Monday, 6 December 2010 | By: Menaga Sathia

தோல்(கறுப்பு)உளுந்து வடை/Black Urad Dhal Vadai

தே.பொருட்கள்
தோல்(கருப்பு)உளுந்து - 1 கப்
வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை,கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சி - 1 சிறுதுண்டு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை
*உளுந்தை 2 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிக்கட்டவும்.
*உளுந்தை தோலுடனே அதனுடன் உப்பு+இஞ்சி+சோம்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
*வெங்காயம்+கறிவேப்பிலை,கொத்தமல்லியை பொடியாக நறுக்கி அரைத்த மாவில் கலந்து வடைகளாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
*தோலுடனே அரைப்பதால் வடை நல்ல வாசனையாகவும்,சுவையாகவும் இருக்கும்.

24 பேர் ருசி பார்த்தவர்கள்:

Krishnaveni said...

wow, that's great idea, vadai looks so good

எல் கே said...

கருப்பு உளுந்து உபயோகிச்சது இல்லை...

Gayathri Kumar said...

Never tried this. Looks so nice!

Kurinji said...

very good idea Menaga, will try this soon...

சசிகுமார் said...

எப்பவும் போல அருமை. அக்கா தங்களுக்கான சரியான டெம்ப்ளேட் என்னால் தேர்வு செய்ய முடியவில்லை தாங்கள் ஏதாவது உங்களுக்கு பிடித்த வகையில் டெம்ப்ளேட் தேர்வு செய்து அந்த URL எனக்கு அனுப்பினால் நான் மாற்றி தருகிறேன்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமையாயிருக்கு.

Asiya Omar said...

கருப்பு உளுந்தை சும்மா வறுத்து ஊறவைத்து அவித்து சாப்பிட்டாலே ருசி,அதனை வடைன்னால் கேட்கவும் வேண்டுமா?

ஸாதிகா said...

கருப்பு உள்ந்து மிகவும் சத்து,சுவையானது என்று சொல்லுவார்கள்.

Vijiskitchencreations said...

super vadai. My mom will make the same way. I like it. I did't try .I will try soon.

vanathy said...

looking yummy!

Padhu Sankar said...

Very healthy and full of fiber

Priya Suresh said...

Super crispy vadai, pasikuthu paathathum..

PriyaRaj said...

nalla idea..never tried in karupu ullunthu..

Unknown said...

wow,by looking by pics they are tasting very good but i can't understand Tamil language .If u can write in English . please try it.

Mahi said...

வித்யாசமா இருக்கு மேனகா! நான் கருப்பு உளுந்து வாங்கிப் பலகாலமாச்சு.:)

Thenammai Lakshmanan said...

ஆஞ்சனேயர் கோயில் வடை போல இருக்கும்னு நினைக்கிறேன்.. ஆனா அதில் வெங்காயம் போடமாட்டாங்க.. ரொம்ப சத்து இது..மேனகா ..:))

மாதேவி said...

இப்பொழுதெல்லாம் வெள்ளை உழுந்து வந்தபின் கறுப்பின் பாவனை குறைந்துவிட்டது.

நல்ல வடை ஸாதிகா.

சிநேகிதன் அக்பர் said...

சுவை அருமை. சமையலில் விதவிதமாக செய்து அசத்துகிறீர்கள்.

Kanchana Radhakrishnan said...

அருமையாயிருக்கு.

Kanchana Radhakrishnan said...

healthy dish.

ஷஹி said...

hi..sashiga..luv all ur rcps..tried many of them..planning to print them al and file them up..keep going, cngrats..

ராமலக்ஷ்மி said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்:)!

குறிப்பு அருமை. தோலுடன் தோசைதான் செய்துள்ளேன். கண்டிப்பாய் செய்து பார்க்கிறேன். நன்றி மேனகா!

Sorna said...

Hello sashiga ur using whole urad or splitted urad..

Menaga Sathia said...

சொர்ணலஷ்மி

இதில் நான் பயன்படுத்தியிருப்பது உடைத்த தோல் உளுந்து..முழு அல்லது உடைத்த தோல் இவ்விரண்டும் பயன்படுத்தலாம்.

01 09 10