பொதுவாக இந்த பிஸிபேளாபாத் நல்ல குழைவாக தளதளன்னு இருக்கனும்.எனக்கு தயிர் சாதம் மட்டுமே குழைவாக சாப்பிட பிடிக்கும்.செய்பவர்கள் நான் கொடுத்திருக்கும் தண்ணீர் அளவு கூட 2 டம்ளர் அதிகம் வைத்து செய்யவும்.
தே.பொருட்கள்:
அரிசி - 1 1/2 கப்
துவரம் பருப்பு - 1 1/2 கப்
சின்ன வெங்காயம் - 10
நறுக்கிய முருங்கைகாய்,கத்திரி,கேரட்,குடமிளகாய் - 2 கப்
பட்டர் - 3 டேபிள்ஸ்பூன்
புளிகரைசல் - 1 1/2 கப்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெயில் வறுத்து பொடிக்க:
தனியா - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 1 /2 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
செய்முறை :
*குக்கரில் அரிசி+துவரம்பருப்பு+புளிகரைசல்+காய்கள்+வறுத்த பொடி+மஞ்சள்தூள்+உப்பு+6 கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
*வெந்ததும் பட்டரில் தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயத்தை வதக்கி சாதத்தில் கொட்டி மல்லித்தழை தூவி நன்கு கிளறி பறிமாறவும்.
30 பேர் ருசி பார்த்தவர்கள்:
சுவையானது
சூப்பர் டிஷ் மேனகா.எங்க அம்மாவோட நேடிவ் பெங்களூர்.நானும் படிச்சது எல்லாம் அங்க தான்.எங்க பாட்டியோட பிஸி பேளே பாத் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா உங்க முறை கொஞ்சம் வித்யாசமா இருக்கு.கண்டிப்பா செஞ்சு பாக்கறேன்.நன்றி.
nice recipe..we love this..
சூப்பர் சகோதரி என்னோட அம்மா இந்த சாதம் செய்வாங்க.......சாப்பிட சூப்பரா இருக்கும்....அம்மா கையால சூடா சாப்பிடற சுகம் இருக்கே அதுக்காகவே வருஷம் வருஷம் இந்தியா போகனும்......
Nice one ...thanks for sharing...
உங்கள் செய்முறை, ஈசிபேளாபாத் ........ நன்றி.
NIce recipe.. looks yummy..
மேனகா..ரொம்ப சிம்பிளா சொல்லிட்டீங்க.உங்கள் முறையில் செய்து பார்த்து விடுகிறேன்.
செஞ்சு பாக்கறதுக்கு சௌகரியமா இருக்கட்டுமேன்னு காப்பி பண்ணப்பாத்தா உங்க பதிவு என்னமோ ரொம்பத்தான் கிராக்கி பண்ணுதும்மா. அதுகிட்ட என்ன சொல்லி வச்சிருக்கிறீங்க?
மேனகாசத்தியா, அந்த தட்டு சாதத்தையும்,தொட்டுக்க கொஞ்சம் இலைவடாம், அப்பளமும் யாருக்கும் தெரியாம எனக்கு அனுப்பி வச்சுருங்க. இது இரகசியமா இருக்கட்டும். ரொம்ப நல்லாயிருக்கு.
இன்னேரு முறையில் நான் பதிவு போடலாம் என்று இருக்கின்றேன். விரைவில் போடுகின்றேன். நன்றி.
Menaga, looking yummy.
Nalla bisibela baath recipe. Even I love to have it 'thala thala'. Further, the rice have the tendency to tighten up after cooling.
சாம்பார் சாதத்தின் ருசி இருக்கும் என்று நினைக்கிறேன், அப்படித்தானே?
மேனகா,என் பெங்களூர் அக்கா அடிக்கடி செய்வா,அங்கு செய்வது மாதிரி,இது கொஞ்சம் நம்ம ஊர் ஸ்டைல்.
ஈசியான மெதடா இருக்கு மேனகா .
சூப்பர் அக்கா நல்ல சுவையாக இருக்கும் போல, ட்ரை பண்ண வேண்டியதுதான்.
மேனகா உங்கள் பிஸிபேளா பாத் நல்ல இருக்கு, இன்று நானும் பிஸிபேளா பாத் தான் எடிட் செய்து வைத்திருந்தேன்.ஆனால் போஸ்ட் பண்ணல.
