Wednesday, 15 September 2010 | By: Menaga Sathia

ப்ரெட் / Bread

தே.பொருட்கள்:
ஆல் பர்பஸ் மாவு - 2 கப்
சர்க்கரை(அ)தேன் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
ஈஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்
பால் - 1/4 கப்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
நீர் - 1/2 கப்
 
செய்முறை:
*வெதுவெதுப்பான பாலில் ஈஸ்ட் + சர்க்கரை கலந்து 10 நிமிடம் வைத்திருந்தால் பொங்கியிருக்கும்.

*ஒரு பவுலில் மாவு+வெண்ணெய்+உப்பு+ஈஸ்ட் கலவை ஊற்றி ,தேவைப்பட்டால் நீர் தெளித்து கெட்டியாக பிசையவும்.

*ஈரத்துணியால் மூடி வெப்பமான இடத்தில் 1 மனிநேரம் வைக்கவும்.

*2 மடங்காக பொங்கியிருக்கும் மாவை நன்கு கைகளால் 10 நிமிடம் மிருதுவாக பிசையவும்.

*ப்ரெட் பானின் நீளம் அகலத்திற்கேற்ப மாவை RECTANGLE ஷேப்பில் உருட்டி ப்ரெட் பானில் வைத்து ஒரு துணியால் 3/4 மணிநேரம் மூடி வைக்கவும்.மாவு 2 மடங்காக உப்பியிருக்கும்.
*முற்சூடு செய்த அவனில் 200°C க்கு 25-30 நிமிடம் பேக் செய்து ஆறியபின் துண்டுகள் போடவும்.

44 பேர் ருசி பார்த்தவர்கள்:

எல் கே said...

nallaa irukku

புவனேஸ்வரி ராமநாதன் said...

அழகா செய்துருக்கீங்க.

Umm Mymoonah said...

That looks so goods just like a fresh bread from bakery.

Chitra said...

looks so simple and easy....

I will try it out... Thank you for the recipe.

ஸாதிகா said...

ஆஹா..பிரட்டை அழகா செய்து காட்டிட்டிங்க மேனகா.

சாருஸ்ரீராஜ் said...

menaga very nice tempting to eat....

Gayathri said...

thanks for this simple nice recipe..

Suni said...

பார்க்கவே செய்து சாப்பிடணும் போல் இருக்கிறது

Suni said...

பார்க்கவே செய்து சாப்பிடணும் போல் இருக்கிறது
sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

GEETHA ACHAL said...

aahaa....bread superba vanthu iruku..kalakal menaga...

Mahi said...

பர்ஃபெக்ட் ப்ரெட் மேனகா! கலர்,டெஷர் எல்லாமே சூப்பரா இருக்கு!

Pavithra Srihari said...

super perfect menaga ...

Krishnaveni said...

wow bread looks so good, super menaga

Vijiskitchencreations said...

சூப்பரப். அழகா செய்திருக்கிங்க.
மேனகா நானும் எப்பாவது செய்வேன்.
ஆனால் சர்க்கரைக்கு பதில் தேன் சேர்க்கலாம் என்பது நல்ல டிப். என் மகள் அவ ஸ்கூலில் ஈஸ்ட் உபயோகித்து ப்ரெட் செய்ய சொல்லி அவளும் இதே போல் செய்து எடுத்து காட்டினாள் இதே போல் சூப்பரா இருந்தது. என் மகளிடம் காட்டினே. மம்மி ஆண்டி சூப்பரா செய்திருக்காங்க. நல்லா இருக்கு என்று ஸ்பெஷல்லா சொல்ல சொன்னா மேனகா.

San said...

Incredible bread loaf .

Kanchana Radhakrishnan said...

looks so simple and easy.

தெய்வசுகந்தி said...

வாவ் சூப்பரா இருக்குது மேனகா!!

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

Wow... super ma.. will try for sure. Saved it in favorites. :-))

சசிகுமார் said...

