வாத்துகறி குழம்பு
வாத்து மிகவும் கொழுப்புதன்மை நிறைந்தது.அதனை தோலுடன் தான் சமைக்கனும்.அப்போதான் நல்லாயிருக்கும்.சமைக்கும் போது எண்ணெய் குறைவாக பயன்படுத்தவும்.
தே.பொருட்கள்:
வாத்துகறி - 1 கிலோ
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 2
நீளவாக்கில் அரிந்த தக்காளி - 2
கீறிய பச்சை மிளகாய் - 10
மிளகுத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
முழுப்பூண்டு - 2
பிரியாணி இலை - 4
புளிக்கரைசல் - 2 கப்
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு + எண்ணெய் = தேவைக்கு
அரைக்க:
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
செய்முறை :
*வாத்தை மஞ்சள்தூள் சேர்த்து சுத்தம் செய்யவும்.
*புளிகரைசலில் கறி+உரித்த முழுப்பூண்டுபற்கள் + மஞ்சள்தூள் சேர்த்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு வடகத்தை பொரித்து தனியாக வைத்து,அதே எண்ணெயில் தேங்காயையும் பொன்னிறமாக வறுக்கவும்.
*வடகம்+தேங்காய் மைய அரைத்து கடைசியாக சீரகம் சேர்த்து அரைத்தெடுக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பிரியாணி இலைப் போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய்+மிளகுத்தூள் என் ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும்.
*வதங்கியதும் புளிகரைசலோடு இருக்கும் கறியை ஊற்றி கொதிக்கவிடவும்.கறி வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதைப் போட்டு 5 நிமிடம் கழித்து இறக்கவும்.
*இந்த குழும்பு புளிப்பாக இருந்தால் தான் நன்றாகயிருக்கும்.அதனால் புளிப்புக்கேத்த மாதிரி புளியை ஊறவைக்கவும்.
Subscribe to:
Post Comments (Atom)
20 பேர் ருசி பார்த்தவர்கள்:
வாத்துக்கறி குழம்பு அருமை,மிளகு,பூண்டு,புளி என்று வித்தியாசமான சுவை.
சாப்டு பாத்துருவோம்
வாத்து கறி சூப்பர்
வாத்து கறி குழம்பு நல்லாயிருக்கு...ஆனால் எனக்கும் வாத்துக்கும் ரொம்ப தூரம் என்பதால் அதன் பக்கம் கூட நான் போவதில்லை...
புளி எல்லாம் போட்டு வாத்துக்கறி.அதிரா பாஷையில் தாராகறி.நாமன் சாப்பிட விட்டாலும் செய்முறையைத்தெரிந்து கொண்டேன்.
புளி எல்லாம் போட்டு வாத்துக்கறி.அதிரா பாஷையில் தாராகறி.நாமன் சாப்பிட விட்டாலும் செய்முறையைத்தெரிந்து கொண்டேன்.
நன்றி ஆசியாக்கா!!
செய்து பார்த்து சொல்லுங்கள்.நன்றி சகோ!!
நன்றி கார்த்திக்!!
இந்த முறையில் செய்து பாருங்கள்.நான் வாத்து சாப்பிடமாட்டேன்.இவர்தான் வாங்கி வந்து சமைப்பார்.நன்றி கீதா!!
புளிப்பு சுவையுடன் நல்லாயிருக்கும்.சமைத்து பாருங்கள்.நன்றி ஸாதிகாக்கா!!
புதுமையான முறை மற்றும் சுவை. மிகவும் ரசித்துச் சாப்பிட்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
எங்க ஊர்ப்பக்கம் வாத்துக்கறி ரொம்பவும் ஃபேமஸ். என் கணவரின் பாட்டியும், அண்ணனும் வாத்துக்கறி சமைப்பதில் வாசனை ஊரையே தூக்கும்.ஆனா புளி சேர்க்கமாட்டாங்க.
ஆனா எனக்கு தெரியாது. அதுவும் புளிப்பா இருக்கும்னு சொல்றீங்க. இங்கு கிடைக்காது. ஊருக்கு போறப்ப செய்து பார்க்கனும்!
வாத்து கறி குழம்பு சூப்பர்....நான் வாத்து கறி குழம்பு வருவல் சாப்பிடமாட்டேன். ஆனால் இங்கு பாரிஸில் இருக்கும் சீனர்களின் ரெஸ்டாரண்ட்டில் இதே வாத்து கறியை இனிப்பாக செய்து விற்கிறார்கள் அதன் சுவை மிக அருமையாக இருக்கும்...முடிந்தால் அந்த ரெஸிபிஸியை பதிவிடுங்களேன்.
இந்த வாத்துகறியை நான் சாப்பிட்டது...
Paris, Avenue de Choisy யில் இருக்கும் Tang Frères கடையில் அமைந்துள்ள சீன ரெஸ்டாரெண்ட்...நீங்களும் சென்றிருப்பிர்கள் என நம்புகின்றேன்...
படைபிற்கு நன்றி
வாத்து கறி...... பார்க்கவே நல்லா இருக்கு.
:-)
நானே ஒரு வாத்து, அப்புறம் எப்படி சாப்பிடுவது.
எனது சீன நண்பி மிகவும் விரும்பி சாப்பிடுவாள். ஒருவேளை இந்தியா அழைத்து வந்தால் உங்க வீட்டுல கொண்டு வந்து விட்டு விடுவேன்(மாட்டினிங்களா). ஹா ஹா ஹா.
மிக்க நன்றி.
அதெல்லாம் சரி வாத்துக்கறி எங்க கிடைக்கும் இன்னு சொல்லவே இல்லையே. இங்க சென்னையில எதாவது இடம் இருக்கிறதா. நல்ல பதிவு உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததற்க்கு.,வருகைக்கும் நன்றி சுடுதண்ணி!!
ஊரில் செய்து பாருங்கள்.நானும் இந்த கறியை சாப்பிட்டதில்லை.நன்றி கீதா!!
நான் சீன உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுவதில்லை.நேம்+ப்ரைடு ரைஸ் தான் அதிகம் விரும்பி சாப்பிடுவேன்.நீங்கள் சொல்லும் குறிப்பின் செய்முறை எனக்குத் தெரியாது சகோ.நன்றி சகோதரரே!!
நன்றி சித்ரா!!
//நானே ஒரு வாத்து, அப்புறம் எப்படி சாப்பிடுவது. // ஹி..ஹி..
//எனது சீன நண்பி மிகவும் விரும்பி சாப்பிடுவாள். ஒருவேளை இந்தியா அழைத்து வந்தால் உங்க வீட்டுல கொண்டு வந்து விட்டு விடுவேன்(மாட்டினிங்களா). ஹா ஹா ஹா. // கூட்டிட்டு வாங்க.அப்படியே நீங்களும் சைவ உணவுகளை சமைப்பதில் வல்லவர்ன்னு சொல்லி ரூட்டை மாத்திடவேண்டியதுதான்.நன்றி சகோ!!
சென்னையில் எங்க கிடைக்கும்னு தெரியாது.ஆனா வேளாங்கண்ணி போகிற வழியில் வயற்காட்டில் வாத்து கூட்டகூட்டமாக மேய்ந்து பார்த்ததுண்டு.நன்றி சசி!!
வாத்து கறி இது வரை நான் செய்ததே இல்லை குறிப்பிட்டு இருக்கிற முறையும் கிரேவியும் பார்த்தால் மிளகு சிக்கன் மாதிரி இருக்கு.
வடகம் சேர்ப்பதால் அந்த வாசனையோடு நல்லாயிருக்கும்.நன்றி ஜலிலாக்கா!!
Post a Comment