்பிடலாம்.புளி சேர்த்து கூட்டு,குழம்பாகவும் சாப்பிடலாம்.குடல் புண்ணை ஆற்ற்றும் குணம் கொண்டது.இடுப்புக்கு வலிமையானது.
2.ரத்ததில் குளுக்கோஸ் அளவைக் கட்டுபடுத்தி,சர்க்கரை நோயாளிகளுக்கு உதவும் மருந்து இது.
3.மாதவிலக்கு சமயங்களில் வரும் வயிற்றுக் கோளாறுகள்,அந்த சமயத்தில் ஏற்படும் எரிச்சல் உணர்வு ஆகியவற்றுக்கு வெந்தயம் தீர்வு தருகிறது.
4.ரத்தம் மற்றும் தாய்ப்பால் உற்பத்தியைப் பெருக்கும் சக்தி இதற்கு உண்டு.வாயிக்கோளாறு,வயிறு உப்பிசம்,வயிற்றுப்போக்கை நிறுத்த வெந்தயம் நல்ல மருந்து.
5.பொடுகுத்தொல்லைக்கு மிகச் சிறந்த நிவாரணி இது.3 டேபில்ஸ்பூன் வெந்தயைத்தை ஊறவைத்து அரைத்து தலையில் தடவி 1/2 மணிநேஅர்ம் ஊற்விட்டு வெதுவெதுப்பான நீரில் அலசவும்.இப்படி ஒரு வாரம் செய்தால் பொடுகு தொல்லை காணாமல் போய்டும்.சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் தவிர்க்கவும் ஏனெனில் வெந்தயம் குளிர்ச்சியானது.
6.முடி உதிரும் பிரச்சனைக்கும் வெந்தயம் அருமருந்து.செம்பருத்தி பூ,இலை,துளசி இலை இவை 3யும் சம அளவில் எடுத்து காயவைத்து பொடியாகி அரைத்துக் கொள்ள வேண்டும்.வெந்தயத்தை காயவைத்து பொடியாகி அரைத்து அதை இந்த இலைப் பொடியுடன் சம அளவில் கல்ந்துக் கொள்ளவும்.இதனுடன் சீயக்காய் பொடியும் கலந்து தண்ணீர் விட்டு கலந்து ஷாம்பு மாதிரி தலையில் தேய்த்து குளித்து வந்தால் நிரந்தர தீர்வுத் தரும்.
7.உடலில் சேர்ந்திருக்கும் கெட்ட கொழுப்பை கரைக்கவும் இது உதவுகிறது.2 டீஸ்பூன் வெந்தயத்தை 1 டம்ளர் நீரில் இரவே ஊறாவைத்து காலையில் வெறும் வயிற்றில் இந்த நீரைக் குடிக்கவேண்டும்.குழுப்பை குறைப்பதோடு மட்டுமில்லாமல் ரத்தத்தையும் சுத்தம் செய்கிறாது.இப்படி அடிக்கடி குடித்து வந்தால் வயிறு தொடர்பான ப்ரச்னைகள் வரவே வராது.
8.முகப்பருக்களுக்கும் வெந்தயக்கீரை பலன் தருகிறது.புது வெந்தயக்கீரையை சுத்தம் செய்து அரைத்து முகப்பரு இருக்குமிடத்தில் இஅரவில் படுக்கபோகும் முன் செய்து 15 நிமிடன் கழித்து உலர்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.
9.தூக்கம் வரமல் தவிப்பவர்களுக்கு வெந்தய்க்கீரையை தண்ணீர் விட்டு அரைத்து 2 ஸ்பூன் எடுத்து அதனுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால் நல்லபலன் கிடைக்கும்.
10.வெள்ளைப்படுதலுக்கும் வெந்தயம் தீர்வு தருகிறது.1 டேபிள்ஸ்பூன் வெந்தயத்தை இரவில் 1 டம்ளர் நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த வெந்தயத்தை அப்படியே மென்று விழுங்க வேண்டும்.இப்படி 1 வாரம் சாப்பிட்டு வந்தால் இந்த ப்ரச்னை இருக்காது.
இவை அனைத்தும் நான் படித்த குறிப்புகள்.இவைகளில் நான் முடி உதிர்வு,ஊறவைத்த வெந்தயத்தண்ணீர்,பொடுகு என நிறைய பயன் அடைந்துள்ளேன்...
Subscribe to:
Post Comments (Atom)
13 பேர் ருசி பார்த்தவர்கள்:
Thankz.
My mother always tells me to eat vendhayam on mornings. but I don't follow it. Now I realize it. how worth full it is.
- Kiri
Very useful info..Thanks Dear for sharing..
Thank you for the useful information :):)...
thank u for the lovely tips...
very useful tips menaga
நன்றி நன்றி நன்றி!
நானும் வெந்தயத்தை தலையில் தேய்த்திருக்கேன்.. என்ன அதை கழுவும்போது கடுப்பா இருக்கும்..
பயனுள்ள தகவல் மேனகா
Very useful info..
வெந்தயம் ஒரு நல்ல மருந்துதான்.வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி கிரி!!
நிது,தேவி,Trendsetters,சாரு அக்கா,நாஸியா,பாயிஷா,ப்ரியா அனைவருக்கும் நன்றி.
சூட்டின் காரணத்தால் வயிறு வலித்தால் என் அம்மா தயிருடன் சிறிது வெந்தயத்தை விழுங்கத்தருவார் மேனகா ..சிறிது நேரத்தில் சரி ஆகிவிடும்
எனக்குத் தெரிந்த ஒருவர், பொடிசெய்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டு சர்க்கரை நோயை மிகவும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். இயறகை தந்த கொடை அல்லவா, முயற்சிக்கலாமே!!
வெந்தயத்தை பற்றி நல்ல டிப்ஸ், ஆமாம் சர்க்கரை வியாதிக்கு, வெந்தயத்தை இரவு ஊறவைத்து காலையில் ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவைத்து குடித்து வந்தால் ஒரு மாததில் சரியாகிடும், இப்படி குடித்து ஒருவருக்கு சரியாகி இருக்கு, சரியாகி இருக்கு என்றால் சர்கக்ரையின் அளவு ஒரே சீராக இர்க்கும்
தேனக்கா,சகோதரர் ஷஃபி,ஜலிலாக்கா தங்கள் அனைவருடைய கூடுதல் டிப்ஸ்க்கு மிக்க நன்றி!!
Post a Comment