நல்லா இருக்கு அக்கா நன்றி

இமா க்றிஸ் said...

பதமாக எடுத்து இருக்கிறீர்கள்.

Jaleela Kamal said...

ரொம்ப அருமை மேனகா/

சூப்பரான ஸ்லைஸ்

ஹுஸைனம்மா said...

ரொம்ப ஈஸியா இருக்குது பிரட் செய்முறை. இதை மைக்ரோ ஓவனில் செய்வது எப்படி என்று சொல்லமுடியுமா மேனகா? என்ன செட்டிங்ஸ், எவ்வளவு நேரம் என்று..

என்னிடம் வேறு ஓவன் இல்லை. அதனால்தான்..

அப்புறம், ஆல் பர்பஸ் ஃப்ளோர் என்பது மைதாதானே?

Anonymous said...

சூப்பர் மேனகா ஜி ..

Niloufer Riyaz said...

Perfect bread!! looks gorgeous!!!

Unknown said...

கடையில் கிடைக்கும் பிரெட் போல் ரொம்ப நல்ல செய்து இருக்கிங்க மேனகா

அமுதா கிருஷ்ணா said...

is it possible to make bread in microwave oven??
tell the mode..

Menaga Sathia said...

நன்றி எல்கே!!

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி ஆயிஷா!!

நன்றி சித்ரா!! செய்து பார்த்து சொல்லுங்கள்....

Menaga Sathia said...

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி சாருக்கா!!

நன்றி காயத்ரி!!

நன்றி சுனிதா!!

Menaga Sathia said...

நன்றி கீதா!!

நன்றி மகி!!

நன்றி பவித்ரா!!

நன்றி கிருஷ்ணவேணி!!

Menaga Sathia said...

நன்றி விஜி!! உங்கள் மகளுக்கும் அன்பும்,ஸ்பெஷல் நன்றிகளும்..ரொம்ப சந்தோஷமா இருக்கு,ஏன்னா இந்த ப்ரெட்டை முதல் முறையாக இப்பதான் செய்தேன்...

நன்றி சான்!!

நன்றி காஞ்சனா!!

நன்றி தெய்வசுகந்தி!!

Menaga Sathia said...

நன்றி ஆனந்தி!! செய்து பார்த்து சொல்லுங்கள்....

நன்றி சசி!!

நன்றி இமா!!

நன்றி ஜலிலாக்கா!!

Menaga Sathia said...

நன்றி ஹூசைனம்மா!!//அப்புறம், ஆல் பர்பஸ் ஃப்ளோர் என்பது மைதாதானே?// ஆமாம் மைதாதான்.அந்த கவரிலேயே எல்லா வகைக்கும் உபயோகபடுத்தலாம்ன்னு இருக்கும்.அதான் ஆல் பர்பஸ் மாவு என்று போட்டுள்ளேன்..

எனக்கு மைக்ரோ அவன் பற்றி தெரியாதுப்பா..உங்க மைக்ரோவேவ் அவன் கன்வெக்‌ஷனல் அவன் என்றால் தாராளமாக பேக்கிங் செய்யலாம்.உங்க அவனின் கைடு பாருங்களேன்..அதுல பேக்கிங் ஐயிட்டம்ஸ்லாம் பற்றி போட்டிருப்பாங்களே..என் மைக்ரோவேவ் அவன் உணவு பதார்த்தங்களை சூடு செய்வது மட்டும்..அதில் நான் சமைக்கவோ,பேக்கிங்கோ செய்ததில்லை..

Menaga Sathia said...

நன்றி சந்தியா!!

நன்றி நிலோபர்!!

நன்றி சிநேகிதி!!