மிளகும், குடைமிளகாயும் சேர்த்து இருக்கீஙக். வித்தியாசமா இருக்கு.
ஆனால் காயம் எடிட் செய்த போஸ்ட் படி 400 வது பதிவு.
நன்றி சகோ!!
இந்த முறையில் செய்து பாருங்கள்.ரொம்ப ஈஸியாந்தும் கூட.நன்றி அம்மு!!
நன்றி ஷாமா!!
அம்மா கையால சாப்பிடுவதே தனி சுகம்தான்.நன்றி சகோ!!
//உங்கள் செய்முறை, ஈசிபேளாபாத் ........ நன்றி.//உங்க நகைச்சுவையான கமெண்ட்டுக்கு மிக்க நன்றி சித்ரா!!
நன்றி ஸ்ரீப்ரியா!!
உணவு வகைகளில் பல புதுமைகளை அள்ளி தெளித்து இருக்கீங்க . உங்களின் ஒவ்வொரு பதிவும் அருமை . தொடருங்கள் .
மீண்டும் வருவேன் ....
ரொம்ப ஈசிதான் அக்கா.செய்து பாருங்கள்.நன்றி ஸாதிகா அக்கா!!
என் பதிவுகள் திருடுபோவதால் சில கோட்களை ஆட் செய்துள்ளேன்,அதனால் காப்பி செய்ய்முடியாது தாத்தா.நன்றி தாத்தா!!
உங்களுக்கு அந்த தட்டோட சுருட்டு கறியுடன் பார்சல் செய்தாச்சு.நீங்க கறி சாப்பிட்டதை நான் யாருக்கும் சொல்லமாட்டேன்.இது ரகசியம்.உங்கள் செய்முறையும் போடுங்கள்.நன்றி சுதா அண்ணா!!
நன்றி வானதி!!
நீங்கள் சொல்வது போல் ஆறியதும் சாதம் தளதளப்பாக இருக்காதுதான்.நன்றி சிட்சாட்!!
இதுல படை,கிராம்பு சேர்ப்பாங்க.நான் சேர்க்கவில்லை.அதெல்லாம் சேர்த்து செய்தால் மசாலா மணுத்துடன் கமகமன்னு இருக்கும்.நன்றி ஹூசைனம்மா!!
நன்றி ஆசியாக்கா!!
நன்றி சாரு அக்கா!!
நன்றி சசி!!
குடமிளகாய் சேர்ப்பதால் வாசனையாக நல்லாயிருக்கும்.நன்றி ஜலிலாக்கா!!.உங்கள் 400வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!
சூப்பராக ஈஸியாக இருக்கின்றது பிஸிபேளாபாத்...அருமையாக குறிப்பு..எனக்கு மிகவும் பிடித்தது...கண்டிப்பாக சீக்கிரத்தில் செய்து பார்த்துவிடலாம் என்று நினைக்கும்பொழுது, திரும்பவும் டயட்டிங்க் ஆரம்பித்துவிட்டோம்....
நன்றி சங்கர்!!
மீண்டும் டயட் ஆரம்பித்துவிட்டீர்களா,அப்போ நிறைய குறிப்புகளை எதிர்ப்பார்கலாம்.நன்றி கீதா!!
எனக்கு ரொம்பவும் பிடித்தமான சாம்பார் சாதம். ரொம்ப சிம்பிளா சொல்லியிருக்கீங்க. இந்த சாதம் சுட சுட இறக்கி வைத்து நெய் சேர்த்து சாப்பிட தேவாமிர்தமாய் இருக்கும்.
ஒரு லீவ் நாளில் உங்க முறையிலும் செய்து பார்த்திட்றேன்
சூப்பர் டிஷ் மேனகா...ரொம்ப சிம்பிளா இருக்கு.நன்றி.
செய்து பார்த்து சொல்லுங்கள்.நன்றி கீதா!!
நன்றி கினோ!!
மேனகா...
ஃபோட்டோவை பார்த்ததும் நான் சொல்ல நினைத்ததை, நீங்கள் பதிவின் ஆரம்பத்தில் சொல்லி விட்டீர்கள்... அதான் :
//பொதுவாக இந்த பிஸிபேளாபாத் நல்ல குழைவாக தளதளன்னு இருக்கனும்//
எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு ஐட்டம் இந்த பிஸிபேளாபாத்....
நன்றி கோபி!!
Post a Comment