நன்றி அமுதா கிருஷ்ணா!!உங்க மைக்ரோவேவ் அவன் கன்வெக்‌ஷனல் அவன் என்றால் தாராளமாக பேக்கிங் செய்யலாம்.உங்க அவனின் கைடு பாருங்களேன்..அதுல பேக்கிங் ஐயிட்டம்ஸ்லாம் பற்றி போட்டிருப்பாங்களே..என் மைக்ரோவேவ் அவன் உணவு பதார்த்தங்களை சூடு செய்வது மட்டும் தான்..அதில் நான் சமைக்கவோ,பேக்கிங்கோ செய்ததில்லை..
அதனால் எனக்கு அது பத்தி தெரியவில்லை...

Asiya Omar said...

சூப்பர் ,மேனு வீட்டிலேயே ப்ரெட்டா?பாராட்டுக்கள்.ஈசியாக இருக்கு.செய்து பார்க்க தூண்டுகிறது படங்கள்.

Priya Suresh said...

Wowww fresh bread looks very prefect, azhaga irruku Menaga..rendu slices yedukalam pola irruku..

இமா க்றிஸ் said...

ஹுசேன், ப்ரெட் டெக்க்ஷர் மைக்ரோவேவ்ல வராது. சரி வராது, விஷப்பரீட்சை வேணாம்.

கேக் கூட அவன்ல போடற மாதிரி வராது. ஆனா சூடாகச் சாப்பிட நல்லா இருக்கும். இது அப்பிடி இல்ல.

இமா க்றிஸ் said...

கன்வெக்க்ஷனல் அவன் என்றால் சரி வரும்.

vanathy said...

super bread! I should try this one very soon.

Unknown said...

Bread looks soso perfect bookmarked it

ஹுஸைனம்மா said...

இமா, நன்றி. என்னிடம் இருப்பது கன்வெக்ஷன் ஓவன்தான். நான் கேக், பீட்ஸா செய்வதுண்டு இதில்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Wow...so fresh and good... thanks for sharing the recipe

Unknown said...

அன்பு மேனகா , வணக்கம் நான் உங்களிடம் பேசுவது இதுவே முதல் முறை .உங்க கணவர் ,ஷிவானி , நீங்க எல்லோரும் நலமா?உங்களுடைய ப்ரெட் ரெசிபி செய்தேன் .நன்றாக இருந்தது .மாவு மட்டும் கொஞ்சம் உப்பவே இல்லை .மாவிற்கு தேவையான வெது வெதுப்பு பத்தவில்லை என நினைக்கிறேன் . அடுத்த முறை இன்னும் நன்றாக செய்வேன் என நினைக்கிறேன் .நானும் என் கணவரும் சந்தோஷமாக சாப்பிட்டோம் .உங்களுடைய வலை பகுதியில் அனைத்தும் நன்றாக இருக்கிறது.உங்களுக்கும் , உங்களுடைய குறிப்பிற்கும்,என்னுடைய மனமார்ந்த நன்றியும் ,வாழ்த்துக்களும்.
அன்புடன்
மலர்.

Menaga Sathia said...

தோழி மலருக்கு வணக்கம்,எப்படி இருக்கீங்க..எனக்கும் உங்களுடன் பேசுவதில் மிக்க சந்தோஷம்..நாங்கள் அனைவரும் நலம்.நீங்களும் உங்க குடும்பத்தாரும் நலமா??தண்ணீர் வெதுவெதுப்பா இருக்கனும்.ஈஸ்ட் கலந்து பின் 5 நிமிடத்தில் நல்லா பொங்கியிருக்கும்.அந்த பதம்தான் சரியானது..இருந்தாலும் செய்து பார்த்து நன்றாக வந்து தெரிவித்தமைக்கு நன்றிகள் பல..அடுத்தமுறை நான் செய்ததை விட இன்னும் உங்களுக்கு அழகா வரும்.மிக்க நன்றி மலர்!!

சாந்தி மாரியப்பன் said...

பார்க்கவும் செய்யவும் ரொம்ப அழகான ரெசிப்பி..

01 09 10